மேலும் அறிய

பள்ளி மாணவர்களே.. காலாண்டு, அரையாண்டுத் தேர்வு தேதி அறிவிப்பு - லீவு எப்போது?

தமிழ்நாட்டில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வுக்கு முன்பு அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக காலாண்டு, அரையாண்டுத் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில், நடப்பு கல்வியாண்டிற்கான காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

காலாண்டுத் தேர்வு எப்போது?

அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் மாதம் 18ம் தேதியான வியாழக்கிழமை ( 18.09.2025) காலாண்டுத் தேர்வுகள் தொடங்குகிறது. அன்று தொடங்கும் காலாண்டுத் தேர்வு அடுத்த ஒரு வார காலத்திற்கு நடக்கிறது. செப்டம்பர் மாதம் 26ம் தேதி காலாண்டுத் தேர்வு முடிகிறது. 

பள்ளி மாணவர்களே.. காலாண்டு, அரையாண்டுத் தேர்வு தேதி அறிவிப்பு - லீவு எப்போது?

இதையடுத்து, காலாண்டுத் தேர்வுக்கான விடுமுறை செப்டம்பர் மாதம் 27ம் தேதியான சனிக்கிழமை தொடங்குகிறது. பின்னர், வழக்கம்போல ஒரு வாரத்திற்கு விடுமுறை அளிக்கப்படும். 

அரையாண்டுத் தேர்வு எப்போது?

இதையடுத்து, 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் மாதம் 15ம் தேதியான திங்கள் கிழமை ( 15.12.2025) தொடங்குகிறது. இந்த தேர்வுகள் ஒரு வார காலத்திற்கு நடக்கிறது. பின்னர்,  அதே டிசம்பர் மாதம் 23ம் தேதி அரையாண்டுத் தேர்வுகள் முடிகிறது. 

பின்னர், டிசம்பர் மாதம் 24ம் தேதி அரையாண்டுத் தேர்வுக்கான விடுமுறை தொடங்குகிறது. அவ்வாறு தொடங்கும் அரையாண்டுத் தேர்வு விடுமுறை புத்தாண்டு வரை நீடிக்கும். 

பொதுத்தேர்வு எப்போது?

பள்ளி மாணவர்களே.. காலாண்டு, அரையாண்டுத் தேர்வு தேதி அறிவிப்பு - லீவு எப்போது?

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான காலண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் தொடங்கும் மற்றும் முடியும் தேதிகளை தமிழ்நாடு அரசு இன்று அறிவித்துள்ளது. தற்போது பள்ளிகளில் பருவத் தேர்வுகள் நடந்து வரும் நிலையில், விரைவில் மாணவர்களின் காலாண்டுத் தேர்வுக்கான முழு அட்டவணையும் வெளியாக உள்ளது. பள்ளிக்கல்வித்துறையும் அதற்கான பணிகளில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். 

மேலும், அமைச்சர் அன்பில் மகேஷ் நடப்பு கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணை வரும் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளார். மாணவர்கள் மகிழ்ச்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

MBBS BDS Seats: ஹேப்பி நியூஸ்! MBBS, BDS சீட் எண்ணிக்கை உயர்வு: அரசு அதிரடி அறிவிப்பு- யாருக்கெல்லாம்?
MBBS BDS Seats: ஹேப்பி நியூஸ்! MBBS, BDS சீட் எண்ணிக்கை உயர்வு: அரசு அதிரடி அறிவிப்பு- யாருக்கெல்லாம்?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
Fuel Shortage: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
Fact Check: அரசுப்பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கும் மாணவ, மாணவிகள்; வைரலான வீடியோ- நடந்தது என்ன?
Fact Check: அரசுப்பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கும் மாணவ, மாணவிகள்; வைரலான வீடியோ- நடந்தது என்ன?
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி!
விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி!
Innova Hycross: ரூ.1.8 லட்சம் போதும்..! இன்னோவா ஹைக்ராஸ்-க்கான EMI திட்டம் - ஹைப்ரிட் காரில் பறக்கலாம்..
Innova Hycross: ரூ.1.8 லட்சம் போதும்..! இன்னோவா ஹைக்ராஸ்-க்கான EMI திட்டம் - ஹைப்ரிட் காரில் பறக்கலாம்..
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Fuel Shortage: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
Embed widget