Healthy Dosa Recipes: சிறுதானிய தோசை செய்வது இவ்வளவு எளிதானதா? இதைப் படிங்க!
Healthy Dosa Recipes: சிறுதானிய தோசை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.
தோசை ரொம்பவே பிடிக்கும் என்பவர்கள் சிறுதானியங்கள், காய்கறிகளில் தோசை செய்து சாப்பிடலாம். அது உடல்நலனுக்கும் நல்லது. பீட்ரூட், கேரட், தக்காளி, மரவள்ளிக் கிழங்கு, பச்சைப் பயறு, கொண்டைக்கடலை, கேழ்வரகு, கம்பு உள்ளிட்டவற்றில் தோசை செய்து சாப்பிடலாம்.
பச்சைப் பயறு தோசை
என்னென்ன தேவை?
இட்லி பச்சரிசி - ஒரு கப்
பச்சைப் பயறு - ஒரு கப்
சிகப்பு மிளகாய் - 2 (தேவையான அளவு)
சீரகம் - ஒரு டீஸ்பூன்
வெந்தயம் - அரை கப்
கருப்பு உளுந்து - அரை கப்
இஞ்சி - சிறிய துண்டு
கொத்தமல்லி - சிறிதளவு
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இட்லி அரிசி ஒரு கப், பச்சை பயறும் உளுந்து,வெந்தயம் எல்லாவற்றையும் தனியே ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் வரை ஊர வைக்கவும். கொத்தமல்லி, கருவேப்பிலை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும். இதை மிக்ஸர் கிரைண்டரிலும் அரைக்கலாம். மிக்ஸியிலும் அரைக்கலாம். உளுந்து வெந்தயத்தை முதலில் அரைத்து எடுத்துக்கொள்ளவும். அரிசி, பச்சைப் பயிறு, சிகப்பு மிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக அரைத்து உப்பு சேர்த்து உளுந்து மாவுடன் கலந்து வைத்தால் மாவு தயார். 4-5 மணி நேரம் கழித்து மாவு மேலெந்து வந்ததும் தோசை செய்தால் சுவையாக இருக்கும்.
அடுப்பில் தோசை கல்லை மிதமான தீயில் வைக்கவும். அதில், நெய் அல்லது எண்ணெய் சேர்த்து தோசை ஊற்றவும். இரண்டு புறமும் பொன்னிறமாகியதும் தோசை ரெடி. இதை தேங்காய் சட்னி, கார சட்னி உடன் சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். தோசை ஊற்றும்போது அதிகம் எண்ணெய் சேர்க்க வேண்டாம்.
முடக்கத்தான் தோசை
என்னென்ன தேவை?
இட்லி பச்சரிசி - ஒரு கப்
முடக்கத்தான் கீரை - 2 கப்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
வெந்தயம் - அரை கப்
கருப்பு உளுந்து - அரை கப்
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இட்லி அரிசி ஒரு கப், பச்சை பயறும் உளுந்து,வெந்தயம் எல்லாவற்றையும் தனியே ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் வரை ஊர வைக்கவும். கொத்தமல்லி, கருவேப்பிலை நன்றாக சுத்தம் செய்து மாவு அரைக்கும்போது சேர்க்கலாம். முடக்கத்தான் கீரையை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இதை மிக்ஸர் கிரைண்டரிலும் அரைக்கலாம். மிக்ஸியிலும் அரைக்கலாம். உளுந்து வெந்தயத்தை முதலில் அரைத்து எடுத்துக்கொள்ளவும். அரிசியை அரைத்து இட்லி, தோசை மாவுக்கு அரைக்கும் முறைதான். இறுதியான முடக்கத்தான் இலைகளை அதில் சேர்த்து அரைக்க வேண்டும் அரைத்து உப்பு சேர்த்து உளுந்து மாவுடன் கலந்து வைத்தால் மாவு தயார். 4-5 மணி நேரம் கழித்து மாவு மேலெந்து வந்ததும் அல்லது புளித்ததும் தோசையா ஊற்றி சாப்பிடலாம். முடக்கத்தான் தோசை சற்று கசப்புத்தன்மையுடன் இருக்கும். காரமான சட்னி சேர்த்து சாப்பிடுவது நல்லது. இல்லையெனில் இட்லி பொடி உடன் சாப்பிடலாம்.
கேழ்வரகு, கம்பு தோசைக்கும் இதே செய்முறைதான். தோசைக்கு மாவு அரைக்கும் போது, 2 கப் சிறுதானியத்தை ஊறவைத்து சேர்க்க வேண்டும். அரிசி ஒரு கப் (குறைவாக இருக்க வேண்டும்) இருந்தால் போதுமானது. பீட்ரூட், மரவள்ளிக்கிழங்கு, தக்காளி தோசையும் எளிதாக செய்து விடலாம். தோசை மாவுடன் இவற்றில் ஏதாவது ஒன்றை அரைத்து சேர்த்துவிட்டால் போதும். வாரத்திற்கு ஒரு முறை இவற்றை செய்து சாப்பிடலாம்.