மேலும் அறிய

தொடக்கப் பள்ளி காலிப் பணியிடங்கள்; இடைநிலை ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பக் கோரிக்கை!

ஆசிரியர் தகுதித் தேர்வாணையம் அறிவித்த காலி பணியிடங்களானவை 2021_ல் 730, 2022_ல் 3,987, 2023_ல் 6,553, 2024_ல் 2,768 என மொத்தம் 14,038 காலிப்பணியிடங்கள் உள்ளன.

தொடக்கப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை, நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

 கடந்த 2013, 2017, 2019 மற்றும் 2022ஆம் ஆண்டு வரை 4 முறை டி.ஆர்.பி. எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு ஆணையத்தால் தேர்வு நடத்தப்பட்டது. மேலும் 21.07.2024 அன்று தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு நியமனத் தேர்வும் நடத்தப்பட்டது. அதிலும் புதியதாக தமிழ் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 25,176 பேரில் 23,972 ஆசிரியர்கள் நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேசமயம் 2024 ஆசிரியர் தகுதித் தேர்வாணையம் அறிவித்த எஸ்.ஜி.டி எனப்படும் நியமனத் தேர்வு காலிப் பணியிடங்கள்  வெறும் 2,768 மட்டுமே.

ஆனால் கடந்த 13 ஆண்டுகளில் 4 ஆசிரியர் தகுதித் தேர்வும், ஒரு தமிழ் தகுதித் தேர்வும், ஒரு நியமனத் தேர்வும்  எழுதி தேர்ச்சி பெற்ற 23,972 ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வாணையம்  அறிவித்த 2,768 காலிப் படங்கள் என்பது மிகவும் சொற்பமானது. மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வாணையம் அறிவித்த காலி பணியிடங்களானவை 2021_ல் 730, 2022_ல் 3,987, 2023_ல் 6,553, 2024_ல் 2,768 என மொத்தம் 14,038 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஆனால் இதுவரை இந்த காலிப் பணியிடங்களை  தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு நிரப்பவில்லை என்பது வருத்தத்துக்குரியது.

மேலும் கடந்த 2024_ம் ஆண்டு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் அறிவித்த 19,260 இல் தொடக்கப் பள்ளிகளுக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. மேலும் கடந்த 2021 தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த சுமார் 15,000 காலி பணியிடங்கள் கூட நிரப்பப்படவில்லை. 2025 மே மாதம் வரை தொடக்கப்பள்ளிகளில் சுமார் 20,000 காலி பணியிடங்கள் உள்ளன. அதேசமயம் 23,972 ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில் உள்ளபோது தமிழ்நாடு முழுவதும் 450 வட்டாரங்களில் சுமார் 18,000 தற்காலிக ஆசிரியர்கள் உள்ளனர்.

அரசியல்வாதிகளின் சிபாரிசு

இதுபோன்ற தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் என்பது பள்ளிகளில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழகங்கள், பள்ளி மேலாண்மைக் குழு போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்தும் அரசியல்வாதிகளின் சிபாரிசுகளுடன் வருபவர்கள்தான். இவர்கள் நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் போல தகுதித் தேர்வு, தமிழ் தேர்வு, நியமனத் தேர்வு போன்றவைகளில் பங்கேற்று திறம்பட மதிப்பெண் பெற்றவர்கள் அல்ல.

மேலும் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பில் 'தற்காலிக ஆசிரியர் நியமனம் மிகவும் ஆபத்தானது' என குறிப்பிட்டுள்ளது. மேலும் 20.7.2018 ஆம் ஆண்டு அரசாணை எண் 149_ன் படி நியமன தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பணி வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்களை முழுதாக நீக்க வேண்டும்

ஆகவே பணி நிரவல் அடிப்படையில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் இசை மற்றும் தையல் ஆசிரியர்களை தவிர்த்து 1 முதல் 5 வகுப்பு வரை பணிநிரவல் முறையில் தகுதி தேர்வு மற்றும் நியமன தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை முழுதாக நீக்க வேண்டும். 

