மேலும் அறிய
Advertisement
12 PM Headlines December 07: நண்பகல் 12 மணி முக்கியச் செய்திகள்..! இதுவரை உங்களைச் சுற்றி நிகழ்ந்தது இதுதான்..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் நேற்று, காலை பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில், மாலை மகா தீபம் மலையின் மீது ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- இன்று மாலை புயல் உருவாக வாய்ப்பு உள்ளதால், நள்ளிரவு முதல் தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையம்
- சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புக் குழு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக விரைந்துள்ளது.
- மின் இணைப்புடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
- அதிமுகவின் ஒபிஎஸ் அணியில் இருந்த கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்தார்.
- தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியா
- இன்று குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- டெல்லி மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில் ஆம் ஆத்மி 75 இடங்களிலும், பாஜக 55 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் இதுவரை வெற்றி பெற்றுள்ளது.
- மத்திய பிரதேசம்: அரசு சட்ட கல்லூரியில் மாணவிகள் நெற்றியில் பொட்டு வைக்கத் தடை
- குளிர்கால கூட்டத்தொடர்: விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை பற்றி விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
- ரெப்போ வட்டி விகிதத்தை 0.35% ஆக 5-வது முறையாக உயர்த்தியது ரிசர்வ் வங்கி.
- டெல்லியை சேர்ந்த 26 வயதான பெண்ணின் 33 வார கருவை கலைக்க, டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
- நீதிபதி குறித்து அவதூறு பரப்பியதற்கு காஷ்மீர் பைல்ஸ் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.
உலகம்:
- பஞ்சாப்பின் தார்ன் தரன் பகுதியில் காலியா என்ற கிராமம் அருகே, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் டிரோன் மூலம் 2.4 கிலோ எடை கொண்ட ஹெராயின் வகை போதை பொருளை பறிமுதல் செய்தனர்.
- கொலாம்பியாவில் நிலச்சரிவு ஏற்பட்டு 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
- ஆக்ஸ்ஃபோர்ட்டின் 2022-ஆம் ஆண்டிற்கான வார்த்தையாக ’Goblind Mode’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- கொழும்பு மற்றும் சென்னைக்கு இடையில் மீண்டும் விமான போக்குவரத்து சேவையை இலங்கை அரசு துவக்கவுள்ளதாக அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வணிகம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ. 40,128 ஆக விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ரூ.5,016 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 43,344 ரூபாயாகவும், ஒரு கிராம் ரூ.5,416 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில் வெள்ளி விலை ஒரு ரூபாய் 80 காசுகள் உயர்ந்து ரூ.71 ஆக விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.71,000ஆக விற்பனையாகிறது.
விளையாட்டு
- இந்தியா வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
- சீனியர் பெண்கள் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹிருஷிகேஷ் கனிட்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான சுபமன் கில், அடுத்த 10 ஆண்டுகளில் பல சாதனைகளை படைப்பார் என்று முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்தார்.
- உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்றைய நாக் - அவுட் சுற்றில் மொராக்கோ மற்றும் போர்ச்சுகல் அணி வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
சேலம்
மயிலாடுதுறை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion