’Bye, Bye ஸ்டாலினை திடீரென தவிர்த்த எடப்பாடி பழனிசாமி’ இதுதான் காரணமா..?
"முதல்வர் மு.க.ஸ்டாலின் பூரண உடல் நலன் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்’

’மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் 234 தொகுதிகளுக்கும் சென்று மக்களை சந்திக்கும் பிரச்சாரத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி நடத்தி வருகிறார். ஒவ்வொரு தொகுதிக்கு சென்று பேசும் போது திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை குறிப்பிட்டும் முதல்வர் ஸ்டாலினை கடுமையாம விமர்சித்து பேசுவதையும் அவர் வழக்கமாக வைத்துள்ளார்.
பை,பை ஸ்டாலின் – கையெலெடுத்த எடப்பாடி பழனிசாமி
இந்நிலையில், ஒவ்வொரு கூட்டத்தின் முடிவிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 2026 தேர்தலில் தோல்வியுற்று முதல்வர் பதவியை இழந்து வீட்டிற்கு செல்வார் என்பதை குறிப்பிடும் வகையில் ‘Bye, Bye ஸ்டாலின்’ என்ற வார்த்தையை சொல்லி எடப்பாடி பழனிசாமி முடிப்பார். அவரின் இந்த நகைச்சுவை மிகுந்த அதே நேரத்தில் திமுக ஆட்சியை விட்டிற்கு அனுப்புவோம் என்ற நோக்கத்தில் சொல்லப்படும் ‘பை, பை ஸ்டாலின்’ என்ற சொல்லாடல் அதிமுகவினர் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. எடப்பாடி பழனிசாமி சொன்னதும் அங்கு அவரது பேச்சை கேட்க கூடியிருக்கும் மக்களும், அதிமுகவினரும் கூட்டமாக ‘பை, பை – ஸ்டாலின்’ என்று சொல்வது சமூக வலைதளங்களில் ஒலித்து வருகிறது.
பை, பை ஸ்டாலின் – என சொல்லாத எடப்பாடி - நிறுத்தியது ஏன்
ஆனால், நேற்று முதல் எடப்பாடி பழனிசாமி பை பை ஸ்டாலின் என்ற வாசகத்தை தன்னுடைய சுற்றுப் பயண மக்கள் சந்திப்பின்போது சொல்லாமல் தவிர்த்துவிட்டார். ஏன், திடீரென அவர் ‘பை, பை – ஸ்டாலின்’ சொல்லவில்லையென்று அதிமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சூழலில் ‘பை, பை –ஸ்டாலின்’ என்று இந்த சந்தர்ப்பத்தில் சொன்னால், அது வேறு விதமாக பொருள்பட்டு தவறான அர்த்தமாகிவிடும் என்பதை உணர்ந்து எடப்பாடி பழனிசாமி, பை பை ஸ்டாலின் வாசகம் சொல்வதை தவிர்த்ததுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் பூரணமாக உடல்நலன் பெற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார் என்றனர்.





















