Tata Punch Facelift: பெரிய டச்ஸ்க்ரீன், பிஜிடல் செண்டர் கன்சோல் - ஃபேலிஃப்டில் மிரட்டும் டாடா பஞ்ச் - EV டச்
New Tata Punch Facelift 2025: டாடா பஞ்ச் கார் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனில் ஏராளமான தொழில்நுட்ப அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

New Tata Punch Facelift 2025: டாடா பஞ்ச் கார் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனில் பெரிய டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் பெரிய டச்ஸ்க்ரீன் போன்ற் அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட்:
டாடா நிறுவனத்தின் 5 சீட்டர் சப்-காம்பேக்ட் எஸ்யுவி ஆன, பஞ்ச் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதை மேலும் மேம்படுத்தும் வகையில், ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் வரும் விழாக்காலத்தில் சந்தைப்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், அதன் உட்புற தொழில்நுட்ப அம்சங்களில் ஏராளமான அப்கிரேட்கள் வழங்கப்பட்டு இருப்பதன் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஸ்டைலிங்கில் மட்டுமின்றி தொழில்நுட்ப அம்சங்கள் ரீதியாகவும், டாடா பஞ்ச் அப்கிரேட்களை பெற உள்ளது. ஆனால், கசிந்த புகைப்படங்கள் அடிப்படையில் வெளிப்புற டிசைனில் பெரிய மாற்றங்கள் எதையும் பெறவில்லை.
கொட்டிக் கொடுக்கப்படும் தொழில்நுட்ப அம்சங்கள்:
பெரிய டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டர் மற்றும் 10.25 இன்ச் இன்ஸ்ட்ரும்மெண்ட் கிளஸ்டர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, இன்ஜின் எடிஷனானது மின்சார எடிஷனில் இருப்பதை போன்றே மாற்றங்களை பெற உள்ளது. அதன்படி, டச் பேனலுடன் கூடிய பிஜிட்டல் செண்ட்ரல் கன்சோல், காரை ஆன் செய்யும்ம்போது ஒளிரக்கூடிய டிஜிட்டல் லோகோவை கொண்ட ஸ்டியரிங் வீல் வழங்கப்பட உள்ளது. ஃபேஸ்லிஃப்டில் இடம்பெற்றுள்ள பிரதான மேம்படுத்தல்களாகைவை கருதப்படுகின்றன. இதுபோக தற்போதைய எடிஷனில் உள்ள வயர்லெஸ் சார்ஜிங், ஃபேப்டிக் சீட் அப்ஹோல்ஸ்ட்ரி, ஃப்ரண்ட் செண்டர் ஆம்ரெஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் அப்படியே தொடர உள்ளன.
விற்பனையை ஊக்குவிக்கும் நடவடிக்கை:
பஞ்ச் காரின் பெட்ரோல் எடிஷன் இந்தியாவிலேயே அதிகம் விற்பனை செய்யும் காராக உள்ளது. இந்நிலையில் வழங்கப்பட்டுள்ள புதிய மேம்படுத்தல்கள் விற்பனையை மேலும் ஊக்குவிக்கும் என நம்பப்படுகிறது.
இன்ஜின் விவரங்கள்:
ஃபேஸ்லிஃப்ட் எடிஷனில் தற்போதுள்ள இன்ஜினே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்கள் தொடரக்கூடும். அதேநேரம், இந்த வாகனம் விரைவில் சந்தைக்கு வராது என கூறப்படுகிறது. காரணம், புதிய சியாரா உள்ளிட்ட பல கார் மாடல்ளை அடுத்தடுத்து சந்தைப்படுத்த டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பஞ்ச் கார் மாடலின் தற்போதைய விலை ரூ.7 லட்சத்தில் தொடங்கி ரூ.12.32 லட்சம் ரூபாய் வரை நீள்கிறது. ஃபேஸ்லிஃப்டின் விலை அப்டேட்கள் காரணமாக கணிசமாக அதிகரிக்கக் கூடும் என கருதப்படுகிறது. வேரியண்ட் அடிப்படையில் ரூ.1 லட்சம் வரை விலை உயரக்கூடும். பஞ்சின் மேனுவல் எடிஷன் 20 கிலோ மீட்டரும், ஆட்டோமேடிக் எடிஷன் 18.8 கிலோ மீட்டரும் மைலேஜ் வழங்குகிறது.
வெளியீடு எப்போது?
சப் 4 மீட்டர் செக்மெண்டில் கடும் போட்டி உள்ள நிலையிலும், டாடா பஞ்ச் ஃபேச்லிஃப்ட் விற்பனையை மேலும் ஊக்குவிக்கும், லாபத்தை அள்ளி கொடுக்கும் என நம்பப்படுகிறது. நடப்பாண்டில் ஏற்கனவே சந்தைப்படுத்தலுக்கு திட்டமிட்டுள்ள வாகனங்களை கருத்தில் கொண்டால், அடுத்த ஆண்டில் தான் இந்த வாகனம் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. பஞ்ச் கார் மாடல் இந்திய சந்தையில் ஹுண்டாய் எக்ஸ்டர் மாருதி ஃப்ரான்க்ஸ் மற்றும் மாருதி இக்னிஸ் கார் மாடல்களிடமிருந்து போட்டியை எதிர்கொள்கிறது.





















