Morning Headlines: இந்தியா வரும் ரணில் .. ராகுல் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்..முக்கிய செய்திகள் இதோ..!
Morning Headlines July 19: இந்தியா முழுவதும் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் காலைச் செய்திகளில் காணலாம்.
- 300 நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்; எங்கே? எப்போது? முழு விவரம்!
மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சென்னையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை ( ஜூலை 22 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மாநிலக்கல்லூரியில் காலை 08.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கும் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வேலை வாய்ப்பளிக்கும் முன்னணி நிறுவனங்களுடனான கூட்டம் ஜூலை 17 ஆம் தேதி அன்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
- சிக்கிய அமைச்சர் பொன்முடி...? ரூ.81.7 லட்சம் பறிமுதல் - ரூ. 41. 9 கோடி வைப்பு நிதி முடக்கம்: பட்டியலை வெளியிட்ட அமலாக்கத்துறை
அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணிக்கு தொடர்புடைய ஏழு இடங்களில் சோதனை மேற்கொண்டது தொடர்பாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதில் 7 இடங்களில் சோதனை நடைபெற்றதாகவும், வெளிநாட்டு பணம் ரூ.13 லட்சம் (தோராயமாக), கணக்கில் வராத ரூ.81.7 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்படுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ரூ.41.9 கோடி மதிப்புள்ள வைப்பு நிதி முடக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- நாளை இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க.. மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படுமா?
ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் பயணமாக நாளை இந்தியாவிற்கு வருகை தருகிறார். இந்த பயணத்தில் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து பேசுகிறார். இலங்கையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏற்பட்ட கலவரத்தால அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்ட பின் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். மேலும் படிக்க
-
ராகுல் காந்தி, சோனியா காந்தி சென்ற விமானம்.. அவசர அவசரமாக தரையிறக்கம்..
ராகுல் காந்தி, அவரின் தாயார் சோனியா காந்தி ஆகியோர் பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனைஅவர்கள் சென்ற விமானம் இன்று மாலை மோசமான வானிலை காரணமாக போபால் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவம் இரவு 7.45 மணியளவில் நடந்துள்ளது. தகவல் அறிந்த மத்திய பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர்கள், பி.சி.சர்மா, எம்.எல்.ஏ குணால் சவுத்ரி உள்ளிட்டோர் விமான நிலையத்திற்கு சென்றனர். மேலும் படிக்க
- சென்னை வாசிகள் கவனத்திற்கு..மகளிர் உரிமைத் தொகை முகாம் - மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு!
சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டமாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 16ம் தேதி வரை இரண்டாம் கட்ட முகாம்கள் நடைபெறும். உரிமைத் தொகை விண்ணப்பங்களை பெற பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு வர தேவையில்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் படிக்க