சோகமான செய்திகளுக்கு நம் மூளை எப்படி ரியாக்ட் செய்கிறது தெரியுமா?
நாம் அனுபவிப்பது உணர்ச்சி ரீதியான சோர்வு மற்றும் நெருக்கடியால் ஏற்படும் அயர்ச்சி.
ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றைப் பற்றிக் கவலைப்பட தலைப்புச் செய்திகள் போதும் என்னும் அளவுக்குக் குவிகின்றன. இது சமீபத்திய உடல்நலன் குறித்தான பயம், பொருளாதார சவால்கள் அல்லது சமூக மோதல்கள் எதுவாக இருந்தாலும், செய்திகள் அத்தனையும் கேட்கும்போது நம் மூளை நிரம்பியதைப் போல உணரத் தொடங்குகிறது. இது முற்றிலும் இயல்பானது என்கிறார்கள் நரம்பியல் நிபுணர்கள்.
நாம் அனுபவிப்பது உணர்ச்சி ரீதியான சோர்வு மற்றும் நெருக்கடியால் ஏற்படும் அயர்ச்சி (emotional exhaustion and crisis fatigue).
"நாம் அனைவரும் உணர்ச்சி ரீதியான சோர்வு நிலையை அடைந்துவிட்டோம் (sense of overwhelmingness),மேலும் நெருக்கடியால் ஏற்படும் அயர்ச்சி என்கிற ஒரு விஷயமும் இருக்கிறது. நமது மூளையும் நம் உடலும் அதிக நேரம் விழிப்புடன் இருக்க முடியும், மேலும் நாம் அதே சூழலில் தங்குவது இயற்கையானது அல்ல. ” என்கிறார் உளவியல் சிகிச்சை நிபுணர் மற்றும் வெரிவெல் மைண்டின் தலைமை ஆசிரியர் எமி மோரின்.
View this post on Instagram
அமெரிக்க உளவியல் சங்கத்தின் சுகாதாரப் பாதுகாப்புப் புத்தாக்கங்களின் மூத்த இயக்குனரான வைல் ரைட் கூறுகையில் உணர்ச்சிச் சோர்வு என்பது "இந்த அதீத உணர்வு. இனி சமாளிக்கும் திறன் உங்களிடம் இல்லை என்று நினைக்கும் அளவுக்கு அதிகமாக ஏற்படும் ஒருவகையிலான உடல் மற்றும் மனச்சோர்வு இது. இதனால் ஒருவருக்கு கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படும். நாம் நம் திறன் அளவுக்குள் அனுபவிக்கும் விஷயங்கள் இவை அனைத்தும்" என்கிறார் அவர்.இதனால் நமது மூளை நமது இயக்கத்தை தடைபடுத்திக்கொள்ளும் சூழலும் உள்ளது.
"நம்மைக் கொல்லக்கூடிய ஒன்றைப் பற்றிய செய்திகளை நீண்ட காலமாகப் பார்த்த பிறகு நாங்கள் விஷயங்களுக்கு உணர்ச்சியற்றவர்களாகிவிடுகிறோம்" என்று எமி மோரின் கூறுகிறார்.
மேலும்,அப்படி ஆபத்தான விஷயம் நமது செவிக்கு வரிசையில் வருகிறது. அது பற்றி அதிகம் கேட்கிறீர்கள், 'சரி, அடுத்தது என்ன?' என்று நினைத்துக் கொண்டு நாம் அதைச் சந்திப்பது போல் இருக்கிறது. அது போன்ற ஆபத்தான விஷயங்களுக்கு உணர்வற்றவர்களாகி விடுகிறோம். ஏனென்றால் இப்போது எப்பொழுதும் ஏதோ ஒரு செய்தி வந்துகொண்டுதான் இருக்கும் என்கிற நிலைக்கு நாம் தயாராகி விடுகிறோம்” என்கிறார் அவர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )