Karthigai Deepam: நடிகையை இறக்கிய சிவனாண்டி.. லெட்டரை மாற்றிய கார்த்திக் - கார்த்திகை தீபத்தில் இன்று
கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி, சிவனாண்டி என இருவரும் ஆளுக்கு ஒரு பக்கமாக பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
நடிகைக்காக காத்து கிடக்கும் ஊர்:
அதாவது சாமுண்டீஸ்வரி பரபரப்பான படத்தை திரையிட, முத்துவேல் மற்றும் சிவனாண்டி என இருவரும் கூட்டு சேர்ந்து தமிழ் தெரியாத ஒரு நடிகையை இறக்கி ஓட்டு சேகரிக்க முடிவெடுக்கின்றனர். இதற்காக ஒரு நடிகையை ஏற்பாடும் செய்ய நடிகை வரும் விஷயம் அறிந்து மொத்த ஊரும் அவரை பார்ப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறது.
லெட்டரை மாற்றிய கார்த்திக்:
கார்த்திக் தமிழ் தெரியாத நடிகை என்பதால் இதை சாதகமாக பயன்படுத்தி மயில்வாகனத்தை வைத்தே அந்த நடிகை படிக்க இருந்த லெட்டரை மாற்றி வைக்கிறான். பிறகு இந்த நடிகை அந்த லெட்டரில் இருப்பதை அப்படியே படிக்க அதில் சாமுண்டீஸ்வரியை பாராட்டியும் சிவனாண்டியை விமர்சித்தபடியும் இருக்கிறது.
பிறகு சாமுண்டீஸ்வரி பரமேஸ்வரி பாட்டி ஊருக்கு வர பாட்டி அவளை சாப்பிட வீட்டுக்கு கூப்பிட, சாமுண்டீஸ்வரி முடியாது என மறுக்க ஊர்க்காரர்கள் போயிட்டு சாப்பிடுங்க என்று சொல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? சாமுண்டீஸ்வரி எடுக்க போகும் முடிவு என்ன என்பது இன்றைய எபிசோடில் காணலாம்.




















