Pandian Stores 2: புதிய மையில் கல்லை எட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் குழு! குவியும் வாழ்த்து!
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் தான் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' இந்த சீரியல் குழுவினருக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு சில தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாக நல்ல வரவேற்பை பெரும் சீரியல்களின் இரண்டாம் பாகத்தையும் எடுக்கிறார்கள். அந்த வகையில் , 2018 ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை 1300 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பான சீரியல் தான், 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'.
இந்த சீரியல் முடிவுக்கு வந்த உடனே... கதைக்களம் மற்றும் கதாபாத்திரத்தில் சிறு மாறுதல்களுடன் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியல் துவங்கப்பட்டது. அக்டோபர் மாதம் 2023-ஆம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், முதல் பாகத்தில் அண்ணனாக நடித்த ஸ்டாலின், அப்பாவாக புரோமோட் ஆனார். அதே போல் முதல் பாகத்தில் அண்ணண் - தம்பிகள் இடையே உள்ள பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வந்த இந்த தொடர், இரண்டாவது பாகத்தில், அப்பா - பிள்ளைகள் இடையே உள்ள உறவை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.

ஸ்டாலினுக்கு ஜோடியாக நடிகை நிரோஷா நடிக்க, முதல் பாகத்தில் நடித்த வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார் ஆகியோர் இந்த பாகத்திலும் கணவன் - மனைவியாக நடித்து வருகிறார்கள். இவர்களை தவிர விஜே கதிரவன், ஆகாஷ் பிரேம் குமார், ஷாலினி, உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்த சீரியல் ஆரம்பத்தில் கொஞ்சம் டல் அடித்தாலும், தற்போது விறுவிறுப்பின் உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் அரசியின் திருமணம் தான். தற்போது அரசி தனக்கு திருமணம் ஆகவில்லை, குமரவேலுவை பழிவாங்குவதற்கு தான் அந்த வீட்டில் இருப்பதாக கூறியுள்ளதால் அடுத்து என்ன நடக்கும் என யூகிக்க முடியாத அளவுக்கு சுவாரஸ்யமாக இந்த சீரியல் சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தான், 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியல் புதிய மையில் கல்லை எட்டி உள்ளது. அதாவது இந்த சீரியல் 500-ஆவது எபிசோடை எட்டியுள்ளது. பல சீரியல்கள் வந்த வேகத்தில் கிளைமேக்ஸை நெருங்கும் நிலையில், இந்த சீரியல் தற்போது 500 எபிசோடை தொட்டுள்ளதால் சீரியல் குழுவினர் உச்சாகத்தில் உள்ளனர். ரசிகர்களும் இவர்களுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.





















