மேலும் அறிய

Delhi Highcourt: மனைவியை வீட்டு வேலை செய்ய சொல்வது கொடுமையா? நீதிமன்றம் பரபர கருத்து!

மனைவி வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும் என கணவர் எதிர்பார்ப்பதைக் கொடுமையாக கருத முடியாது என்று டெல்லி நீதிமன்றம் கூறியுள்ளது.

Delhi Highcourt: மனைவி வீட்டு வேலைகளைச் செய்ய  வேண்டும் என கணவர் எதிர்பார்ப்பதைக் கொடுமையாக கருத முடியாது என்று டெல்லி நீதிமன்றம் கூறியுள்ளது.

விவாகரத்து வழக்கு:

மனைவி தன்னை கொடுமை செய்தாகவும், இதனால் விவாகரத்து வேண்டும் என்று கூறி குடும்பநல நீதிமன்றத்தில் சிஐஎஸ்எஃப் உறுப்பினரான  கணவர் மனு தாக்கல் செய்தார். விவகாரத்து தர மறுத்த குடும்ப நில நீதிமன்ற உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மேல்முறையீட்டு மனுவை கணவர் தாக்கல் செய்தார். 

இந்த மனு நீதிபதி சுரேஷ் குமார் கைட் மற்றும் நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, "மனைவி வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும் என கணவர் எதிர்பார்ப்பதைக் கொடுமையாகக் கருத முடியாது. மனைவியை வீட்டு வேலை செய்ய சொல்வது வாழ்க்கையின் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வதே அதன் நோக்கமாகும்.

ஆனால், கணவரை, தனது குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வந்து வாழச் சொல்வது மனைவி செய்யும் கொடுமையாகக் கருதப்படும். கணவர் நிதிப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்கிறார். மனைவி வீட்டுப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். எனவே, மனைவி வீட்டு வேலை செய்ய வேண்டும் என்று கணவர் எதிர்பார்ப்பது தவறில்லை.  

"மனைவியை வீட்டுவேலை செய்யச் சொல்வது கொடுமை அல்ல” 

குறைவாக அல்லது வருமானம் இல்லாத தனது வயதான பெற்றோரை கவனித்துக் கொள்ள ஒரு மகனுக்கு தார்மீக மற்றும் சட்டப்பூர்வ கடமை உள்ளது. திருமணத்திற்குப் பிறகு மகன் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து செல்வது இந்து கலாச்சாரத்தில் இல்லை. கணவரை தனது குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லுமாறு மனைவி கூறுவது கொடுமைக்கு சமம்.

திருமண பந்தத்தில் கணவர், மனைவி ஒன்றாக வாழ வேண்டும்.  ஒருவருக்கொருவர் அடிக்கடி வீட்டில் இருந்து வெளியேறுவதை தவிர்க்க வேண்டும். அப்போது, திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.  தற்காலிகப் பிரிவினை ஒரு மனைவியின் மனதில் பாதுகாப்பற்ற உணர்வைத் தருகிறது. 

இந்த வழக்கில், கடந்த 2010-ம் ஆண்டு முதல் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும், மனைவிக்கு கூட்டுக்குடும்பமாக வாழ்வதற்கு விருப்பம் இல்லை. தனது மனைவிக்காக  மனுதாரர் வேறு வீட்டிற்கு குடிப்பெயர்த்தார். இருப்பினும், மனைவி அவரது பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். கணவரிடம் இருந்து குழந்தையை  ஒதுக்கி வைப்பதன் மூலம் தந்தை ஸ்தானத்தை அவரிடம் இருந்து பறிக்கப்படுகிறது என கருதுகிறேன்" என்று நீதிமன்றம் கூறியுள்ளது.  இதனை அடுத்து, இந்து திருமணச் சட்டம், 1955 இன் பிரிவு 13(1)இன் கீழ் அந்த நபருக்கு டெல்லி நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.

