பிரபல நடிகையின் கன்னத்தில் அறைந்த நாகர்ஜூனா.. கன்னத்தில் பதிந்த கைரேகை.. விஜய் பட நடிகை பகிர்ந்த தகவல்
தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா பிரபல நடிகையின் கன்னத்தில் அறைந்த சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது.

தெலுங்கு திரையுலகின் மன்மதன் என அழைக்கப்படுபவர் நாகர்ஜூனா. இவரது சிரிப்பை ரசிக்கவே ரசிகைகள் ஏராளம் பேர் உள்ளனர். அவரது மகன்கள் நாக சைதன்யா, அகில் அக்கினேனி ஆகிய இருவரும் சினிமாவில் ஹீரோவாக கலக்கி வந்தாலும், நாகர்ஜூனாவிற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். தெலுங்கு சூப்பர் ஸ்டாராகவும் திகழ்கிறார். வயது ஆனாலும் அழகு குறையாத சிரிப்பழகன் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான குபேரா திரைப்படம் வசூல் ரீதீயாக நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதைத்தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து கூலி படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் இவர் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. தெலுங்கில் ஹீரோவாக நடித்து வந்த நாகர்ஜூனா தமிழில் முதல் முறையாக வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், நாகர்ஜூனா பிரபல நடிகையின் கன்னத்தில் 14 முறை அறைந்திருப்பதாக வெளியான தகவலை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகை இஷா கோபிகர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெலுங்கு படத்தில் நாகர்ஜூனாவுடன் இணைந்து நடித்த அனுபவத்தை பகிர்ந்திருந்தார். அதில், தெலுங்கில் அது எனக்கு இரண்டாவது படம். எப்போதும் எனக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. நான் நடிக்கும் காட்சிகள் மிகவும் எதார்த்தமாக பார்க்கும் போது மக்கள் நம்பும்படி இருக்க வேண்டும் என விரும்புவேன். ஒருநாள் படப்பிடிப்பின்போது நாகார்ஜுனா என்னை கன்னத்தில் அறையும் காட்சி படமாக்கப்பட்டது. அவர் என்னை அறைந்ததை உணர முடியவில்லை. இதனால் மீண்டும் என்னை அறையும் படி கேட்டுக்கொண்டேன்.
ஆனால், நாகர்ஜூனா முடியாது என மறுத்துவிட்டார். நடிப்புக்காக அவரை எனது கன்னத்தில் அறைய வற்புறுத்தினேன். கடமைக்காக அறைவது போல் மெல்லமாக அறைந்தார். அந்தக் காட்சி ரொம்ப எமோஷனல் ஆனது. சரியாக வரவில்லை. இதனால், இயக்குநர் வம்சி நாகர்ஜூனாவிடம் என்னை நிஜமாகவே அறைய சொன்னார். அந்த மாதிரி அவர் என்னை 14 முறை கன்னத்தில் அறைந்தார். அந்தக் காட்சி முடியும் போது நாகர்ஜூனாவின் கைரேகை எனது கன்னத்தில் ஆழமாக பதிந்து விட்டது. இதைப் பார்த்த நாகர்ஜூனா என்னிடம் மன்னிப்பு கேட்டார். நான் தானே அறைய சொன்னேன். நடிப்புக்காகத்தானே அறைந்தீர்கள். எதற்கு மன்னிப்பு என்று சொன்னேன். ஆனால், அந்த நிகழ்வு கன்னத்தில் அறையும் மாரத்தான் நடந்தது போலவே உணர்ந்தேன் என இஷா கோபிகர் தெரிவித்துள்ளார்.
இஷா கோபிகர் தமிழில் நெஞ்சினிலே படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து பிரசாந்த், அரவிந்த் சாமி ஆகியோரின் படங்களிலும் நடித்து பிரபலம் அடைந்திருக்கிறார். மனசே மனசே குழப்பம் என்ன பாடல் 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த பாடலாகவும், பிடித்த நடிகையாகவும் இஷா கோபிகர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




















