Tamilnadu Roundup 09.07.2025 : சிறையில் அடைக்கப்பட்ட கடலூர் கேட்கீப்பர்.. மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடக்கும் முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தம் தொடங்கியது; தமிழ்நாட்டில் பல இடங்களில் பேருந்துகள் வழக்கம்போல இயக்கம்
தமிழ்நாட்டில் பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம்போல ஓடினாலும் வங்கி, தபால் சேவை பாதிப்பு
தமிழநாட்டில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் வேலைநிறுத்தம் காரணமாக கடுமையாக பாதிப்பு
இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம் காரணமாக தமிழ்நாட்டில் போலீசார் பாதுகாப்பு அதிகரிப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சி புறப்பட்டுச் சென்றார்
கடலூர் கோர ரயில் விபத்து; கேட்கீப்பர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு - கேட்கீப்பர் பங்கஜ்சர்மா சிறையில் அடைப்பு
கடலூர் ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே போலீசாரும், தமிழக காவல்துறையும் தீவிர விசாரணை
கடலூர் ரயில் விபத்து விவகாரம்; எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி
புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்கள் 1.10 லட்சம் பேர் காத்திருப்பு
ஆவடி அருகே படிப்பைத் தொடர முடியாததால் தற்கொலைக்கு முயன்ற மாணவியை மீட்டு பண உதவி செய்த போலீஸ்
ஆர்பிஐ பெயரில் பல கோடி மோசடி செய்த நித்தியானந்தம் சேலம் மத்திய சிறையில் மரணம்
சென்னையில் தனியார் வங்கியில் கள்ள நாேட்டுகளை டெபாசிட் செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 43 ஆயிரம் கன அடி நீர் வரத்து; பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை
புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமிக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் - புதுச்சேரி அரசியலில் பரபரப்பு
இலங்கை செம்மணி மனித புதைகுழி விவகாரத்தில் கனடா தமிழர்கள் போராட்டம்
ஆசியாவிலே வயதான யானையான வத்சலா மத்திய பிரதேசத்தில் உயிரிழப்பு
மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி அரசியல் சுற்றப்பயணம் விறுவிறுப்பாகி இருப்பதால் தமிழக அரசியல் சூடுபிடித்துள்ளது





















