Peanut Oil Benefits: இளமையான சருமம்! உடல் எடை கட்டுப்பாட்டுக்கு கடலை எண்ணெய் சிறந்த தீர்வு! எப்படி தெரியுமா?
வேர்க்கடலை எண்ணெய்யை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பல்வேறு நன்மைகளை பெற முடியும்.
சமையல் எண்ணெய் நம் அன்றாட சமையலில் முக்கிய பங்கு வகிக்கின்றது. சந்தையில் ஏராளமான சமையல் எண்னெய்கள் கிடைத்தாலும் அனைத்துமே ஆரோக்கியமானது என்று சொல்லி விட முடியாது. ஒரு சில எண்ணெய்களில் தான் ஆரோக்கிய குண நலன்கள் அடங்கி உள்ளன. தற்போது நாம் பல்வேறு ஆரோக்கிய நலன்களை உள்ளடக்கிய கடலை எண்ணெயின் நன்மைகள் குறித்து தான் பார்க்கப் போகின்றோம்.
1. இதய ஆரோக்கியத்திற்கு நல்லது:
கடலை எண்ணெய் இதயத்திற்கு சிறந்தது என கூறப்படுகிறது. ஏனென்றால், கடலை எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது.
2. உடல் எடை குறைக்க உதவும்:
உடல் எடையை குறைப்பதில் கடலை எண்ணெய் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. இதில் ஒலிக் அமிலம் என்ற குறிப்பிட்ட கொழுப்பு உள்ளது, இது பசியை அடக்க உதவுகிறது. இதனால் நீங்கள் குறைவான கலோரிகளை உட்கொள்வீர்கள். இதன் காரணமாக உடல் எடை குறைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகின்றது. வேர்க்கடலை எண்ணெயை உட்கொள்பவர்கள் தங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை மாற்றியமைக்க சிறந்த வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
3. இன்சுலின் அளவை உயர்வதை கட்டுப்படுத்தும்:
வேர்க்கடலை எண்ணெய் இன்சுலின் அளவு உயர்வதை கட்டுப்படுத்தும் என சொல்லப்படுகிறது. இந்த எண்ணெயில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் செரிமான மண்டலத்தில் சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்க உதவுகிறது. இது இரத்த சர்க்கரை அளவுகளில் திடீர் அதிகரிப்பை ஏற்படுத்தாது என சொல்லப்படுகிறது.
4. முகப்பருவை குறைக்க உதவும்:
கடலை எண்ணெய் முகப்பரு தொடர்பான பிரச்சனைகளையும் குறைக்க உதவும் என சொல்லப்படுகிறது. இந்த எண்ணெய் ஆக்ஸிஜனேற்றங்களால் செறிவூட்டப்பட்டுள்ளது மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இதன் காரணமாக, இது சருமத்தின் வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவுவதாக சொல்லப்படுகிறது. வேர்க்கடலை எண்ணெய் முகத்தில் தோன்று கோடுகள் மற்றும் சுருக்கங்களை குறைக்க உதவுவதாகவும் சொல்லப்படுகிறது.
5. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது:
வேர்க்கடலை எண்ணெய் உங்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் என சொல்லப்படுகின்றது. வேர்க்கடலை எண்ணெயில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இது உங்கள் தலைமுடியை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. இது மயிர்க்கால்களை வலுப்படுத்த உதவுகிறது மற்றும் வெப்பப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் எந்த சேதத்தின் விளைவுகளையும் குறைக்கும் என கூறப்படுகிறது. சில ஆய்வுகள் பொடுகுவராமல் தடுக்கவும் வேர்க்கடலை எண்ணெய் உதவும் என கூறப்படுகிறது.