மேலும் அறிய
Advertisement
Gandhi Jayanti 2023: "தவறுகளை ஒப்புக்கொள்ள மறுப்பதே பெரிய அவமானம்" - தவிர்க்க முடியாத மகாத்மாவின் பொன்மொழிகள்
Gandhi Jayanti 2023: மகாத்மா காந்தியின் 154 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் தேச தந்தை என்று போற்றப்படும் மகாத்மாக காந்தியின் பிறந்த நாள் ஒவ்வொர் ஆண்டும் அக்டோபர் 2-ம் தேதி கொண்டாடப்படும். வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவராக கருதப்படுபவரின் சிந்தனைகள், அவர் வாழ்வியல் அனுபவங்கள், எளிமையான வாழ்வியல் முறை இன்றளவும் நல்ல பாடமாக உள்ளது.
காந்தி முதல் மாகாத்மா வரை
- மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி குஜராத் பகுதியின் போர்பந்தரில் அக்டோபர் 02, 1869 அன்று பிறந்தார்.
- காந்தி அவரது 20-வது வயதில் பகவத்கீதை வாசித்தார். அவரின் மனதை ஈர்த்த புத்தகங்களில் முதன்மையானது பகவத்கீதை.
- அகிம்சை, எளிமையான வாழ்க்கை, ஒழுக்கம், நேர்மை ஆகிய நல் அறங்கள் காந்தியின் சிறுவயதில் இருந்தே தீவிரமாக கடைப்பிடித்து வந்திருக்கிறார்.
- 1893-ல் தென்னாப்பிரிக்காவுக்குப் பயணப்பட்ட காந்தி, ரயில் பயணத்தில் நிறம் காரணமாக அவனமானப்படுத்தப்பட்டார். பிறகு, தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடினார்.
- நாட்டில் விவசாயிகள் நலன், அநீதிக்கு எதிராக பல அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றார்.
- குஜராத்தி மொழியில் ‘நவஜீவன்’ ஆங்கில மொழியில் ‘யங் இந்தியா’ ஆகிய பத்திரிகைகளுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.
- ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியா சுதந்திரம் அடைய அகிம்சை வழியில் பல்வேறு போராட்டங்களை நடத்தியது அந்தக் காலத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
- வழக்கறிஞராக தன் வாழ்வை தொடங்கியவர் நாட்டு மக்களின் துன்பங்கள், அவர்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து தன் வாழ்க்கையை மக்களின் நலனுக்கான, உரிமைக்கான போராட்டங்களுக்கு அர்ப்பணித்தார்.
- கோபல கிருஷ்ண கோகலே காந்தியின் அரசியல் ஆசானாக கருதப்படுகிறார்.
- நாட்டின் சுதந்திரத்திற்கும், மக்களின் நலவாழ்வுக்கும் காந்தியின் அயராத பங்களிப்பினைப் போற்றும்விதமாக அவருக்கு ‘மகாத்மா’ என்ற பட்டத்தை ரவீந்திரநாத் தாகூர் வழங்கினார்.
- சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸ் மகாத்மா காந்தியை ‘ தேசத் தந்தை’ என சுட்டி அழைத்தார்.
- காந்தி ஹிட்லருக்கு எழுதிய கடித்தங்களில் அவரை ‘ அன்பு நண்பருக்கு...’ என்று குறிப்பிட்டு அழைத்தார்.
- காந்தி தன் வாழ்நாளில் 40 ஆண்டுகளாக நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 18 கி.மீ. தூரம் நடந்தார்.
- 2007-ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபை, காந்தியின் பிறந்தநாளை 'அகிம்சைக்கான சர்வதேச தினம்' என அறிவித்தது.
மாகாத்மா காந்தி பொன்மொழிகள்
- நேரான பாதையிலிருந்து விலகியவன் ஒருபோதும் தன் இலக்கை அடையமாட்டான்.
- எல்லா நீதிமன்றங்களையும் விட மேலானது மனசாட்சி!
- ஒரு நாட்டின் கலாச்சாரம் அங்கு வாழும் மக்களின் மனங்களில் இருக்கிறது.
- ஏதோ ஒன்றை அடைவதில் திருப்தி இல்லை; அதற்கான முயற்சிகளே ஒருவரை திருப்தியடையச் செய்யும். ஒரு செயலின் வெற்றி அதற்கான முயற்சிகளிலேயே உள்ளது.
- தவறுகளை ஒப்புக்கொள்ள மறுப்பதே பெரிய அவமானம்.
- இந்த உலகில் நீ மாற்றத்தை காண வேண்டுமானால், உன்னிலிருந்து தொடங்கு!
- மற்றவர்களை கெட்டவர்கள் என்று செல்வதன் மூலம் நான் நல்லவர்களாகிவிட முடியாது.
- துக்கமும் தூக்கமும் எப்போது குறையுமோ அப்போது அவன் மேதையாகிறான்.
- பிறர் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ அதுபோலவே நீ மாறு..
- குறிக்கோளை அடையும் முயற்சிதான் மகத்துவமானது அந்த குறிக்கோளை அடைவதில் இல்லை..
- பொறுமையும் விடாமுயற்சியுடனும் சிரமங்களை வென்றுவிடலாம்.
- என் வாழ்க்கை என் அறிவுரை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
தமிழ்நாடு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion