புள்ள சந்தோஷம் தான் முக்கியம்; விவாகரத்துக்கு பின் ஒன்று சேர்ந்த தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! போட்டோஸ்!
மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவிற்காக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஒன்றாக இணைந்து வந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போது ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா மீது காதல் கொண்ட நிலையில், இருவரும் பெற்றோர் சம்மதத்துடன், கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிற்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று 2 மகன்கள் பிறந்தனர். இதைத் தொடர்ந்து தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி பிரிவதாக அறிவித்தனர். மேலும், குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரியும் மனு தாக்கல் செய்தனர். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு 2 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி சென்னை குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.
அதன் பிறகு இருவரும் அவர்வர் வேலைகளில் ரொம்பவே பிஸியாக இருந்தனர். மேலும், இருவரும் பெரும்பாலும் சந்திப்பதை தவிர்த்து வந்தனர். அதோடு சந்திக்கும் சூழல் இருந்தாலும் பேசிக் கொள்ளவில்லை. இந்த நிலையில் தான் மூத்த மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர். சென்னையில் உள்ள அமெரிக்கன் இண்டர்நேஷனல் பள்ளியில் யாத்ரா தனது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். இதையடுத்து இன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் மகனுக்காக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர். அப்போது யாத்ரா அப்பா - அம்மா இருவரையும் கட்டி அணைத்து பாசத்தை வெளிப்படுத்தினார்.
விவாகரத்துக்கு பிறகு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா முதல் முறையாக இந்த பட்டமளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அதுவும் மகனுக்காக இருவரும் ஒன்றாக இணைந்தது சமூக வலைதளங்களில் பாராட்டுக்களையும், விமர்சனங்களையும் பெற்று வருகிறது.




















