Puducherry Power shutdown: புதுச்சேரியில் நாளை மின்தடை... இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
Puducherry Power Shutdown 30.07.2025: புதுச்சேரியில் நாளை பல்வேறு இடங்களில் காலை 10.00 மணி முதல் மாலை 04 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

Puducherry Power shutdown: புதுச்சேரியில் 30.07.2025 தேதி நாளை புதன்கிழமை வில்லியனூர், வில்லியனூர் - மரப்பாலம் மின்பதை மற்றும் சுற்றுவட்டார மின்பாதை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் (காலை 10:00 மணி முதல் மதியம் 1 :00 மணி வரை) அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி முழுவதும் பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோருக்கு மின் விநியோகம் செய்யும் பணியை புதுவை மின் துறை செய்து வருகிறது. இந்த மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில் மின்துறை சுழற்சிமுறையில் மாதாந்திர மின் பாதை பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். அத்தகைய சமயங்களில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
வில்லியனுார் துணை மின்நிலையம்:
மின்தடை நேரம் : காலை 10:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை
மின்தடை பகுதிகள் : வி.தட்டாஞ்சாவடி, வி.மணவெளி, தண்டுகரை. ஒதியம்பட்டு, கே.வி.நகர், உத்திரவாகினிபேட், அம் பேத்கர் நகர், எஸ்.எஸ்.நகர், தில்லை நகர், கணுவாப் பேட், புதுநகர், கோட்டைமேடு, பெரியபேட், ரங்க சாமி நகர், வீர வாஞ்சிநாதன் நகர், திருவேணி நகர், வின்சிட்டி, புதுப்பேட், லூர்து நகர், பாலாஜி நகர், காமராஜர் நகர், மணிமேகலை நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படமாட்டாது.
வில்லியனுார்- மரப்பாலம் மின்பாதை
மின்தடை பகுதிகள் : ஜி.என்.பாளையம், நடராஜன் நகர், எழில்நகர், வெண்ணிசாமி நகர், திருக்குறளார் நகர், வசந்தம் நகர், ஆனந்தம் நகர், கணபதி நகர், வி.ஐ.பி. நகர், திருமலை தாயார் நகர், திருமலை வாசன் நகர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நகர், தென்றல் நகர், பாலாஜி நகர், வயல் வெளி, ரோஜா நகர், அரும்பார்த்தபுரம், தக்ககுட்டை. மூலகுளம், ஜே.ஜே. நகர், அன்னை தெரசா நகர். உழவர்கரை, நண்பர்கள் நகர், சிவகாமி நகர், கம்பன் நகர், மரியாள் நகர், உழவர்கரை பேட், செல்லம்பாப்பு நகர், அன்னை நகர், அபிராமி நகர், கல்யாணசுந்தர மூர்த்தி நகர், ஜெயா நகர், கமலம் நகர், அணக்கரை, ளை நகர், கேப்ரியல் நகர், ராம புது நகர், தியாகுப்பிள்ளை நகர், கேட் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படமாட்டாது.
மின்சார நிறுத்தம்
மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.
துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்
- துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
- துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
- துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
- மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
- தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
- பாதுகாப்பு சோதனை
- இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை





















