மேலும் அறிய
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு: மேயர் கணவர் கைது செய்யப்பட்டநிலையில்.. மருத்துவமனையில் அனுமதி !
மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி வரி முறைகேடு மேயரின் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

மேயர் கணவர் பொன் வசந்த்
Source : whats app
வரிவிதிப்புக்குழு தலைவரின் கணவரால் அடுத்தடுத்து சிக்கும் முக்கிய நபர்கள் - மேயர், மண்டல தலைவர் மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு கைதாக வாய்ப்பு?
முறைகேடாக பாஸ்வேர்டு பயன்படுத்தல்
முறைகேடாக பாஸ்வேர்டு பயன்படுத்தல்
மதுரை மாநகராட்சி ஆணையாளராக தினேஷ்குமார் பணியாற்றியபோது, மாநகராட்சி பகுதிகளில் உள்ள வணிக கட்டடங்கள் நிறுவனங்கள், மண்டபங்கள், விடுதிகள், மருத்துவமனைகள் மற்றும் வீடுகளுக்கான வரி வசூல் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. 2022-2023-ஆம் ஆண்டுகளில் ரூ.150 கோடி வரை வரி வசூலில் முறைகேடு செய்து, மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது. இந்த வரி முறைகேடு முழுவதும் அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை முறைகேடாக பயன்படுத்தி, வரி குறைப்பு செய்தது ஆய்வில் தெரிய வந்தது. இந்நிலையில் இது குறித்து சைபர் கிரைம் காவல் துறையினருக்கு ஆணையாளர் தினேஷ்குமார் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து இந்த புகாரின் கீழ் சைபர் கிரைம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், வரி குறைப்பு செய்வதற்காக அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை முறைகேடாக பயன்படுத்தியது தெரியவந்தது.
ராஜினாமா
இது குறித்து தற்போதைய மாநகராட்சி ஆணையர் உமா விஜயனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த புகாரினை தீவிரமாக விசாரணை நடத்தி, முறைகேடுகளை வெளிக்கொண்டு வர வேண்டுமென கூறிய நிலையில் வழக்கானது மத்திய குற்ற பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது. அதன்படி வரி முறைகேடு தொடர்பாக மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், ஓய்வுபெற்ற உதவி கமிஷனர் ரெங்கராஜன், ஒப்பந்த ஊழியர்கள் தனசேகரன், சதீஷ், கார்த்திகேயன், இடைத்தரகர்கள் ஷாகா உசேன், ராஜேஷ்குமார், முகமது நூர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த முறைகேடு எதிரொலியாக மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்களான வாசுகி, சரவண புவனேசுவரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, சுவிதா, நகரமைப்பு குழு தலைவர் மூவேந்திரன், வரிவிதிப்பு குழு தலைவர் விஜயலட்சுமி ஆகிய 7 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர்.

மேயர் கணவர் கைது
இந்த நிலையில் கடந்த வாரம் மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில், மாநகராட்சி வரிவிதிப்புகுழு தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன், ஒப்பந்த ஊழியர் செந்தில்பாண்டி ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது கண்ணன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நேற்று, மதுரை மாநகராட்சியில் இருந்து தூத்துக்குடி மநாகராட்சிக்கு உதவி ஆணையாளராக சென்று பணியாற்றிய சுரேஷ்குமார் என்பவரை மத்திய குற்ற பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக சென்னையில் இருந்த மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவரான பொன்வசந்தும் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்துவதற்காக மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு முன்பாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துவரப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகம் மற்றும் இசிஜியில் மாறுதலாக உள்ளதாக மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலையில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
திமுகவில் இருந்து நீக்கம்

மேலும் மதுரை மாநகராட்சி வரி முறைகேடு வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவுப்படி நியமிக்கப்பட்ட மதுரை சரக டிஐஜி அபிநவ் குமார் தலைமையிலான விசாரணை குழு தீவிரமான விசாரணை நடத்தி அடுத்தடுத்து முக்கிய பிரமுகர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை கைது செய்து வருகின்றனர். இந்த முறைகேடு வழக்கில் ஏற்கனவே ராஜினாமா செய்த மூன்று மண்டல தலைவர்கள் மற்றும் குழு தலைவர்கள் மற்றும் மதுரை மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் கடந்த சில தினங்களுக்கு முன்பாக திமுக கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பின்னர் தான் வரி முறைகேடு விவகாரம் வெளியில் வரத் தொடங்கி அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது.
பிரமுகர் கைது?
அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களின் கணவர், மேயரின் கணவர் என கைது செய்யப்படும் நிலையில், இது போன்ற முறைகேடுகளுக்கு அதிகாரத்தில் இருந்த மண்டல தலைவர்கள் மேயர் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே மதுரை மாநகராட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் நடைபெற்ற வரி முறைகேடு விவாகரத்தில் அடுத்தடுத்து முக்கிய பிரமுகர் கைது செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
அரசியல்
சுற்றுலா