Rajinikanth: கூலி பட செட்டில் ரஜினிகாந்த் செய்தது என்ன.? - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த முக்கிய தகவல்
கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது, ரஜினிகாந்த் செய்த ஒரு முக்கியமான விஷயம் குறித்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். அது என்ன என்பதை பார்க்கலாம்.

நடிகர் ரஜினிகாந்த் தனது சுயசரிதையை எழுதி வருவதாக, இயக்குநகர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர், இந்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறியது என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
“சுயசரிதை எழுதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்“
நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களை தொகுத்து, அவரது சுயசரிதையை எழுதி வருவதாக, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கூலி திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்றபோது, நடிகர் ரஜினிகாந்த் அவரது சுயசரிதையை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், படப்பிடிப்பின்போது, நாள்தோறும் அவரிடம் சென்று, சுயசரிதையில் எந்த அத்தியாயத்தை தற்போது எழுதி வருகிறார் என்ற தகவலை கேட்டுத் தெரிந்துகொண்டு வந்ததாகவும் லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘கூலி‘
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கூட்டணியில் ‘கூலி‘ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில், சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன், சிவகார்த்திகேயன், அமீர் கான், உபேந்திரா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாக உள்ளது.
படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். பெரும் பொருட்செலவில் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படத்தின் பாடல்கள், டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஏற்கனவே சுயசரிதை எழுத முற்சித்த ரஜினிகாந்த்
தற்போது கூலி திரைப்படத்தில் நடித்துள்ள ரஜினிகாந்த், இதைத் தொடர்ந்து ஜெயிலர் 2-ம் பாகத்தில் நடிக்க உள்ளார். அதன் பின்னர், தனது வாழ்க்கை வரலாற்று சுயசரிதையை புத்தகமாக எழுதி வெளியிட உள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1975-ம் ஆண்டில், அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான ரஜினிகாந்த், தற்போது திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளார்.
இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்பே தனது சுயசரிதையை எழுத ரஜினிகாந்த் முயன்றுள்ளார். ஆனால், சில காரணங்களால் அதை தொடர முடியாமல் கைவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தற்போது சுயசரிதையை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுத்துள்ளார் ரஜினிகாந்த்.
இது அவரது ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்திதான்.





