2013 முதல் தேர்ச்சி பெற்று வேலைக்காக காத்திருக்கும் நியமனத் தேர்வு ஆசிரியர்கள் பெரும்பான்மையோர் 40, 50 வயதை கடந்த நிலையில் உள்ளனர். வாழ்வின் பெரும் பகுதியை படிப்புக்காகவும், தங்களின் கல்வித் தகுதியை உயர்த்துவதற்காகவும் உழைப்பு, பொருளாதாரம்,  பொன்னான காலம் போன்றவற்றை இழந்து வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்களின் வாழ்க்கை கடந்து கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட காலத்தில் கிடைக்க வேண்டிய வேலை அவர்களுக்கு கிடைக்காததால் அவர்கள் மட்டுமில்லாமல் அவர்களைச் சார்ந்த குடும்பத்தினரும் வாழ்வின் அன்றாட செலவுகளை சமாளிக்க முடியாமல், அவர்களின் பிள்ளைகளுக்கும் நல்ல கல்வி, நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.  

தொடக்கக் கல்வி 

தொடக்கப்பள்ளி என்பது ஒருவரின் வாழ்வின் தொடக்கப் புள்ளியாகும். அந்தப் புள்ளி சரியாக போடாவிட்டால் கோலமும் அலங்கோலமாகும். அதுபோலவே வாழ்க்கையும். தொடக்கக் கல்வி சரியாக அமைந்தால்தான் பிற்காலத்தில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை, உயர் படிப்புகள் என ஒவ்வொரு நிலையிலும்  சிறப்பாக அமையும். ஏற்கனவே 60% தொடக்கப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாததாலும், தரமான கல்வி கிடைக்காதாலும் பெற்றோர்கள் தனியார் பள்ளி மோகத்தில் மழலைக் கல்வி முதல் தனியார் பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.

இந்த நிலையிலும் வறுமை நிலையில் வாடும் ஏழை, எளிய குடும்பத்தினர் நம்பி இருக்கும் அரசு தொடக்கப் பள்ளிகளிலும் போதுமான ஆசிரியர்கள் இல்லை என்றால் மிச்ச சொச்சம் இருக்கின்ற பள்ளிகளையும் மூட வேண்டிய நிலை வரும். அவ்வாறு மூடப்பட்டால் ஏழை, எளிய மக்களின் கல்வி, எதிர்காலம் கேள்விக் குறியாகும்.

 கல்விக்காகச் செலவிடும் தொகை என்பது விரயச் செலவு என்று அரசு நினைக்காமல், எதிர்காலத் தலைமுறையை உருவாக்கும் முதலீடு என்று கருத வேண்டும். உடனடியாக தொடக்கப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்’’ என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

"10 லட்ச ரூபாய்க்கு நீட் வினாத்தாள் கசிவா? மோசடி!" ஐஐடி சென்னை இயக்குநர் பகீர்!
தூக்கியடித்த முதல்வர் விஜய்; நான் முதல்வன் திட்டம் மொத்தமாக மாற்றம்- நடந்தது என்ன?
தூக்கியடித்த முதல்வர் விஜய்; நான் முதல்வன் திட்டம் மொத்தமாக மாற்றம்- நடந்தது என்ன?
’’ஒரு ரூபாய்கூட லஞ்சம் வேணாம்; தனியார் பள்ளிகள் கட்டணத்தை குறைங்க’’- அமைச்சர் ராஜ்மோகன் உருக்கம்!
’’ஒரு ரூபாய்கூட லஞ்சம் வேணாம்; தனியார் பள்ளிகள் கட்டணத்தை குறைங்க’’- அமைச்சர் ராஜ்மோகன் உருக்கம்!
கல்விக்கடன் மூலம் கனவு படிப்பை தொடரலாம்: குறைந்த வட்டி வழங்கும் வங்கிகள் எவை? முழு விபரம் இதோ!
கல்விக்கடன் மூலம் கனவு படிப்பை தொடரலாம்: குறைந்த வட்டி வழங்கும் வங்கிகள் எவை? முழு விபரம் இதோ!

