Ford Mustang: மஸ்டாங் காரில் வந்திறங்கி மாஸ் காட்டிய வடா பாவ் விற்கும் பெண் - நீங்களே பாருங்க!
Ford Mustang: ‘வடா பாவ் கேர்ள்’ என்று சமூக வலைதளங்களில் பிரபலமான சந்திரிகா மஸ்டாங் காரில் உலா வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லியைச் சேர்ந்த வடாபாவ் (Vada Pav) கடை நடத்திவரும் சந்திரிகா தீட்சித் (Chandrika Dixit) ஃபோர்டு மஸ்டாங் (Ford Mustang) உடன் பதிவிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
50rs ka ek vadapav bech rhi hai aur uparse itna attitude 😶 log bhi pagal hai pic.twitter.com/BLZsWZUNA1
— Aditi. (@Sassy_Soul_) April 1, 2024
வடா பாவ் சந்திரிகா:
புது டெல்லியில் உள்ள 'Mongolpuri' பகுதியில் வடா பாவ் ஸ்டால் வைத்துள்ளார் சந்திரிகா. வட இந்திய உணவுகளில் மிகவும் பிரபலமானது வடாபாவ் (Vada Pav). பாவ் பன், உருளைக் கிழங்கு வைத்து செய்யப்படும் ஸ்டஃபிங்க், புதினா சட்னி, காரத்திற்கு சேர்க்கப்படும் பொடி (மிளகாய், நிலக்கடலை கொண்டு தயாரிக்கப்படும்) - இதன் சுவை தனிரகம். வட இந்திய மாநிலங்களுக்கு சென்றால் வடா பாவ் கடைகளை நிறைய காணலாம்.
அப்படி, தலைநகரில் வடா பாவ் கடை வைத்திருப்பவர் சந்திரிகா. இவர் ‘வடா பாவ் கேர்ள்’ என்று அழைக்கப்படுகிறார். சமீபத்தில், இவர் ஸ்டாலுக்கு அருகில் சிறப்பு வடா பாவ் திருவிழா நடத்தினார். அப்போது சாலையில் ஏற்பட்ட கூட்டத்தால் டெல்லி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
View this post on Instagram
மஸ்டாங்கில் உலா வந்து அசத்தல்:
இப்போது சந்திரிகா புகழ்பெற்ற ஃபோர்டு மஸ்டாங்க் காரில் வந்து இறங்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. வீடியோயில் சந்திரிகா மஸ்டாங் காரை ஓட்டி வருகிறார். அதை பலரும் பார்த்து ரசிக்கின்றனர். அதோடு மட்டுமல்லாமல், “ உங்களுக்காக புதிய அறிவிப்பு..விரைவில்..” என்று சொல்கிறார் அவர்.
View this post on Instagram
சந்திரிகா ரூ.70 லட்சம் மதிப்பிலான சொகுசு கார் வைத்திருக்கும் வீடியோவிற்கு பலரும், ‘இனிமே ஃபோர்டு மஸ்டாங்கில் வடா பாவ் விற்பார்.’ என்று கமென்ட் செய்து வருகின்றனர்.