பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பெங்களூருவை சேர்ந்த ஐடி ஊழியர், தன்னுடைய மனைவி துன்புறுத்துவதாகக் கூறி சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அதேபோன்ற ஒரு சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.
டெல்லியில் மனைவி டார்ச்சர் செய்ததாக 40 வயது நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது. சமீபத்தில்தான், பெங்களூருவை சேர்ந்த ஐடி ஊழியர், தன்னுடைய மனைவி துன்புறுத்துவதாகக் கூறி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.
டெல்லியை சேர்ந்த கஃபே உரிமையாளர் ஒருவர், தனது மனைவியும் அவரது குடும்பத்தினரும் மெண்டல் டார்ச்சர் செய்ததாகவும் நியாயமற்ற முறையில் பணம் கேட்டதாகக் கூறி தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாடல் டவுன் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மீண்டும் ஒரு தற்கொலை:
தற்கொலை செய்து கொண்டவரின் பெயர் புனித் குரானா. அவரது மனைவி மனிகா பஹ்வா. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனக்கு நேர்ந்தவற்றை வீடியோவாக பேசி வெளியிட்டுள்ளார். திருமணம் சரிப்பட்டு வராத காரணத்தால் பரஸ்பர சம்மதத்தின் மூலம் விவாகரத்து செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார் புனித் குரானா.
இந்த விவாகரத்து நடவடிக்கைகள் எவ்வாறு தனது மனைவிக்கும் தனக்கும் இடையே கடுமையான தகராறாக மாறியது என்பதை வீடியோவில் அவர் பேசியுள்ளார். மனிகா, தன்னிடம் கூடுதலாக 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.
"எனது மாமியார் மற்றும் என் மனைவியால் நான் மிகவும் சித்திரவதை செய்யப்பட்டதால் நான் தற்கொலை செய்யப் போகிறேன். நாங்கள் ஏற்கனவே பரஸ்பர விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளோம். பரஸ்பர விவாகரத்து செய்யும்போது, நாங்கள் நீதிமன்றத்தில் சில நிபந்தனைகளில் கையெழுத்திட்டுள்ளோம்.
மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி:
அந்த நிபந்தனைகளை 180 நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும். ஆனால், என் மாமியார் மற்றும் என் மனைவி என் எல்லைக்கு அப்பாற்பட்ட புதிய நிபந்தனைகளுடன் எனக்கு அழுத்தம் தருகிறார்கள். கூடுதலாக, ரூ.10 லட்சம் தர வேண்டும் என்று என்னிடம் கேட்கிறார்கள். என்னால் அதனை கொடுக்க முடியவில்லை. என் பெற்றோர் ஏற்கனவே போதுமான பணம் கொடுத்துவிட்டார்கள். எனவே, அவர்களிடம் கேட்க முடியாது" என புனித் குரானா வீடியோவில் பேசியுள்ளார்.
புனித்துக்கு நேர்ந்த கொடுமையினை விவரித்த அவரது சகோதரி, "அவரும், அவருடைய சகோதரியும், அவருடைய பெற்றோரும் அவனை (புனித்) மனரீதியாக சித்திரவதை செய்து துன்புறுத்தினார்கள். சுமார் 59 நிமிட வீடியோ பதிவு உள்ளது. அதில், புனித் தான் சந்தித்த துன்புறுத்தல் விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார். அந்த பெண் புனிதத்தின் சமூக வலைத்தள கணக்கையும் ஹேக் செய்துள்ளார்" என்றார்.
புனித்திற்கும் அவரது மனைவிக்கும் இடையே நடந்த போன் உரையாடலும் வெளியாகியுள்ளது. அதில், "பிச்சைக்காரனே, நீ என்ன கேட்ட சொல்லு. நான் உன் முகத்தைப் பார்க்க விரும்பவில்லை. என் முன்னால் வந்தால் அறைவேன். விவாகரத்து நடந்தால், தொழிலில் இருந்து என்னை நீக்குகிறார்? பின்னர், 'என்னை மிரட்டினால் தற்கொலை செய்து கொள்வேன் என கூறிகிறாய்" என புனித்திடம் அவரது மனைவி பேசியுள்ளார்.