Top 10 News Headlines: மணிப்பூரில் மீண்டும் பதற்றம்! விஷவாயு தாக்கி தூய்மைப்பணியாளர் பலி - டாப் 10 செய்திகள்
Top 10 News Headlines Today June 8: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

மணிப்பூரில் மீண்டும் பதற்றம் இணைய சேவை துண்டிப்பு
மெய்தி சமூகத்தை சேர்ந்த ஆரம்பை டெங்கோல் அமைப்பின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, இம்பாலில் ஆங்காங்கே போராட்டங்கள், துப்பாக்கிச்சூடு சம்பவங்கள், போராட்டங்கள் தலைதூக்கியதால் பதற்றம் அதிகரிப்பு; அடுத்தடுத்த கிளர்ச்சிகளால் மீண்டும் அமைதியின்மை. குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ள மணிப்பூரில், வன்முறை காரணமாக ஜூன் 7 நள்ளிரவில் இருந்து இம்பால் மேற்கு, தவுபால், காக்சிங், விஷ்ணுபூரில் 5 நாட்களுக்கு இணையச்சேவை தடை
பேச விருப்பமில்லை
"டெஸ்லா தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்கிடம் பேசுவதற்கு நான் தயாராக இல்லை. அவர்தான் மீண்டும் என்னிடம் பேச விரும்புகிறார். அவருடனான உறவு முடிந்து விட்டது. அதை புதுப்பிக்க நான் விரும்பவில்லை" என அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு
6000-ஐ நெருங்கும் கொரோனா
6,000ஐ நெருங்கும் தொற்று பாதிப்பு இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,755ஆக உயர்வு. நேற்று மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிக்கை
தேர்தல் ஆணையம் பதில்
"மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு கடந்த டிசம்பர் மாதமே பதில் தரப்பட்டுள்ளது. இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புவது தேர்தல் ஊழியர்களை அவமதிப்பதாகும்"தேர்தலில் முறைகேடு செய்து பாஜக வெற்றி பெற்றதாக ராகுல்காந்தி எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் பதில்.
சிறுவனை கடித்து குதறிய நாய்
ஓசூர் நாகொண்டபள்ளியில் வீட்டின் அருகே விளையாடிய 3 வயது சிறுவனை கடித்து குதறிய தெருநாய். உடலின் பல பகுதிகளில் பலத்த காயம். | சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள் நாயிடம் இருந்து அவனை மீட்டு சிகிச்சைக்காக ஒசூர் அரசு மருத்துவனையில் அனுமதித்தனர். தலை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் காயமடைந்த சிறுவனுக்கு 10 தையல்கள் போடப்பட்டு
சிகிச்சை. அதிகரிக்கும் தெருநாய்களை கட்டுப்படுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை.
விஷவாயு தாக்கி தூய்மைப்பணியாளர் பலி
தூத்துக்குடி: திருச்செந்தூரில் கழிவுநீர் அகற்றத்தின்போது விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு. கழிவுநீர் அகற்றும்பணியின்போது பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்த மணியை விஷவாயு தாக்கியது; விஷவாயு தாக்கி பலியான மணி திருச்செந்தூர் நகராட்சி ஒப்பந்த தூய்மைப்பணியாளர் ஆவார்
விமானத்தை தவறவிட்ட பெண்... காத்திருந்த ட்விஸ்ட்!
மகாராஷ்டிரா: சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யவிருந்த பெண்ணொருவர், ஜல்கானில் இருந்து அம்மாநில தலைநகருக்கு செல்லும் விமானத்தை கடைசிநேரத்தில் தவறவிட்டுள்ளார்; இதையறிந்த துணை முதல்வர் ஏசுநாத் ஷிண்டே அப்பெண்ணுக்கு உதவி அப்பெண்ணையும் அவரது கணவரையும் தான் செல்லும் தனி விமானத்தில் மும்பைக்கு ஏக்நாத் ஷிண்டே அழைத்துச் சென்ற சம்பவம் கவனம் பெற்று வருகிறது
10 மணி நேரம் வேலை
தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தியது ஆந்திரப்பிரதேச அரசு; இந்த முடிவு உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், புதிய முதலீடுகளை ஈர்க்கவும் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
நிவரண தொகை அதிகரிப்பு:
RCB வெற்றி கொண்டாட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும்
பாஜக ஆலோசனை:
இன்று தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் மதுரை வேலம்மாள் திடலில் இன்று மாலை 3 மணியளவில் நடைபெறுகிறது. பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் கோட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.சட்டமன்றத் தேர்தல் கூட்டணி, தோழமைக் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆலோசனை






















