மேலும் அறிய

பாமகவின் வேரும் வியர்வையும் தைலாபுரத்தில் மட்டுமே - ராமதாஸ்

பாமகவின் வேரும் வியர்வையும் தைலாபுரத்தில் மட்டுமே உள்ளதாகவும், கட்சியின் தலைமைக்கு கட்டுப்படாமல் யார் யாத்திரை சென்றாலும் தொண்டர்களும் மக்களும் ஏற்க மாட்டார்கள் - மருத்துவர் ராமதாஸ்

விழுப்புரம்: பாமகவின் வேரூம் வியர்வையும் தைலாபுரத்தில் மட்டுமே உள்ளதாகவும், கட்சியின் தலைமைக்கு கட்டுப்படாமல் யார் யாத்திரை சென்றாலும் தொண்டர்களும் மக்களும் ஏற்க மாட்டார்கள் தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி தமிழகம் வருகை புரிவது நல்லது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்., எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழர்கள் தொடர்ந்து கைது செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இலங்கை கடற் கொள்ளையர்கள் மீனவர்களின் வலை மீன்களை கொள்ளை அடித்து செல்வதும் வாடிக்கையாக உள்ளது, கடந்த ஒருமாதத்தில் மட்டும் இலங்கை கடற்படையில் 40 க்கும் மேற்பட்டமீனவர்கள் கைது செய்யபட்டு விசைபடகுகள் பறிமுதல் செய்யபட்டுள்ளதால் மத்திய அரசு மீனவர்களை மீட்டு மீனவ சமூதாயத்திற்கு பாதுகாப்பு அரனாக இருக்க வேண்டுமென வலியிறுத்தி உள்ளார்.

வேளான்மை துறை தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர்களை தனித்தனியாக சந்தித்து வேளான் வளர்ச்சி குறித்து விவசாயிகள் அறிந்து கொள்வது முறையல்ல, உழவர் 2.0 என்ற திட்டத்தினை கொண்டுவந்ததோடு சரியான திட்டம் செயல்படுத்தவில்லை விவசாயிகளுக்கும் வேளாண்மை உதவி அலுவலர்களுக்கு நேரடி தொடர்பு இருந்தால் மட்டுமே சிறப்பாக அமையும் என கூறியுள்ளார். சென்னையில் கன்னிமாரா தேசிய நூலகத்தின் சீரமைப்பு பணி குறித்து முன்னரே தெரிவித்திருக்க வேண்டும் இதனால் வாசகர்கள் அரசு தேர்விற்கு தயாராவது பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராடி வருவதால் உரிய தீர்வினை காணும் படி தமிழக அரசுக்கு வலியுறுத்துவதாக கூறினார். 

தமிழக முதல்வர் ஸ்டாலின் 2021 தேர்தல் அறிக்கையில் 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என தெரிவித்ததை நிறைவேற்றி தர வேண்டும், கிராமங்கள் தான் நாட்டின் முதுகெலும்பு நாட்டின் முதுகெலும்பு நொறுங்கும் அளவிற்கு செய்யகூடாது அரசானைப்படி ஊராட்சி அனுமதி இல்லாமல் எந்த வர்த்தகத்தையும் மேற்கொள்ள முடியாது என அரசானை பிறப்பித்து அதில் 119 சேவை தொழில் பட்டியலிடபட்டுள்ளது. இதனால் ஏழை பாழைகள் அன்றாட கூலிகள் தான் வேதனை படுவார்கள் என்றும் வர்த்தக உரிமம் பெற்றவர்கள் தொழில்வரியை பெறுவது தான் இந்த அரசானையின் நோக்கமாக இருக்கும் என்பதால் முதல்வர் மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் வேரும் வியர்வையும் தைலாபுரத்தில் தான் உள்ளது தலைமையின் கட்டுபாட்டிற்கு கட்டுப்படாமல் யார் எந்த யாத்திரை போனாலும் தொண்டனும் மக்களும் ஏற்க மாட்டார்கள், இது தொடர்பாக உள்துறைக்கும் காவல் துறைக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாமக தலைவர் என்ற பெயரோடும் அடையாளத்தோடும் யார் என்ன சொன்னாலும் அதனை கேட்க வேண்டாம் என்றும் ஊடகங்கள் பதிவு செய்ய வேண்டாம் இதனை பாமக தலைமையகமான தைலாபுரத்திலிருந்து தலைவராக மருத்துவர் ராமதாஸ் சொல்லி கொள்வதாக தெரிவித்தார். தலைமையின் கட்டுபாட்டிற்கு இல்லாமல் அன்புமணி நடைபயணம் மேற்கொள்வதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தேவையில்லாதது என கூறினார். 

10.5 சதவிகிதம் என்பது முடிந்து போனது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளது சரியானது என்றும் சைபர் கிரைம் இந்திய அளவில் திறமையானதாக தமிழகத்தில் பணிபுரிபவர்கள் இருப்பதாகவும், அவர்கள் நினைத்து இருந்தால் 2 நாட்களில் ஒட்டு கேட்பு கருவி குறித்து கண்டுபிடித்து தெரிவித்திருக்கலாம். விரைந்து ஒட்டு கேட்பு கருவி குறித்து யார் வைத்தார்கள் என்பதை விரைந்து கண்டு பிடிக்க வேண்டும் என்றும் தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி தமிழகம் வருகை புரிவது நல்லது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
"எஸ்.ஐ மேலேயே கைய வச்சியா?" - பளார் விட்ட தஞ்சை இளைஞரின் கதி என்ன? என்னென்ன பிரிவுகளில் கேஸ்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
வாடகை வீட்டில் சிக்கலா ? இனி கவலை வேண்டாம்..தமிழக அரசு எடுக்கப் போகும் அதிரடி முடிவு
வாடகை வீட்டில் சிக்கலா ? இனி கவலை வேண்டாம்..தமிழக அரசு எடுக்கப் போகும் அதிரடி முடிவு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
"எஸ்.ஐ மேலேயே கைய வச்சியா?" - பளார் விட்ட தஞ்சை இளைஞரின் கதி என்ன? என்னென்ன பிரிவுகளில் கேஸ்?
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
SUV Rivals: எஸ்யுவி தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
SUV தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget