மேலும் அறிய

சங்கிகளின் ஊது குழல் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சேகர்பாபு காட்டம்

சங்கிகளின் ஊதுகுழலாக எடப்பாடி பழனிசாமி மாறி , அவர்கள் எழுதிக் கொடுப்பதை தனது பிரச்சாரத்தில் பேசி வருகிறார்.

எத்தனை இடையூறுகள் வந்தாலும் நிறைவு செய்யும்

சென்னை புளியந்தோப்பில் அன்னம் தரும் அமுத கரங்கள் நிகழ்ச்சி இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு பொது மக்களுக்கு உணவு வழங்கிய  பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்;

அன்னம் தரும் அமுத கரங்கள் நிகழ்ச்சி 141 வது நாளாக 1200 மக்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டிருக்கிறது. எத்தனை இடையூறுகள் வந்தாலும் இந்த நிகழ்ச்சி ஓராண்டை நிச்சயமாக நிறைவு செய்யும். இந்த ஆட்சி பொறுப்பெற்ற பிறகு தான் அன்ன தானம் அதிகரித்திருக்கிறது.

இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கிட்டத்தட்ட 132 கோடி செலவில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் செயல்பட்டு கொண்டிருக்கின்ற 25 பள்ளிகள்  ஒரு பாலிடெக்னிக் கல்லூரி ஒன்பது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இவைகளில் பயலுகின்ற  22,450 மாணவர்களுக்கு தேவையான புதிய வகுப்பறைகள் ஆய்வரங்கங்கள் நூலகங்கள் என  கூடுதல் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

 அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தோம். பல தடைகளை மீறி நீதிமன்றத்தின் நெடிய போராட்டத்திற்கு பிறகு நான்கு கல்லூரிகளை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறார். அந்த நான்கு கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 2500 ஐ தாண்டி இருக்கிறது. வறுமை கோட்டிற்கு கீழே இருக்கக் கூடிய மக்கள் தான் அதிகமாக இந்த கல்லூரியில் பயன் பெற்று வருகிறார்கள்.

அதிமேதாவி இபிஎஸ் 

நேற்றைக்கு முன்தினம் அதிமேதாவி தனமாக தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அறிய பல சொற்களை சரித்திரத்தில் இடம் பெறுகிற அளவிற்கு சொற்களை கூறியிருக்கிறார். இந்த ஆட்சியில் கலைக் கல்லூரிகளை அரசின் சார்பிலே துவங்கப்பட வேண்டிய தானே என்கிறார். இந்த ஆட்சியில் கலைக் கல்லூரி அரசியல் சார்பில் துவங்கி இருக்கிறோம். 41 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை இந்த அரசு துவங்கி இருக்கிறது. அறநிலையத் துறையில் அறப்பணி, கல்விப் பணியையும் இந்த ஆட்சி செழுமையுடன் நடத்தி வருகிறது.

எதிர்க் கட்சி தலைவர் கூறிய கூற்றுப்படி பார்த்தால் 1966 ஆம் ஆண்டு சென்னை மாகாண  அட்வகேட் ஜெனரல் சி பி ராமசாமி தலைமையில் இந்து சமய அறநிலைத்துறைக்கு வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தந்த அறிக்கை 1962 ஆம் ஆண்டு கல்வி நிலையங்களை தோற்றுவிக்க வேண்டும் என்று அறிக்கை கொடுத்தது. இவர்கள் உட்கார்ந்து இடத்தில் சொல்லவில்லை இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்த அறிக்கை அன்றைக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

சோழர் காலத்தில் கூட மிகப் பெரிய கல்விச் சோலை இருந்து 11 படப்பிரிவுகள் இடம் இடம் பெற்றிருந்ததாகவும் கல்வெட்டு கூறுகிறது. வரலாற்றில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கல்வி நிலையங்களும் , மருத்துவ நிலையங்களும் மன்னர்களால் தோற்றுவிக்கப்பட்டிருந்தது என்பதற்கு பல சான்றுகள் இருக்கிறது. 

சங்கிகளின் கூடாரம் மகிழ்ச்சி அடைய இபிஎஸ் பேச்சு

கோயில் கட்டிடங்களை போன்ற பிரிவுகளை உள்ளடக்கி கல்லூரிகளை தொடங்கலாம் என்று இந்து சமய அறநிலைத்துறை உடைய சட்டமே சொல்கிறது. அந்த வகையில் தான் புதியதாக இந்த ஆட்சியில் நான்கு கல்லூரிகள் தொடங்கப்பட்டது. ஆந்திரா கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் இது போன்று கல்லூரிகள் பல்கலைக் கழகங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த ஆட்சியை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக அவதூறு கற்பிக்க முடியவில்லை என்பதற்காக புதியதாக சேர்ந்திருக்கின்ற சங்கிகளின் கூடாரம் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக நேற்றைய முன் தினம் எதிர்க்கட்சி தலைவர் பல முரணான வார்த்தைகளை பேசியிருக்கிறார்.

