Coolie Cast: கேமியோவிற்கு 20 கோடி, வில்லனுக்கு 10 கோடி - கூலி படக்குழுவிற்கான ஊதியம் - வாரிக் கொடுத்த சன்பிக்சர்ஸ்
Coolie Cast Salary: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள, கூலி படக்குழுவினருக்கான ஊதிய விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Coolie Cast Salary: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள, கூலி படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்பில் ”கூலி”
ரஜினி காந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் “கூலி” திரைப்படம் உருவாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ள இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர். படத்திற்கான முன்பதிவு தொடங்கியது முதலே, டிக்கெட்டுகள் அதிகளவில் விற்று தீர்ந்து வருகின்றன. இந்நிலையில், கூலி படக்குழுவினருக்கு தயாரிப்பாளர் தரப்பில் வழங்கிய ஊதியம் தொடர்பான தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியையும், ஆச்சரியத்தை அளித்துள்ளன.
ஊதியத்தை வாரிக்கொடுத்த சன் பிக்சர்ஸ்:
ரஜினிகாந்த்: கூலி படத்தில் தேவா எனும் கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு 200 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளியாவதற்கு முன்பாகவே படத்தின் வியாபாரம் வரலாற்று சாதனை படைத்ததால், 150 கோடி ரூபாய் என்ற ரஜினியின் ஊதியத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் 200 கோடியாக உயர்த்தியதாக கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ்: அடுத்தடுத்த கமர்ஷியல் வெற்றிகளை குவித்து முன்னணி இயக்குனராக உருவெடுத்துள்ள லோகேஷ் கனகராஜிற்கு 50 கோடி ரூபாயை ஊதியமாக சன் பிக்சர்ஸ் வாரி வழங்கியுள்ளது.
ஆமிர் கான்: பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஆமிர் கான் கூலி படத்தில் தாஹா எனும் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சற்றே விரிவான கேமியோ செய்துள்ளார். இதற்காக அவருக்கு 20 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனிருத்: ஜெயிலர் படத்தை தொடர்ந்து மீண்டும் ரஜினியுடன் இணைந்த இசையமைப்பாளர் அனிருத்திற்கு, 15 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளதாம்.
நாகர்ஜுனா: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகர்ஜுனா, கூலி படத்தில் ரஜினிக்கு வில்லனாக சைமன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்காக அவர் 10 கோடி ரூபாய் ஊதியமாக பெற்றதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சத்யராஜ்: பாகுபலி மூலம் தமிழ் சினிமாவை தாண்டி தேசிய அளவில் புகழ்பெற்ற சத்யராஜிற்கு, ராஜசேகர் எனும் கதாபாத்திரத்திற்காக 5 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாம்.
உபேந்திரா: கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான உபேந்திரா கலீசா எனும் கதாபாத்திரத்தில் கூலி படத்தில் நடித்துள்ளார். இதற்காக 4 கோடி ரூபாயை ஊதியமாக பெற்றுள்ளாராம்.
ஸ்ருதி ஹாசன்: சத்யராஜின் மகளாக ப்ரீத்தி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஸ்ருதி ஹாசன், 4 கோடி ரூபாயை ஊதியமாக பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சவுபின் சாஹிர்: மலையாள உலகில் சிறந்த குணச்சித்திர நடிகராக கருதப்படும் சவுபின் சாஹிருக்கு, கூலி படத்தின் தயார் கதாபாத்திரத்திற்காக ஒரு கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளதாம்.
6 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை
முன்பதிவிலேயே தற்போது வரை கூலி திரைப்படம் சுமார் 14 கோடி ரூபாய்க்கான டிக்கெட்டுகளை விற்றுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என ஒட்டுமொத்தமாக 6 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது.






