மேலும் படிக்க

PM Modi: "புதிய ஜம்மு காஷ்மீர்" ஸ்ரீநகர் பொதுக்கூட்டத்தில் மனம் திறந்து பேசிய பிரதமர் மோடி!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GT vs RCB LIVE Score: குஜராத் அணிக்காக அதிரடியாக விளையாடும்  தமிழ்நாட்டின் ஷாருக் - சுதர்சன் கூட்டணி; தடுக்க போராடும் RCB!
GT vs RCB LIVE Score: குஜராத் அணிக்காக அதிரடியாக விளையாடும் தமிழ்நாட்டின் ஷாருக் - சுதர்சன் கூட்டணி; தடுக்க போராடும் RCB!
விழுப்புரம்: தவறான அறுவை சிகிச்சை? கர்ப்பிணி பெண் உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல்
விழுப்புரம்: தவறான அறுவை சிகிச்சை? கர்ப்பிணி பெண் உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல்
Breaking Tamil LIVE: ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு எப்போதும் நீக்கப்படாது - உ.பி பரப்புரையில் அமித்ஷா
ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு எப்போதும் நீக்கப்படாது - உ.பி பரப்புரையில் அமித்ஷா
Prajwal Revanna: பல பெண்கள், 2000 ஆபாச வீடியோக்கள் : வெளிநாடு தப்பிச்சென்ற பாஜக வேட்பாளர் ப்ரஜ்வால் ரேவண்ணா?
பல பெண்கள், 2000 ஆபாச வீடியோக்கள் : வெளிநாடு தப்பிச்சென்ற பாஜக வேட்பாளர் ப்ரஜ்வால் ரேவண்ணா?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Samuthirakani Speech |’’சின்ன படங்களை எடுத்துட்டு போராட வேண்டி இருக்கு’’சமுத்திரக்கனி வருத்தம்Soori speech | Thambi Ramaiah Speech | Bala on Samuthirakani :   ”1000 மாற்றுத்திறனாளி குழந்தைகள்! உடனே ஓடிவந்த சமுத்திரக்கனி” பாலா உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GT vs RCB LIVE Score: குஜராத் அணிக்காக அதிரடியாக விளையாடும்  தமிழ்நாட்டின் ஷாருக் - சுதர்சன் கூட்டணி; தடுக்க போராடும் RCB!
GT vs RCB LIVE Score: குஜராத் அணிக்காக அதிரடியாக விளையாடும் தமிழ்நாட்டின் ஷாருக் - சுதர்சன் கூட்டணி; தடுக்க போராடும் RCB!
விழுப்புரம்: தவறான அறுவை சிகிச்சை? கர்ப்பிணி பெண் உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல்
விழுப்புரம்: தவறான அறுவை சிகிச்சை? கர்ப்பிணி பெண் உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல்
Breaking Tamil LIVE: ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு எப்போதும் நீக்கப்படாது - உ.பி பரப்புரையில் அமித்ஷா
ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு எப்போதும் நீக்கப்படாது - உ.பி பரப்புரையில் அமித்ஷா
Prajwal Revanna: பல பெண்கள், 2000 ஆபாச வீடியோக்கள் : வெளிநாடு தப்பிச்சென்ற பாஜக வேட்பாளர் ப்ரஜ்வால் ரேவண்ணா?
பல பெண்கள், 2000 ஆபாச வீடியோக்கள் : வெளிநாடு தப்பிச்சென்ற பாஜக வேட்பாளர் ப்ரஜ்வால் ரேவண்ணா?
PRESS, Police என தனிநபர் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை - போக்குவரத்து போலீசார் அதிரடி..!
PRESS, Police என தனிநபர் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை - போக்குவரத்து போலீசார் அதிரடி..!
TN Weather Update: வெயிலின் உக்ரம்.. 13 மாவட்டங்களில் 100 டிகிரி கடந்து பதிவான வெப்பநிலை.. எங்கெல்லாம் வெப்ப அலை இருக்கும்?
வெயிலின் உக்ரம்.. 13 மாவட்டங்களில் 100 டிகிரி கடந்து பதிவான வெப்பநிலை.. எங்கெல்லாம் வெப்ப அலை இருக்கும்?
தொடங்கியது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முன்பதிவு; எப்படி விண்ணப்பிக்கலாம்? எப்போது தேர்வு?
தொடங்கியது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முன்பதிவு; எப்படி விண்ணப்பிக்கலாம்? எப்போது தேர்வு?
Kamalhassan: மகளை மிஸ் பண்ணும்போது அப்பா கமல் இதைத்தான் பண்ணுவாராம்! - ஸ்ருதி உடைத்த உண்மை!
Kamalhassan: மகளை மிஸ் பண்ணும்போது அப்பா கமல் இதைத்தான் பண்ணுவாராம்! - ஸ்ருதி உடைத்த உண்மை!
Embed widget