கண்ணம்மா இதெல்லாம் என்னம்மா? சிம்ரனாக மாறி ஆட்டம்போட்ட சீரியல் ஹீரோயின் - வீடியோவை பாருங்க
பாரதி கண்ணம்மா சீரியலின் ஹீரோயினாக நடித்த வினுஷா மாடர்ன் உடையில் சிம்ரன் பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

வெள்ளித்திரைக்கு நிகராக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருப்பது தமிழ் சின்னத்திரை ஆகும். சின்னத்திரை பிரபலங்கள் சமீபகாலமாக வெள்ளத்திரை நட்சத்திரங்களுக்கு இணையாக ரசிகர்கள் பட்டாளத்தை தங்களுக்காக வைத்துள்ளனர். அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
பாரதி கண்ணம்மா சீரியல் ஹீரோயின்:
இந்த சீரியலில் கதாநாயகி கதாபாத்திரமான கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷிணிக்கு பதிலாக கதாநாயகியாக நடித்தவர் வினுஷா தேவி. சென்னையைப் பூர்வீகமாக கொண்ட இவர் இந்த சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார். கடைசியாக பனிவிழும் மலர்வனம் என்ற சீரியலில் நடித்தவர் தற்போது இன்ஸ்டாகிராமில் தனது மாடர்ன் உடை புகைப்படங்களையும், நடன வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.
View this post on Instagram
சிம்ரனாக மாறிய வினுஷா:
நடன இயக்குனர் ராஜு சுந்தரம் - சிம்ரன் ஆடிய தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா பாடலுக்கு மாடர்ன் உடையில் ஆட்டம் போட்டு அசத்தியுள்ளார். அஜித் நடிப்பில் வெளியாகிய குட் பேட் அக்லி படத்தில் இதே பாடல் இடம்பிடித்து மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தொடர்ந்து கவர்ச்சி உடைகளில் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் அவருக்கு பெரியளவு சீரியல் வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, சின்னத்திரை உலகத்தின் கவனத்தை தன்பக்கம் வகையில் அடுத்தடுத்து மாடர்ன் உடையில் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார் என்று சிலர் தெரிவிக்கின்றனர். அதேசமயம், பல நிகழ்ச்சிகளின் சிறப்பு விருந்தினராகவும், கடை திறப்பு விழா நிகழ்ச்சிகளிலும் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று வருகிறார்.





















