மேலும் அறிய

முதியோர் பராமரிப்பு மையத்தில் அதிர்ச்சி! இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

முதியோர் பராமரிப்பு மையத்தில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வெளிமாநில  நபர் கைது.

பராமரிப்பு மையத்தில் பணியில் இருந்த இளம்பெண்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் Cardiac Care Technology படித்து வரும் நிலையில், மயிலாப்பூர் பகுதியில் உள்ள தனியார் முதியோர்கள் பராமரிப்பு மையத்தில் கடந்த ஒரு மாத காலமாக Cardiac Care பயிற்சியில் உள்ளார். கடந்த 27.07.2025 அன்று மாலை அப்பெண் பராமரிப்பு மையத்தில் உள்ள ஒரு அறையில் சுயநினைவு இல்லாத ஒரு நோயாளியை கவனித்து கொள்ளும் பணியில் இருந்த போது , அங்கு பராமரிப்பு மையத்தில் வார்டு பாயாக வேலை செய்து வரும் ரைசன் மராண்டி என்பவர் அப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

காவல் நிலையத்தில் புகார் 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், W-22 மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். W-22 மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரைசன்மராண்டி ( வயது 33 ) என்பவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ரைசன்மராண்டி என்பவர் நந்தனம் பகுதியில் உள்ள ஆண்கள் தங்கும் விடுதியில் தங்கி , மயிலாப்பூரில் உள்ள தனியார் முதியோர்கள் பராமரிப்பு மையத்தில் வார்டு பாயாக வேலை செய்து வருவது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட ரைசன்மராண்டி விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய 3 நபர்கள் கைது. 3 பெண்கள் மீட்பு

சென்னை பெருநகர காவல் விபச்சார தடுப்புப் பிரிவு-2 (Immoral Traffic Prevention Unit-2) காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனிப் படையினர் வியாசர்பாடி எம்.கே.பி நகர், சத்தியமூர்த்தி நகர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்த போது அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவது உறுதி செய்யப்பட்டது.

அதன் பேரில் , பெண் காவலர்கள் உள்ளிட்ட தனிப்படையினர் மேற்படி வீட்டில் சோதனை செய்து பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அசோக்குமார் (வயது 38 ) மற்றும் ஜப்பார்பூரி ( வயது 33 ) மற்றும் மோகன் ( வயது 40 ) ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு தங்க வைத்திருந்த 3 பெண்கள்  மீட்கப்பட்டனர்.

வாடகை வீடு எடுத்து பாலியல் தொழில்

மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட 3  நபர்கள் சேர்ந்து, மேற்படி வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட 3  பெண்கள் அரசு மகளிர்  காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

தலைப்பு செய்திகள்

Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Embed widget