![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
BJP : 20 பாஜக எம்எல்ஏக்களுக்கு எதிராக தீவிர குற்ற வழக்குகள்...கோடீஸ்வரர்களாக இருக்கும் 80 சதவிகித எம்எல்ஏக்கள்...!
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்எல்ஏக்களுக்கு எதிரான குற்ற வழக்குகள், சொத்து விவரங்கள் மற்றும் பிற தகவல்கள் அடங்கிய அறிக்கையை அசோசியேஷன் பார் டெமாக்ரடிக் ரீபார்ம்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.
![BJP : 20 பாஜக எம்எல்ஏக்களுக்கு எதிராக தீவிர குற்ற வழக்குகள்...கோடீஸ்வரர்களாக இருக்கும் 80 சதவிகித எம்எல்ஏக்கள்...! Gujarat assembly 16 percent of New Gujarat MLAs Face Serious Cases 151 Of Them Crorepati BJP : 20 பாஜக எம்எல்ஏக்களுக்கு எதிராக தீவிர குற்ற வழக்குகள்...கோடீஸ்வரர்களாக இருக்கும் 80 சதவிகித எம்எல்ஏக்கள்...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/14/7793cb5781ee3e0e186af027be137a5d1670998524263224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பெரும் எதிர்பார்ப்புடன் நடந்து முடிந்துள்ள குஜராத் தேர்தலில் தொடர்ந்து 7ஆவது முறையாக வென்று பாஜக ஆட்சி அமைத்துள்ளது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 156 இடங்களில் பாஜக வெற்றிபெற்றுள்ளது. 17 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது.
இந்நிலையில், புதிய சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எதிரான குற்ற வழக்குகள், சொத்து விவரங்கள் மற்றும் பிற தகவல்கள் அடங்கிய அறிக்கையை அசோசியேஷன் பார் டெமாக்ரடிக் ரீபார்ம்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, சட்டப்பேரவையில் 22 சதவீத எம்.எல்.ஏ.க்கள் அதாவது 40 பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த சட்டப்பேரவையில் 47 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் உள்ளன.
குறிப்பாக, 40 எம்எல்ஏக்களில் குறைந்தது 29 பேர் தங்கள் மீது கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஜாமீனில் வெளிவர முடியாதவை, அதிகபட்சமாக ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டு தண்டனை விதிக்கப்படும் குற்றங்கள், தாக்குதல், கொலை, கடத்தல், பாலியல் வன்கொடுமை ஆகிய கடுமையாக குற்ற வழக்குகளாக கருதப்படுகின்றன.
மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எதிராக கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 இன் கீழ் ஒரு எம்எல்ஏவுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
According to ADR in Gujarat, out of the 182 new MLAs, 40 (22%) have declared criminal cases against themselves. 26 (17%) out of 156 MLAs from the BJP, 9 (53%) out of 17 MLAs from the INC, & 2 (40%) out of 5 MLAs from the AAP, 2(68%) have declared criminal cases against themselves
— Ashok Upadhyay (@ashoupadhyay) December 11, 2022
பாஜக சார்பில் வெற்றி பெற்ற 156 எம்எல்ஏக்களில் 26 பேரும், காங்கிரஸின் வெற்றி பெற்ற 17 எம்எல்ஏக்களில் 9 பேரும் தங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 156 பாஜக எம்எல்ஏக்களில் 20 பேரும், காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற 17 எம்எல்ஏக்களில் நான்கு பேரும் தங்களுக்கு எதிராக கடுமையான கிரிமினல் குற்றங்கள் இருப்பதாக அறிவித்துள்ளனர்.
2017ஐ விட இந்த முறை, இந்த முறை கோடீஸ்வர எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகம். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 182 எம்எல்ஏக்களில் 151 பேர் கோட்டீல்வரர்கள் ஆவர்.
ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்புள்ளதாக மூன்று சுயேச்சைகளும் சமாஜ்வாதி கட்சியின் ஒரே எம்எல்ஏவுமான காந்தல்பாய் ஜடேஜா அறிவித்துள்ளனர்.
காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வில் இருந்து வெற்றி பெற்ற எம்எல்ஏக்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் 'கோடீஸ்வரர்கள்'. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 17 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 14 பேரும், பாஜக வெற்றி பெற்ற 156 பேரில் 132 பேரும் ₹1 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக அறிவித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)