வீடியோ

Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!
CM Vijay Vs JCD Prabhakar: “5 திரியையும் நானே ஏத்துறேன் சபாநாயகரை மதிக்காத விஜய்” விளாசிய அதிமுக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi Trump Meet: பிரான்ஸ் போயும் இதே புராணம் தானா.?! மோடியுடன் பேசிய ட்ரம்ப் 8 போர்களை நிறுத்தியதாக மீண்டும் தம்பட்டம்
பிரான்ஸ் போயும் இதே புராணம் தானா.?! மோடியுடன் பேசிய ட்ரம்ப் 8 போர்களை நிறுத்தியதாக மீண்டும் தம்பட்டம்
IND vs AFG: இஷான் கிஷன், சுப்மன்கில் பேயாட்டம்! அடிவாங்கிய ஆப்கானிஸ்தான்! தொடரை வென்ற இந்தியா
IND vs AFG: இஷான் கிஷன், சுப்மன்கில் பேயாட்டம்! அடிவாங்கிய ஆப்கானிஸ்தான்! தொடரை வென்ற இந்தியா
தவெக கோட்டை ஆகிறது புதுக்கோட்டை? விஜய்யை பார்க்க நேரம் கேட்ட விஜயபாஸ்கர்!
தவெக கோட்டை ஆகிறது புதுக்கோட்டை? விஜய்யை பார்க்க நேரம் கேட்ட விஜயபாஸ்கர்!
500 கி.மீட்டருக்கு மேல் மைலேஜ் தரும் Ola இ ஸ்கூட்டர், இ பைக்குகள்! என்னென்ன? விலை எவ்ளோ?
500 கி.மீட்டருக்கு மேல் மைலேஜ் தரும் Ola இ ஸ்கூட்டர், இ பைக்குகள்! என்னென்ன? விலை எவ்ளோ?
PM Modi at G7: அடி சக்க.! புதிய உலக தெற்கு இணைப்பு கட்டமைப்பு; ஜி7 உச்சிமாநாட்டில் முன்மொழிந்த பிரதமர் மோடி
அடி சக்க.! புதிய உலக தெற்கு இணைப்பு கட்டமைப்பு; ஜி7 உச்சிமாநாட்டில் முன்மொழிந்த பிரதமர் மோடி
D55 title : தனுஷ் மம்மூட்டி மாஸ் காம்போ...D55 படத்தின் டைட்டில் நாளை அறிவிப்பு
D55 title : தனுஷ் மம்மூட்டி மாஸ் காம்போ...D55 படத்தின் டைட்டில் நாளை அறிவிப்பு
Trump Warns Iran: “ஒழுங்கா நடந்துக்கலைன்னா மறுபடியும் குண்டு வீசுவோம்“ - ஈரானை எச்சரித்த ட்ரம்ப்; நடந்தது என்ன.?
“ஒழுங்கா நடந்துக்கலைன்னா மறுபடியும் குண்டு வீசுவோம்“ - ஈரானை எச்சரித்த ட்ரம்ப்; நடந்தது என்ன.?
Aloor Sha Navas: திருச்சி கிழக்கில் சுயேட்சை! அடுத்த தேர்தலில் தனிக்கட்சி! ஆளூர் ஷாநவாஸ் போடும் திட்டம் என்ன?
Aloor Sha Navas: திருச்சி கிழக்கில் சுயேட்சை! அடுத்த தேர்தலில் தனிக்கட்சி! ஆளூர் ஷாநவாஸ் போடும் திட்டம் என்ன?
Embed widget