அண்ணா பல்கலை டீன் பதவி சிக்கல்: போலி நியமனம், தரமற்ற செயல்பாடு! ஆசிரியர்கள் சங்கம் அதிரடி கோரிக்கை!
"அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில், உடனடியாக டீன்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது"

அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகள் மற்றும் மண்டல வளாகங்களில் டீன் பதவி நியமிப்பதில், இருக்கும் சிக்கல்களை தீர்த்து வைக்க வேண்டும் என, ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கையை முன் வைத்துள்ளது.
"வருந்தத்தக்க விஷயம்"
இது தொடர்பாக திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளில் உள்ள நிர்வாக பதவிகள் (டீன், துறைத் தலைவர், வார்டன், மண்டல அதிகாரி, இணைப்பு இயக்குனர். NSS ஒருங்கிணைப்பாளர் போன்றவை) மூன்று வருடங்கள் நிரப்பப்பட்ட பின் NS போன்றவை) மூன்று ஆசிரியர்களிடமும் சுழற்சி அடிப்படையில் மாற்றப்பட வேண்டியது அனைவரும் அறிந்த விஷயமே.
திராவிட மாடல் அரசாங்கத்தின் பார்வைக்கிணங்க செயல்படும் சம வாய்ப்பு கொடுக்கும் கல்வி நிறுவனம் என்ற வகையில், இந்த நிர்வாகப் பதவிகள் நேரடி நியமனம் மற்றும் தொழில்முன்னேற்றத் திட்டங்களில் (CAS) API மதிப்பெண்கள் வழங்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பொதுவாக கடந்த பத்து ஆண்டுகளாக, பல நிர்வாகப் பதவிகள் கால எல்லையின்றி சிலர் வசமாக பிடித்துக்கொண்டு, தாங்களே அந்த கல்லூரியின் சொந்தக்காரர்கள் போல் நடந்துகொள்கின்றனர் என்பது மிகவும் வருந்தத்தக்க விடயமாகும்.
போலி ஆவணம் சமர்ப்பிப்பு
2009 மற்றும் 2010-ஆம் ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நியமிக்கப்பட்ட சில பேராசிரியர்கள், பழைய தரமற்ற தனியார் கல்லூரிகளில் வேலை செய்ததற்கான போலி அனுபவச் சான்றுகளை சமர்ப்பித்து அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக மாண்புமிகு துணைவேந்தர்களிடம் அளித்து பேராசிரியர் பதவிகளை பெற்றுக்கொண்டனர்.
பின்னர் அந்நியமனங்கள் தவறானவை என அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) உறுதி செய்ததுடன், அவர்களிடம் சம்பள தொகை மீட்டெடுக்கப்பட்டது. இவர்கள் கடந்த 12 ஆண்டுகளாக டீன் மற்றும் நிர்வாகப் பதவிகளில் இருப்பதோடு, தங்களுடன் சேர்ந்து நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் நிர்வாகத்துக்குத் தகுதி இல்லாதவர்கள் என கூறி வருகின்றனர்.
சம வாய்ப்பு வழங்கிடுக!
தமிழ்நாடு அரசு ஒரே ஆண்டில் நியமிக்கப்பட்ட அனைத்து பணியாளர்களுக்கும் சம வாய்ப்பு வழங்க முயற்சி செய்யும் போது, இந்த பேராசிரியர்கள் குழுவாக அமைந்து, பத்திரிகைகள் மற்றும் வார இதழ்களிலும் தவறான தகவல்களை பரப்பி உதவிப் பேராசிரியர்கள் டீன் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான அனுபவமும் திறமையும் இல்லை என பொய்யான செய்திகள் வெளியிடுகின்றனர்.
UGC- வழிகாட்டுதல்கள் என்ன ?
UGC வழிகாட்டுதலின் படி, ஆறு மாதத்திற்கு ஒருமுறை CAS நடைபெற்றிருந்தால், பெரும்பாலான ஆசிரியர்களும் இப்போது பேராசிரியர் பதவியைப் பெற்றிருப்பார்கள். ஆனால் தாமதத்தால் 2014ஆம் ஆண்டுக்கான பதவியுயர்வுகள் 2025-நிர்வாகத் ஆம் ஆண்டில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.
இப்போது நடைமுறையில் உள்ள செயல்முறைகள் தொடர்ந்தால், 2025-ஆம் ஆண்டுக்கான பதவியுயர்வுகள் 2035-இல் தான் வழங்கப்படும் என்பதே நிலவரம். மூன்று வருடங்கள் கடந்தும், பல டீன்கள் பதவியில் பதவி வகிக்கின்றனர். இணைப்பு கல்லூரிகள் மற்றும் மண்டல வளாகங்களில் காணப்படும் ஆய்வு மற்றும் கல்வித் தரவுகள், தற்போதைய மற்றும் முந்தைய டீன்களின் செயல்திறனில் பின்தங்கியுள்ளதை விளக்குகின்றன.
தரவரிசையில் 200-வது இடத்தை தாண்டி
பெருமளவில் முடக்கவே இத்தனை தோல்விகளுக்குப் பின்னாலும்,. அவர்கள் நிர்வாகப் பதவியில் தாங்கள் விரும்பினபோதும் தொடர்ந்து பதவி வகிக்க, அருகிலுள்ள தனியார் கல்லூரிகளுக்கு ஆதரவாக இணைப்பு கல்லூரிகளை முயற்சிக்கின்றனர்.
பெரும்பாலான இணைப்பு கல்லூரிகள், இறுதி பருவத் தேர்வுகளில் 200-வது இடத்திற்கு பின்னரே தரவரிசையில் உள்ளன. அதேசமயம் பல புதிய தனியார் கல்லூரிகள் கூட சிறப்பாக செயல்படுகின்றன. அதற்கு மேலாக, பல அறிவியல் மற்றும் கலை அறிவியல் துறையை சேர்ந்த பேராசிரியர்களும், AICTE விதிமுறைகளுக்கு எதிராக, டீன் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தகுதி இல்லாதவர்களை நீக்குக!
இது அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட தனியார் கல்லூரியில் நடந்திருந்தால், உடனடியாக கல்லூரியின் இணைப்பு ரத்து செய்யப்பட்டிருக்கும். எனவே அந்த இது திட்டமிட்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் புகழுக்கு களங்கம் விளைவிக்க உருவாக்கப்பட்டது கருதுகிறோம். தகுதி இல்லாத நபர்களை நிர்வாகப் பதவிகளிலிருந்து உடனடியாக நீக்க எடுக்கப்பட வேண்டும்.
தகுதியானவர்களே நியமிக்க வேண்டும்
உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு, அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் Ph.D சங்கம் (AUTA), குறைந்தது இரண்டு ஆராய்ச்சியாளர்களை வெற்றிகரமாக வழிநடத்தியுள்ள, எட்டு SCI-அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் 15 வருடங்கள் பணி அனுபவம் கொண்ட தகுதியான பொறியியல் ஆசிரியர்கள் AICTE விதிமுறைகளுக்கு ஏற்ப டீன் பதவிக்கு க்கு உடனடியாக நியமிக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






















