மேலும் அறிய

207 அரசுப் பள்ளிகளை  மூடும் திமுக அரசு? பின்னணி என்ன? வெளியான அதிர்ச்சித் தகவல்!

மொத்தமுள்ள 37,554 அரசு பள்ளிகளில் 52.75 லட்சம் மாணவர்கள் மட்டுமே பயின்று வரும் நிலையில், அதைவிட அதிகமாக 12,970 தனியார் பள்ளிகளில் 63.42 லட்சம் மாணவர்கள் பயிலும் நிலை உருவாகியுள்ளது.  

மாணவர் சேர்க்கை இல்லை என்று கூறி 207 அரசுப் பள்ளிகளுக்கு  மூடுவிழா நடத்துவதா என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

''தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 35 மாவட்டங்களைச் சேர்ந்த 207 பள்ளிகளில் ஒரே ஒரு மாணவர் கூட இல்லை என்று கூறி, அப்பள்ளிகளை திமுக அரசு மூடி வருவதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு பதிலாக, பள்ளிகளின் கல்வித்தரத்தை வீழ்ச்சியடையச் செய்து  அவற்றுக்கு திமுக அரசு மூடுவிழா நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது.

ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள்

கடந்த சில பத்தாண்டுகளாகவே தனியார் பள்ளிகள் எண்ணிக்கையிலும், மாணவர் சேர்க்கையிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதிலும், அதனால் அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது என்பதிலும் ஐயமில்லை.  இப்போது மொத்தமுள்ள 37,554 அரசு பள்ளிகளில் 52.75 லட்சம் மாணவர்கள் மட்டுமே பயின்று வரும் நிலையில், அதைவிட அதிகமாக 12,970 தனியார் பள்ளிகளில் 63.42 லட்சம் மாணவர்கள் பயிலும் நிலை உருவாகியுள்ளது.  பல தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களே இல்லை என்ற நிலையும், பெரும்பாலான பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் பயிலும் நிலைமையும் ஏற்பட்டிருப்பது உண்மைதான்.

ஆனால், இதற்கான தீர்வு அரசுப் பள்ளிகள் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதுதானே தவிர, பள்ளிகளை மூடுவது அல்ல. தொடக்கக் கல்வித்துறை சார்பில் 22,831 தொடக்கப் பள்ளிகளும், 6,587 நடுநிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரே ஒரு பிரிவு இருப்பதாக வைத்துக் கொண்டாலும், ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 851 வகுப்பறைகள் இருக்க வேண்டும்.

ஆனால், தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை வெறும் 65,000 மட்டும் தான். இதனால், ஒரு லட்சத்திற்கும் கூடுதலான வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இத்தகைய சூழலில், அரசுப் பள்ளிகளில் தங்களின் குழந்தைகளை பெற்றோர்கள் எவ்வாறு சேர்ப்பார்கள்?

கடமையை நிறைவேற்றத் தவறுவதா?

அரசு பள்ளிகளில் மாணவர்களே இல்லாவிட்டாலும் கூட, அந்தப் பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியரை நியமித்து, அது குறித்து உள்ளூர் மக்களிடம் பரப்புரை செய்து மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, மாணவர்கள் இல்லை என்று கூறி பள்ளிகளை மூடிவிடக் கூடாது. இது அனைத்து மக்களுக்கும் அவர்கள் வாழும் பகுதிகளில்  பள்ளிகளை அமைத்து இலவசக் கல்வி வழங்க வேண்டும் என்ற அரசியலமைப்புச் சட்டக் கடமையை நிறைவேற்றத் தவறும் செயலாகும். இதை அனுமதிக்க முடியாது.

திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசுப் பள்ளிகள், கல்லூரிகளை சீரழித்து வருகிறது. தமிழ்நாடு எப்போதுமே கூடுதல் பள்ளிகளைத் திறந்தவர்களைத்தான் கொண்டாடி வருகிறதே தவிர, மூடியவர்களை அல்ல. இதை உணர்ந்து மூடப்பட்டு வரும்  207 பள்ளிகளையும் தொடர்ந்து நடத்தி, அங்கு கூடுதல் ஆசிரியர்களை நியமித்து மாணவர் சேர்க்கையை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் திமுக அரசுக்கு தமிழக மக்கள் மூடுவிழா நடத்துவார்கள்'' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

டெட் தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு, மதிப்பெண்களில் தளர்வு: ஆசிரியர் கூட்டமைப்பு வேண்டுகோள்
டெட் தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு, மதிப்பெண்களில் தளர்வு: ஆசிரியர் கூட்டமைப்பு வேண்டுகோள்
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
Embed widget