Kalaignar Women's Assistance Scheme: சென்னை வாசிகள் கவனத்திற்கு..மகளிர் உரிமைத் தொகை முகாம் - மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு!
Kalaignar Women's Assistance Scheme: சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டமாக நடைபெறும்.
சென்னையில் இரண்டு கட்டங்களாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் என்று சென்னை பெருநகர மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தகுதிவாய்ந்த மகளிருக்கு மாதம் ரூ.1000 ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து, உரிமைத் தொகை பெறுவதற்கான நெறிமுறைகள் உள்ளிட்டவை பற்றி அறிவிப்பு வெளியானது. இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்களை கொண்டு உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன. தன்னார்வலர்கள் எந்தெந்த நியாய விலை கடைப்பகுதியில் வசிக்கிறார்கள் என்ற விவரம் விரைவில் வழங்கப்படும். தன்னார்வலர்கள் வசிக்கும் பகுதிக்கு 2 கிலோ மீட்டாருக்கு மிகாமல் அவர்களுக்கான பணி ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முகாம் சென்னை
சென்னையில் 2 கட்டங்களாக விண்ணப்ப முகாம்கள் நடத்தப்படும் என்று சென்னை பெருநகர மாநகராட்சி அறிவித்துள்ளது. முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ம்ட தேதி வரை நடைபெற உள்ளது. ஆகஸ்ட் -5 ம் தேதி முதல் 16-ம் தேதி வரை இரண்டாம் கட்ட முகாம்கள் நடைபெறும். உரிமைத் தொகை விண்ணப்பங்களை பெற பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு வர தேவையில்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்ப பதிவு நடைபெறும் நாள், நேரத்தை குறிப்பிட்டு விண்ணப்பம், டோக்கன் ரேஷன்கடை பணியாளர் வழங்குவர். ரேஷன் கடை பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாள், நேரத்தில் விண்ணப்பதாரர் எடுத்து வரவேண்டும். விண்ணப்பப் பதிவின்போது சரிபார்ப்புக்காக ஆதார் எண் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் வர வேண்டும். குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது ஆகியவற்றையும் சரிபார்ப்புக்காக எடுத்து வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை - யாரெல்லாம் பெற முடியாது?
- ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை வழங்க அரசு முடிவு.
- சொந்தமாக கார், டிராக்டர், ஜூப், கனரக வாகனம் வைத்திருப்பவர்கள்.
- குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக கொண்டிருப்போருக்கு ரூ.1000 உரிமைத்தொகை கிடையாது.
- ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் வருவாய் பெறும் குடும்ப தலைவிகளுக்கு உரிமைதொகை கிடைக்காது.
- 5 ஏக்கர் மற்றும் அதற்கும் அதிகமான நன்செய் நிலம் வைத்து இருக்கும் குடும்ப தலைவிகளுக்கும், 10 ஏக்கர் புன்செய் மற்றும் அதற்கு அதிகமான நிலம் வைத்திருக்கும் குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத் தொகை இல்லை.
- பெண் எம்.எல்.ஏ., எம்.பி. மற்றும் பெண் அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படமாட்டாது.
- மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மட்டும் இல்லாமல், பொதுத்துறை நிறுவனங்களான வங்கிகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதார்களுக்கு இத்திட்டத்தின் கீழ் உரிமைத் தொகை வழங்கப்படமாட்டாது.
- வருமானவரி செலுத்துவோர், அரசின் வேறு நிதி உதவித் திட்டங்களில் பலன் பெறும் மகளிர் இந்த திட்டத்தில் பலன் பெற முடியாது.
- ஆண்டுக்கு 3600 யூனிட்க்கும் அதிகமான மின்சாரத்தை நுகர்வு செய்யும் குடும்பங்களில் உள்ள மகளிருக்கு உரிமைத் தொகை கிடையாது.
- தொழிலில் ஆண்டுக்கு ரூபாய் 50 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டி ஜி.எஸ்.டி செலுத்துவோர் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது.