News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

ரம்ஜான் இஃப்தாருக்கு ரெசிப்பிகள் தெரியலையா? மனதை நிறைக்கும் இந்த ரெசிப்பிகளை ட்ரை பண்ணுங்க..

புனித ரமலான் மாதம் தொடங்கிய நிலையில் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்துவருகின்றனர்.

FOLLOW US: 
Share:

ரம்ஜானில் வீட்டிற்கு வரும் உறவுகளுக்கு சிக்கன் சவர்மா, ஸ்டஃப்டு டேட்ஸ் மற்றும் ப்ளூ சீஸ், கீமா சமோசா போன்ற சுவையான உணவுகளை செய்துகொடுத்து அசத்துங்கள்.

புனித ரமலான் மாதம் தொடங்கிய நிலையில் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்துவருகின்றனர். இந்த நோன்பிற்கு பிறகு உலகம் முழுவதும் ரமலான் எனப்படும் ரம்ஜான் பண்டிகை வருகின்ற மே 2 அல்லது 3-ஆம் தேதி கோலாகமாக கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் நோன்பு முடிந்து இறைவனை வேண்டி தொழுகை நடத்துவதோடு மட்டுமின்றி, ஏழைகளுக்கு உதவி செய்வதற்கும் சரியான சமயமாக இது உள்ளது. மேலும் ரம்ஜான் என்றாலே எப்போது பிரியாணி கிடைக்கும் காத்திருப்பார்கள். 

இந்தப் பிரியாணியோடு  இந்நாளில் வீட்டிற்கு வரும் உறவுகளுக்கும் மற்றும் ஏழைகளுக்கும் சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவு செய்துகொடுக்க வேண்டும் என்றால் இத கொஞ்சம் ட்ரை பண்ணலாம்.

ஸ்டஃப்டு டேட்ஸ் மற்றும் ப்ளூ சீஸ் : 

ரமலான் பண்டிகையின் போது ப்ளூ சீஸ் மற்றும் டேட்ஸ் ஆகிய இரண்டையும் சேர்த்து சாப்பிடும்=போது உணவிற்கு கூடுதல் சுவையை நமக்கு கொடுக்கும்.

மூளை கட்லெட் :

மூளை கட்லெட் செய்வதற்கு முதலில், மட்டனில்  உள்ள மூளையை எடுத்து அதை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அதோடு பூண்டு, மிளகாய், இஞ்சி உள்ளிட்ட கலவையைச் சேர்த்து, இறுதியாக முட்டை கருவில் நனைக்கவும். பின்னர்  உதிர்க்கப்பட்ட பிரெட் தூளைக் கலந்துப் பொரித்து எடுத்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.

சிக்கன் சவர்மா:

மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் பிரபலமான சிக்கன் சவர்மா தற்போது இந்தியாவிலும் அதிகளவில் விற்பனையாகி வருகிறது. சிக்கன் மற்றும் இதர மசாலா ஆகியவற்றைச்சேர்த்து, தயிரில் ஊற வைத்துப்பின்னர் அதனை மைதா அல்லது பிரெட் உள்ளே ஸ்டெஃப் செய்து கொடுக்கும் போது சுவையாக மட்டுமில்லாமால் உறவுகளுக்கு புதிதான டிஸ்ஸாக சிக்கன் சவர்மா அமைகிறது.

இறைச்சியில் மிருதுவாகவும், மொறு மொறுப்பாகவும் தயார் செய்யப்படும் ஸ்நாக்ஸ் தான் ஹலீம் கே கபாப். இது ரம்ஜானுக்கு புதிய டிஸ்ஸாக அமையும்.

இதேபோன்று கீமா சமோஸா, போட்டீ கெபாப்ஸ், மட்டன் டகா டக் லஹோரி ஸ்டைல், மட்டன் எலும்பு சூப் போன்றவையும் ரமலான் விருந்திற்கு கூடுதல் சுவையை நமக்கு அளிக்கும் . எனவே இத மறக்காமல் நீங்கள் கொஞ்சம் டிரை பண்ணி பாருங்கள்.

காரமாக இதுபோன்ற உணவுகளை சாப்பிட்டுவந்த நீங்கள், கொஞ்சம் இனிப்போடு ரமலான் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று நினைத்தால்,டேட்ஸ் மற்றும் அத்திப்பழத்தில் செய்யப்பட்ட ஸ்நாக்ஸ் வகைகளை நீங்கள் டிரை பண்ணலாம். டேட்ஸ், அத்திப்பழம் மற்றும் பட்டர் ஆகியவற்றின் கலவை உங்களுக்கு நல்ல ஆப்ஷனாகவே இருக்கும்.

Published at : 25 Apr 2022 02:10 PM (IST) Tags: deligious food Ramzan Special ramzan food

தொடர்புடைய செய்திகள்

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

டாப் நியூஸ்

பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!

பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!

ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?

ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு

Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?

Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?