நேற்றைக்கு முன்தினம் அவர் கோயம்புத்தூரில் பேசுகின்ற போது அவருடைய அருகாமையில் அம்மன் அர்ஜுன் என்ற சட்டப்பேரவை உறுப்பினர் நின்று கொண்டிருந்தார். அவர் இதே சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெறும் போது அவர் மாவட்டத்திற்கு மருதமலை திருக்கோயில் சார்ந்த இடத்திற்கு  ஒரு பொறியியல் கல்லூரி வேண்டும் என கோரிக்கை வைத்தார்.  

எப்படி கோயில் நிதியில் இருந்து கல்விக் கூடங்களை நடத்தலாம் என்று கேட்கின்ற எடப்பாடி பழனிசாமி  கேட்கிறார். அவரது தலைவர் முன்னாள் முதலமைச்சர் 2014 அருள்மிகு பழனி ஆண்டவர் தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் 
கூடுதல் கட்டடங்களை திறந்து வைத்திருக்கிறார்கள். பள்ளி கல்லூரிகளுக்காக அவர்களது ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில்  திறந்து வைக்கப்பட்டு இருக்கிறது. 

பழனிசாமி பேசியது கண்டிக்கதக்கது

கடந்த ஆட்சிக் காலங்களிலேயே இந்து சமய அறநிலைத்துறை சார்பாக எண்ணற்ற பள்ளிகள் கல்லூரிகள் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. வரலாறு தெரியாமல் இப்போது சேர்ந்திருக்கிற சங்கீகள் வைக்கின்ற கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு கோயில்கள் இந்து சமயநிலையத் துறையில் இருந்து விடுபட வேண்டும் என பாஜகவுக்கு ஊதுகோலாக இருந்து கோயம்புத்தூரில் நடைபெற்ற பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி பேசியது கண்டிக்கத்தக்கது. தகுந்த பாடத்தை மக்கள் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பரிசாக அளிப்பார்கள்.

அவர் காலத்தில் அவர் இந்து சமய அறநிலையத் துறையினுடைய வருமானத்தை எடுத்து கல்லூரிக்கு கூடுதல் கட்டணங்களை திறந்து இருக்கிறார். அவருக்கு இந்த பதவி கிடைக்க காரணமாக இருந்த அம்மையார் ஆட்சி காலத்தில் இந்த சமய அறநிலை துறை சார்பாக கல்லூரிகள் கட்டப்பட்டிருந்தது. அதையும் சதி செயல் என்கிறாரா ? 

அரசு நிதி இல்லை

பாஜக என்ற மலைப் பாம்பால் கொஞ்சம் கொஞ்சமாக அதிமுக என்ற சங்கிகள் கூட்டம் விழுங்கப்பட்டு வருகிறது. காலப் போக்கில் இந்த கட்சி தானாக கலையும். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இந்த சமய அறநிலையத்துறை சார்பாக கட்டப்பட்ட கல்வி கட்டடங்கள் அனைத்தும் இந்த சமய அறநிலையத்துறை வருமானத்திலிருந்து கட்டப்பட்டது தான் அது அரசின் நிதியிலிருந்து கட்டப்பட்டது அல்ல என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன். அறியாமையில் இருக்கிற எதிர்க்கட்சித் தலைவர் சங்கிகள் கூட்டம் எழுதிக் கொடுப்பதை  அப்படியே வாசித்து வருகிறார். அவர் வெல்வோம் என்கிறார் , தேர்தல் வரட்டும் நாங்கள் கொல்வோம் என மக்கள் சொல்கிறார்கள். 

வல்லக்கோட்டை சம்பவம் குறித்து செல்வப் பெருந்தகையிடம் பேசி இருக்கிறோம் அவரும் இந்த நிகழ்வுக்கு முற்று புள்ளி வைத்திருக்கிறார். இதுபோன்ற சிறிய பிரச்சனைகள் கூட இனி நடக்காமல் காப்பது துறையின் உடைய கடமை. 

தமிழிசை என்னை நேரில் பார்த்தால் நன்றாக பேசுகிறார்கள். முகத்திற்கு முகம் ஒரு பேச்சு முதுகுக்கு பின்னால் ஒரு பேச்சு என பேசுவது திமுக க்கு இல்லை.திமுக தலைவர் கூடுகின்ற இடங்களில் எல்லாம் கூடுகிற கூட்டம் கொள்கை கூட்டம் அதிமுக பரப்பறையில் கூடுகின்ற கூட்டம் கூடி கலைகின்ற கூட்டம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
Embed widget