மேலும் அறிய
அறிவாலயத்தை மதுரையில் இடம் மாற்றம் செய்ததால் மதுரைக்கு என்ன லாபம் - ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு
சென்னை அறிவாலயத்தை மதுரையில் இடம் மாற்றம் செய்ததால் மதுரைக்கு என்ன வளர்ச்சி ஏற்பட்டுள்ளது - ஆர்.பி.உதயகுமார் அடுக்கடுக்கான கேள்வி

ஆர்.பி.உதயகுமார் கேள்வி
Source : whats app
தவறை மூடி மறைக்க சரணாகதி அடைந்து விட்டீர்கள். மக்களை பற்றி உங்களை சிந்திக்க நேரமில்லை
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில் ”இன்றைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மதுரையை சுற்றி பார்த்து உள்ளார். இதை திமுக ரோடு ஷோ என்று விளம்பரப்படுத்திக் கொண்டு வருகிறார்கள், இந்த விளம்பர வெளிச்சத்தில் தான் ஆட்சி நடைபெறுகிறது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும், இந்த விளம்பர வெளிச்சம் இல்லை என்று சொன்னால் எப்போது இந்த ஆட்சி முடிவுக்கு வந்திருக்கும். மதுரையை சுற்றிய முதலமைச்சருக்கு வளர்ச்சி திட்டங்களுக்கான அந்த விவரங்களை நிச்சயமாக உங்களுக்கு அதிகாரிகள் கொடுத்து இருப்பார்கள், அல்லது நீங்கள் மக்கள் மீது உள்ள அக்கறை இருந்தால் அதை பற்றி எல்லாம் விவரம் தெரிந்திருப்பீர்கள். மதுரை மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை நீங்கள் வளர்ச்சிக்கான திட்டங்களை செய்ய தவறியதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன், இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முன் வருவீர்களா என்று மதுரை மக்களுடைய எதிர்பார்ப்பாகும்.
மதுரையின் முக்கிய தேவை
முல்லைப் பெரியார் அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் இந்த முல்லைப் பெரியார் என்பது 5 மாவட்ட மக்களுக்கு ஜீவாதார பிரச்சினையாகும். அதேபோல தொழில் வளர்ச்சிக்காக இந்த தென் மாவட்டத்திற்காக அம்மா அவர்கள் மதுரை, தூத்துக்குடி எக்கனாமிக் ஹாரிடர் (பொருளாதார சாலை) உருவாக்கினார்கள் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு அதற்கான பல்வேறு பணிகள் நடைபெற்ற போது கூட தற்போது உங்கள் அரசிலே அது கிடப்பிலே போடப்பட்டிருக்கிறது முதல்வர் அவர்களே இதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அதேபோல மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வசந்த ராயர் மண்டபம் பணியை விரிவுபடுத்தி விரைவில் கும்பாபிஷேக பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் சாலை போடப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் பயன்பாட்டிற்கு இன்னும் வரவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் 525 தேர்தல் வாக்குறுதியை கொடுத்தீர்கள் அது குறிப்பாக மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று அறிவித்தீர்கள் அந்த அறிவிப்பு என்ன ஆனது? அதேபோல சிப்காட்டில் பயன்பாட்டு இல்லாமல் மூடியே இருக்கும் பல கோடி மதிப்பிலான ஒருங்கிணைந்த வேளாண் விற்பனை வணிகவளாகம் அதை எப்போது திறப்பீர்கள்? அதேபோல மதுரையில் எடப்பாடியார் பாரதப் பிரதமரை அழைத்து வந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தப் பணிகளை பார்க்க கூட உங்களுக்கு நேரமில்லை? திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் மேற்கூரை இடிந்து விட்டது அதிர்ஷ்டமாக ஆட்கள் இல்லாததால் எந்த இழப்பும் இல்லை. ஆகவே அரசு மருத்துவமனைக்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் பந்தல்குடி கல்வாய் பகுதியில் நீங்கள் வரும் பொழுது அந்த கால்வாயை நீங்கள் பார்க்கக் கூடாது என்று திரை போட்டு மறைத்தனர். மக்கள் எதிர்ப்பு காட்டியதால் அது அகற்றப்பட்டது. ஆகவே அந்த பந்தல்குடி கால்வாய் சீரமைக்க வேண்டும் அதேபோல அந்த கழிவு நீர் வைகை ஆற்றில் கலக்கிறது அதை நீங்கள் தடுக்க வேண்டும்” இப்படி மதுரையில் செய்ய வேண்டியவை மதுரையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மதுரையில் அறிவாலயம்
மேலும்..” இன்றைக்கு நாளெல்லாம் பிரச்னைகள் பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருள் நடமாட்டம் இதை எல்லாம் மூடி மறைக்கிற வகையில் எத்தனை பிரம்மாண்டத்தை போட்டாலும் சரி?அண்ணா அறிவாலயத்தை நீங்கள் சென்னையிலிருந்து மதுரையில் இடமாற்றம் செய்தாலும் சரி? தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்பது உறுதி. இன்றைக்கு நீங்கள் செய்த தவறினால் குடும்பயுத்தம், சகோதரி யுத்தம் என பல்வேறு செய்த தவறை மூடி மறைக்க சரணாகதி அடைந்து விட்டீர்கள். மக்களை பற்றி உங்களை சிந்திக்க நேரமில்லை” என கேள்வி எழுப்பியுள்ளார்.
.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















