மேலும் அறிய

அரும்பாக்கம் வங்கியில் கொள்ளை போன நகைகளில் 15 கிலோ மீட்பு: 3 பேர் கைது

சென்னை அரும்பாக்கத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ தங்க நகைகளில் இதுவரை 15 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை அரும்பாக்கத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ தங்க நகைகளில் இதுவரை 15 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள ஃபெடரல் வங்கியின் தங்க நகைக்கடன் வழங்கும் கிளையான ஃபேட் பேங்க கோல்டு லோன்ஸ் வங்கி உள்ளது. இந்த வங்கியல்தான் கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்கு, காவலாளி, ஊழியர்களை கட்டிப்போட்டுவிட்டு தங்க நகைகள், பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றதாக கூறப்பட்டது. 

பட்டப்பகலில் 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் முகமூடி அணிந்து வந்து கொள்ளையில் ஈடுபட்டதாக தகவல் வெளியான நிலையில், அந்த வங்கியின் ஊழியரான முருகன் என்பவர் தனது கூட்டாளிகளுடன் இணைந்து கொள்ளையில் ஈடுபட்டது  காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.  

ஃபேட் பேங்க கோல்டு லோன்ஸ் வங்கியில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கத்தியை காட்டி மிரட்டி மயக்க மருந்தை முகத்தில் அடித்து கொள்ளையில் ஈடுபட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்நிலையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. 

இதுகுறித்து வடக்கு மண்டல கூடுதல்  காவல் ஆணையர் அன்பு கூறுகையில், "இதே வங்கியில் தற்போது வரை வேலை செய்து கொண்டிருந்த முருகன் என்ற ஊழியர் தான் திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளார் என்பதை கண்டறிந்துவிட்டோம்.

வங்கியில் வேலை செய்யும் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது விரைவில் கண்டறியப்படும்.  விசாரணையில் இருப்பதால் இதற்கு மேல் எதுவும் தெரிவிக்க இயலாது. கொள்ளையில் ஈடுபட்டவரை கண்டுபிடித்துவிட்டதால் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்பதும்,  குற்றவாளிகளை பிடிப்பதும் எளிமையானது தான். இதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொள்ளை போன பொருட்களை மதிப்பிடும் பணி நடைபெற்று வருகிறது" என்று கூறியிருந்தார். 

மேலும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்கவும் கொள்ளையர்களைப் பிடிக்கவும் போலீசார் தரப்பில் நான்கு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் கொள்ளையில் ஈடுபட்டதாக பாலாஜி என்பவரை போலீசார் கைது செய்தது, தற்போது சந்தோஷ், சக்திவேல் என மொத்தம் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மேலும், கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

என்னை யாரும் இயக்கவில்லை... எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு - ராமதாஸ்
என்னை யாரும் இயக்கவில்லை... எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு - ராமதாஸ்
ADMK RajyaSabha Candidates: அடித்து ஆடும் எடப்பாடி - கூட்டணி கட்சிகளுக்கு ”நோ”, ராஜ்யசபா எம்.பி., வேட்பாளர்கள் அறிவிப்பு
ADMK RajyaSabha Candidates: அடித்து ஆடும் எடப்பாடி - கூட்டணி கட்சிகளுக்கு ”நோ”, ராஜ்யசபா எம்.பி., வேட்பாளர்கள் அறிவிப்பு
அறிவாலயத்தை மதுரையில் இடம் மாற்றம் செய்ததால் மதுரைக்கு என்ன லாபம் - ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு
அறிவாலயத்தை மதுரையில் இடம் மாற்றம் செய்ததால் மதுரைக்கு என்ன லாபம் - ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு
Thug Life: கர்நாடகாவில் தக்ஃலைப் படத்திற்கு தடை.. கமல் மன்னிப்பு கேட்டால்தான் ரிலீஸ் பண்ணுவாங்களாம்!
Thug Life: கர்நாடகாவில் தக்ஃலைப் படத்திற்கு தடை.. கமல் மன்னிப்பு கேட்டால்தான் ரிலீஸ் பண்ணுவாங்களாம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
என்னை யாரும் இயக்கவில்லை... எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு - ராமதாஸ்
என்னை யாரும் இயக்கவில்லை... எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு - ராமதாஸ்
ADMK RajyaSabha Candidates: அடித்து ஆடும் எடப்பாடி - கூட்டணி கட்சிகளுக்கு ”நோ”, ராஜ்யசபா எம்.பி., வேட்பாளர்கள் அறிவிப்பு
ADMK RajyaSabha Candidates: அடித்து ஆடும் எடப்பாடி - கூட்டணி கட்சிகளுக்கு ”நோ”, ராஜ்யசபா எம்.பி., வேட்பாளர்கள் அறிவிப்பு
அறிவாலயத்தை மதுரையில் இடம் மாற்றம் செய்ததால் மதுரைக்கு என்ன லாபம் - ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு
அறிவாலயத்தை மதுரையில் இடம் மாற்றம் செய்ததால் மதுரைக்கு என்ன லாபம் - ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு
Thug Life: கர்நாடகாவில் தக்ஃலைப் படத்திற்கு தடை.. கமல் மன்னிப்பு கேட்டால்தான் ரிலீஸ் பண்ணுவாங்களாம்!
Thug Life: கர்நாடகாவில் தக்ஃலைப் படத்திற்கு தடை.. கமல் மன்னிப்பு கேட்டால்தான் ரிலீஸ் பண்ணுவாங்களாம்!
Rinku Singh Wedding: திருமண தேதியை அறிவித்த ரிங்கு சிங் - பிரியா சரோஜை எங்கு? எப்போது? கரம்பிடிக்கிறார்..
Rinku Singh Wedding: திருமண தேதியை அறிவித்த ரிங்கு சிங் - பிரியா சரோஜை எங்கு? எப்போது? கரம்பிடிக்கிறார்..
முன்னாடி பின்னாடி என்ன இருந்தது.. லோகேஷ் கனகராஜ் படத்தை மிஞ்சிய கடத்தல்.. அதிகாரிகள் ஷாக்
முன்னாடி பின்னாடி என்ன இருந்தது.. திரைப்படத்தை மிஞ்சும் அளவுக்கு கடத்தல் சம்பவம்
Tata Punch Facelift: பெரிய டச்ஸ்க்ரீன், பிஜிடல் செண்டர் கன்சோல் - ஃபேலிஃப்டில் மிரட்டும் டாடா பஞ்ச் - EV டச்
Tata Punch Facelift: பெரிய டச்ஸ்க்ரீன், பிஜிடல் செண்டர் கன்சோல் - ஃபேலிஃப்டில் மிரட்டும் டாடா பஞ்ச் - EV டச்
M. Dhanapal Profile: கவுன்சிலருக்கு அடித்த ஜாக்பாட்.. எம்.பி சீட் கொடுத்த இபிஎஸ்.. யார் இந்த தனபால் ?
கவுன்சிலருக்கு அடித்த ஜாக்பாட்.. எம்.பி சீட் கொடுத்த இபிஎஸ்.. யார் இந்த தனபால் ?
Embed widget