63 வயது நடிகரை காதலிக்கும் 37 வயது நடிகை.. யார் என்று தெரிகிறதா?.. இணையத்தை கலக்கும் புகைப்படம்
37 வயதான நடிகை அனா டி அர்மாஸ் 63 வயது நடிகருடன் டேட்டிங் செய்யும் புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஹாலிவுட் திரையுலகில் நடிகர்கள், நடிகைகள் பிடித்த நபர்களுடன் டேட்டிங் செல்வது மற்றும் காதலிப்பது சர்வ சாதாரணமாகவே பார்க்கப்படுகிறது. திருமண உறவில் இருந்தாலும் குறைந்த காலமே நீடித்து இருப்பது போன்ற பந்தத்தில் இருக்கின்றனர். இந்நிலையில், ஹாலிவுட்டை கலக்கி இளம் நடிகை அனா டி அர்மாஸ் தன்னை விட 30 வயது அதிகமான நடிகரை காதலித்து வருவதுதான் ஹாட் டாபிக்காக மாறியிருக்கிறது. அதுவும் சாதாரண லவ் இல்லங்க வயதை தாண்டிய அன்பால் இருவரும் இணைந்திருக்கின்றனர்.
அனா டி அர்மாஸ் தனக்கென்ற ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். இவருக்கு தற்போது 37 வயது ஆகிறது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பல்லேரினா படத்தில் ஆக்சனில் மிரட்டியிருந்தார். பெண் சிங்கம் என்றே அனைவரும் அனா டி அர்மாஸை போற்ற தொடங்கியுள்ளனர். உருக உருக காதலிக்கும் படமாக இருந்தாலும் சரி, ஆக்சனாக இருந்தாலும் தனது நடிப்பால் மிரட்டி எடுக்கிறார். சினிமாவில் பிஸியாக இருக்கும் அனா டி அர்மாஸ் தற்போது பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸை காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
63 வயதாகும் டாம் குரூஸுடன் டேட்டிங்கில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகமே கண்டு வியக்கும் அளவிற்கு ஸ்டண்ட் காட்சிகளில் பின்னி பெடலடுப்பார். படத்திற்காக எந்த சாகசத்தையும் செய்யும் தன்னம்பிக்கை கொண்டவராக திகழ்கிறார் டாம் குரூஸ். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மிஷன் இம்பாஸிபிள்- தி பைனல் ரெக்கானிங் திரைப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சியின் மூலம் கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளார் டாம் குரூஸ்.
தற்போது டாம் குரூஸும், அனாவும் ஒன்றாக சுற்றும் புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுற்றுலா சென்ற இடத்தில் இருவரும் ஒன்றாக வலம் வருகின்றனர். இருவரும் கைகோர்த்து செல்லும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் காதலுக்கு வயது முக்கியம் இல்லை. தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.





















