மேலும் அறிய

Stalin Letter: “மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்

ராமநாதபுரம் மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், மத்திய அமைச்சர் ஜெயங்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 7 பேர் இன்று(09.08.25) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழ்நாட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

“விஷயத்தை திறம்பட கையாண்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்“

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழ்நாட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்படையினரால் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 7 இந்திய மீனவர்கள், அவர்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுடன் சிறைபிடிக்கப்பட்ட மற்றொரு துயரமான சம்பவத்தை ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கு கடலை நம்பியே உயிர்வாழ்ந்து வரும் நிலையில், தற்போது சிறை வாசத்தின் அச்சத்திலேயே வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், மீனவர்கள் நீண்டகாலமாக சிறையில் வைக்கப்பபடுவதால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, அவர்களின் குடும்பங்களுக்கு கடுமையான மன உளைச்சலையும், நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே, மேற்கூறியவற்றை கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தை திறம்படக் கையாண்டு, கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவித்திட, இந்திய அரசு உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தின் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார்.

மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்குமா.?

மத்திய அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதுவது, இது முதன் முறை அல்ல. ஒவ்வொரு முறையும் மீனவர்கள் கைது செய்யப்படும்போது, இதுபோன்ற கடிதங்கள் அனுப்பப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆனால், மத்திய அரசு இதுவரை உறுதியான எந்த நடவடிக்கையையும் மேற்கொண்டதுபோல் தெரியவில்லை.

அதனால் தான் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த முறையாவது,  இலங்கை அரசிடம் பேசி, மத்திய அரசு ஒரு உறுதியான நடவடிக்கையை எடுக்குமா என்பதும் தெரியவில்லை. அப்படி நடக்கும் வரை, இலங்கை கடற்படையினரின் இதுபோன்ற அராஜக செயல்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

தலைப்பு செய்திகள்

இன்று கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
இன்று கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai International Kite Festival: வீகெண்ட் செம பிளான்! மாமல்லபுரத்தில் வண்ணமயமாகத் தொடங்கும் சர்வதேச காற்றாடித் திருவிழா!
வீகெண்ட் செம பிளான்! மாமல்லபுரத்தில் வண்ணமயமாகத் தொடங்கும் சர்வதேச காற்றாடித் திருவிழா!
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
Volkswagen SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்
ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
Embed widget