பிரபல ராப் பாடகர் மீது பாலியல் புகார்.. பலமுறை இளம்பெண்ணுடன் உடலுறவு.. மெளனம் காக்கும் வேடன்!
கேரளாவை சேர்ந்த பிரபல ராப் பாடகர் வேடன் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூரில் பிறந்த வேடனின் தாயார், இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தந்தை கேரளாவைச் சேர்ந்தவர். வேடனின் இயற்பெயர் ஹிரந்தாஸ் முரளி. தமிழ் மற்றும் மலையாள மொழிகளை இணைத்து பாடும் ராப் பாடல்கள் ஓடுக்கப்பட்ட மக்களின் குரலாக கொண்டாடப்படுகிறது. இந்த சிறு வயதில் அரசியல் தெளிவும், மக்களின் கண்ணீரை வரிகளாக வடித்து பாடி வருகிறார் வேடன்.
கடந்த 2020-ம் ஆண்டு வேடன் வெளியிட்ட வாய்ஸ் ஆப் தி வாய்ஸ்லெஸ் ஆல்பம் பெரிய அளவில் பேசப்பட்டது. கடந்தாண்டு வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் மூலம் உலகெங்கும் பிரபலமடைந்தார். கேரள ரசிகர்கள் பலரும் வேடனை போன்று உடை அணிந்து அவரது உடல்மொழியை பாடும் அளவிற்கு பிரபலமடைந்திருக்கிறார். சமூகவலைதளங்களில் வேடனின் குரல் ஒலிக்காத நாளே விடியாது என்ற அளவிற்கு ஆகிவிட்டது.
இந்நிலையில், இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் புதிய படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக வேடன் அறிமுகம் ஆகிறார். இப்படத்தில் பரத், ஆரி அர்ஜூனன், அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், இளம்பெண் மருத்துவர் ஒருவர் வேடன் மீது அளித்திருக்கும் புகார் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகாரில் வேடன் என்கின்ற ஹிரந்தாஸ் முரளி தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக அந்த இளம் மருத்துவர் தெரிவித்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை சுமார் இரண்டு ஆண்டுகளாக, பல இடங்களுக்கு அழைத்துச் சென்று தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் எர்ணாகுளம் திர்க்ககரா போலீசார் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 376இன் கீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆனால், தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக வேடன் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை. மெளனம் காத்து வருகிறார். போலீசாரும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு வேடன் போதை பொருள் வழக்கில் கைதாகி விடுதலையானது குறிப்பிடத்தக்கது.





















