என்னை யாரும் இயக்கவில்லை... எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு - ராமதாஸ்
கட்சியில் எந்த குழப்பமும் இல்லை எல்லாவற்றுக்கும் தீர்வு உண்டு தன்னை பின்னாடி இருந்து யாரும் இயக்கவில்லை - பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்

விழுப்புரம்: பாமகவில் ஒருவரின் செயல்பாட்டை பார்த்து கட்சி நிர்வாகிகள் மாற்றம் இருக்கும், கட்சியில் எந்த குழப்பமும் இல்லை எல்லாவற்றுக்கும் தீர்வு உண்டு தன்னை பின்னாடி இருந்து யாரும் இயக்கவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், பூம்புகாரில் ஆகஸ்ட் 10ஆம் தேதி மகளிர் மாநாடு நடைபெற உள்ளதாகவும் முழுக்க முழுக்க பெண்கள் கலந்துக்கொள்ளும் மாநாடு என்பதால் லட்சக்கணக்கான பெண்கள் கலந்துகொள்வார்கள் அந்த மாநாட்டிற்கு வன்னியர் சங்க தலைவர் புதா. அருள்மொழி தலைவராக செயல்படுவார் என கூறினார். அன்புமனி தான் தலைவராக செயல்படுவேன் நீங்கள் வழிகாட்டியாக செயல்படுவீர்கள் என அன்புமணி தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த ராமதாஸ் ஒவ்வொரு கட்சியிலும், நாட்டிலும் நடப்படுதுதான் இதனை பெரிதுபடுத்த வேண்டாம் என கூறினார். மகளிர் மாநாட்டிற்கு அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ்
மகளிர் மாநாட்டிற்கு எல்லோருக்கும் அழைப்பு உண்டு யாரையும் கலந்துக்கொள்ள வேண்டாம் என சொல்லப்போவதில்லை, எந்த முரன்பாடும் இல்லை என தெரிவித்தார். பாமகவில் தனக்கு தான் அதிகாரம் என்று அன்புமணி ராமதாஸ் கூறுவது குறித்த கேள்விக்கு சட்டதிவிகளை நான் பார்க்கவில்லை நாளை சொல்கிறேன் என முழுப்பலான பதிலை ராமதாஸ் அளித்தார்.
ராமதாசை பின்னாடி இருந்து ஒரு நபர் இயக்குவதாக செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர் என்னை யாராலும் இயக்க முடியாது 95 ஆயிரம் கிராங்களுக்கு சென்று மக்களை சந்தித்து 46 ஆண்டுகளாக அரசியலில் பயணிப்பதாகவும், இன்னும் எத்தனை ஆண்டுகள் பயனிப்பேன் என தனக்கே தெரியாது உங்களின் ஒத்துழைப்போடு பயனிப்பேன் என தெரிவித்தார். பொருளாளர் திலகபாமா நீக்கப்பட்டது சிறுபான்மையினரை நியமிக்கு வேண்டும் என்ற விதி உள்ளதால் அதனால் நீக்கியதாகவும் கடந்த காலங்களில் அப்படித்தான் இருந்தது, இடையில் இருவரை நியமித்திருத்தோம் தற்போது மீண்டும் ஒரு சிறுபான்மையினருக்கு கொடுத்துள்தாக கூறினார்.
அன்புமணி சுந்ததிரமாக செயல்படுவதாக கூறுவது ஒவ்வொரு மனித அமைப்பின் கடமை அது அவர் உரிமை என்றும் கட்சி நிர்வாகிகள் மாற்றம் என்பது நிர்வாகிகள் போவார்கள், வருவார்கள் ஒருவர் போனோல், ஒன்னொருவர் வருவார். ஒருவரின் செயல்பாட்டை பார்த்து கட்சி நிர்வாகிகள் மாற்றம் இருக்கும், கட்சியில் எந்த குழப்பமும் இல்லை எல்லாவற்றிக்கும் தீர்வு உண்டு உலகத்தில் எத்தனையோ அதிசயங்கள் நடைபெறுகிறது எது எப்போ நடக்கும் என கூற முடியாது. பொதுக்குழு கூட்டுவது குறித்து யோசிக்கவில்லை என பாமக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.




















