Ceasefire Violation: வெடித்து சிதறிய குண்டுகள்.. இருளில் மூழ்கிய காஷ்மீர்.. நிம்மதியை தொலைத்த மக்கள்
பாகிஸ்தானுடன் போர் நிறுத்தத்தை அறிவித்திருந்த நிலையில் மீண்டும் காஷ்மீரில் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

காஷ்மீரின் பகல்ஹாமில் கடந்த 22ம் தேதி நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானும் இந்தியா மீது தாக்குதல் நடத்த இந்தியா தனது முப்படைகளையும் கொண்டு பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது.
காஷ்மீரில் மீண்டும் ட்ரோன் அட்டாக்:
இந்த நிலையில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இரு நாடுகளையும் சமரசம் செய்ய பேச்சுவார்த்தை நடத்த பல கட்ட நடவடிக்கைகள் எடுத்த பிறகு, இன்று இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் தெரிவித்தனர். இதையடுத்து, மாலை 5 மணி முதல் இந்தியா தனது வான்படை, தரைப்படை, கடற்படை தாக்குதல்களை நிறுத்தியது.
This is no ceasefire. The air defence units in the middle of Srinagar just opened up. pic.twitter.com/HjRh2V3iNW
— Omar Abdullah (@OmarAbdullah) May 10, 2025
இந்தியா - பாகிஸ்தான் இடையே நாளை மறுநாள் பேச்சுவார்த்தை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த சண்டைக்கு நிரந்தர முடிவு வர உள்ளதாக மக்கள் நிம்மதி அடைந்தனர். மக்கள் நிம்மதி அடைந்த சில மணி நேரங்களிலே ஒப்பந்தத்தை மீறும் வகையில் காஷ்மீர் மீது ட்ரோன்கள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இருளில் மூழ்கிய காஷ்மீர்:
காஷ்மீரின் ஸ்ரீநகரில் பல இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு ஸ்ரீநகர், உத்தம்பூர் உள்ளிட்ட பல இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் காஷ்மீரின் பல இடங்கள் இருளில் மூழ்கியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக காஷ்மீரின் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். போர் நிறுத்தம் இல்லை. ஸ்ரீநகரின் நடுவில் உள்ள வான் பாதுகாப்பு பிரிவுகள் தற்போதுதான் திறக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் என்ன நடக்கிறது? ஸ்ரீநகரில் குண்டுகள் வெடித்துள்ளது.
மக்கள் தவிப்பு:
ட்ரோன் தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் என்றே கூறப்படுகிறது. சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்த சில மணி நேரங்களிலே பாகிஸ்தான் ஒப்பந்தத்தை மீறியது இந்தியாவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாகிஸ்தானில் இருந்து வந்த ட்ரோன்களை இந்தியா வான்வழியிலே தாக்கி அழித்தது.
இருப்பினும் ஸ்ரீநகரில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சண்டை முடிவுக்கு வருகிறது என்று நிம்மதி பெருமூச்சு விட்ட மக்கள் இந்த சண்டையால் மீண்டும் நிம்மதியை இழந்துள்ளனர். பாதுகாப்பு காரணங்களாக ராஜஸ்தான், பஞ்சாப் எல்லையிலும் மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது.
பதிலடி தருமா இந்தியா?
அதேசமயம், ஒப்பந்தத்தை மீறி நடத்தப்பட்ட இந்த ட்ரோன் தாக்குதலுக்கும், ஸ்ரீநகரில் நடந்த குண்டுவெடிப்புக்கும் இந்தியா தக்க பதிலடி தரப்படும் என்றே கருதப்படுகிறது.





















