மாஞ்சோலை கிளிதானோ.. வெள்ளி விழா நாயகனா இது.. உடல் மெலிந்து உருக்குலைந்து போன நடிகர்!
தமிழ் சினிமாவில் கிழக்கே போகும் ரயிலில் பணத்தை தொடங்கிய நடிகரின் சமீபத்திய புகைப்படம் ரசிகர்களை சோகமடைய செய்துள்ளது.

தமிழ் சினிமாவில் இவர் ஓர் அதிசயம் தான். கமல், ரஜினிக்கு நடுவில் ஹீரோவாக என்ட்ரி தந்து சில்வர் ஜூப்ளி படங்களை கொடுத்தவர் சுதாகர். தற்போது வெளியாகும் படங்கள் 50 நாட்கள் திரையரங்குகளில் ஓடுவது அதிசயம் தான். ஆனால், இவர் நடித்த முதல் படமான கிழக்கே பாேகும் ரயில் திரைப்படம் 365 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இயக்குநர் பாரதிராஜா இப்படத்தை இயக்கியிருந்தார். சுதாகர் இப்படத்தில் பரஞ்சோதியாக அறிமுகம் ஆனது போலவே ராதிகாவும் அறிமுகமானார். இருவருக்குமே வெற்றிப்படமாக மட்டும் அல்லாமல் இந்திய அளவில் பேசப்பட்ட படமாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
சரித்திரம் படைத்த சுதாகர் - ரதிகா
இப்படத்தின் வெற்றியை தாெடர்ந்து, நிறம் மாறாத பூக்கள், பொண்ணு ஊருக்கு புதுசு, மாந்தோப்பு கிளியே, சுவரில்லாத சித்திரங்கள் என தொடர் வெற்றிப்படங்களாகவே அமைந்தன. சுதாகர் - ராதிகா ஜோடியும் காரணமாக இருந்தது. இந்த ஜோடி மக்களின் வரவேற்பை பெற்றதால் தொடர்ச்சியாக 11 படங்களில் இருவரும் இணைந்து நடிக்க தொடங்கினர். மாதம், மாதம் சுதாகர் படம் வெளியாகி தமிழ் ரசிகர்களுக்கு காதல் விருந்தை படைத்தது. ஒரே ஆண்டில் 13 படங்களில் நடித்து உச்ச நடிகர்களையே அசர வைத்தார். தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வருவார் என்று எல்லோராலும் பேசப்பட்டார் சுதாகர். ஆனால், தோல்வி படங்களால் தமிழ் சினிமாவை விட்டு விலகும் நிலை நேர்ந்தது.
சுதாகரின் நண்பன் சிரஞ்சீவி
தமிழ் சினிமா கைவிட்டாலும் தாய்மொழியான தெலுங்கு அவரை வரவேற்றுக்கொண்டது. சினிமாவில் மார்க்கெட் இழந்த நேரத்தில் சுதாகருக்கு கைகொடுத்தது அவரது நண்பர் சிரஞ்சீவி தான். அவர் இல்லையென்றால் சுதாகரை அனைவரும் மறந்திருக்க கூடும். தோல்வி நாயகனாகவே காணப்பட்டிருப்பார். திரைப்பட கல்லூரியில் படித்த காலத்தில் இருந்தே இருவரும் சினேகிதர்கள். அந்த நட்பு தான் அவரை வாழவைத்தது. சிரஞ்சீவி நடித்த அனைத்து படங்களிலும் சுதாகர் தனது குரலை மாற்றி துணை நடிகராக காணப்பட்டார் ஆரம்பத்தில் வரவேற்பை பெற்றாலும் பிறகு சலிப்பை தட்ட தொடங்கின. பிறகு உடல் எடையை கூட்டி, கரகரப்பான குரலில் வலம் வந்து காமெடியிலும் கலக்கினார் சுதாகர். ரஜினி நடித்த அதிசய பிறவியிலும் காமெடியனாக நடித்திருப்பார்.
வயது முதிர்ந்த தோற்றம்
அதன் பிறகு அவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் தானா சேர்ந்த கூட்டம். இப்படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். உடல்நிலை மோசமானதால் நடிப்பை நிறுத்தி கொண்டார். தற்போது 65 வயதாகும் சுதாகர் உடல் உருக்குலைந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருக்கிறார். தமிழ் உச்ச நடிகராக ரசிகர்களின் கனவு ஹீரோவாக இருந்தவர் வயது முதிர்ந்த தோற்றத்தில் ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு உடல்நல பாதிப்பால் கடுமையாக அவதியுற்று வருகிறார். சமீபத்தில் வெளியான அவரது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர். சிலர் சமூகவலைதளங்களில் நலம் விசாரிக்க தொடங்கிவிட்டனர்.





















