மேலும் அறிய

பிரபஞ்சத்தை காக்க நடராஜர் அவதாரம் எடுக்கும் சிவன்...சிவசக்தி திருவிளையாடலில் இந்த வாரம்

புதிய பிரபஞ்சத் தத்துவமும், புதிய வழிப்பாட்டு முறையும் பிரபஞ்சத்தார் அனைவரையும் எப்படிக் காக்கப் போகின்றன என்பதை சிவசக்தி திருவிளையாடலில் காணத் தவறாதீர்கள்

சிவசக்தி திருவிளையாடல்

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், மிகப் பிரமாண்டமாகவும் பார்ப்போரை ஈர்க்கும் வகையில் மிகுந்த சுவாரஸ்யத்தோடும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது… `சிவசக்தி திருவிளையாடல்` ஆன்மிகப் புராண தொடர். எல்லோரின் அமோக ஆதரவுடன் வெற்றித் தொடராக ஜூன் மாதம் முதல் ஒளிப்பரப்பாகி வருகிறது.

இந்த வாரம் –

அசுர அரசன் சங்கசூரனை மகாதேவர் வதம்செய்த பிறகு அசுர குலம் பயத்தில் ஆட்டம் காண்கிறது. அசுர குல குரு சுக்கிராச்சார்யரும், அசுர குல மாதா திதியும் உடைந்துபோகின்றனர். இந்த நெருக்கடியான காலத்தில் அசுரன் சும்பனும், அவனது தம்பி நிசும்பனும் அசுர குலத்தின் புதிய நம்பிக்கையாக வளர்கின்றனர். ஒரு பெண்ணின் கையால்தான் அவர்களுக்கு மரணம் கிடைக்கும் என பிரம்மனிடம் இருந்து வரம் பெறுகின்றனர். ஒருகட்டத்தில் அசுர அரசனாகும் சும்பன் செய்த காரியத்தால், சிவன் – பார்வதி வாழ்க்கையில் ஒரு துன்பம் நேர்கிறது. அதனைக் களையும் கர்மத்தின் இறுதியில் உலக மக்களுக்கு ஒரு புதிய வழிப்பாட்டு முறையும் சிவனின் புதிய அவதாரமும் நிகழ்கின்றன. அவை என்ன? உலகத்தைக் காக்கும் ஈசனின் வாழ்க்கையில் நேர்ந்த துன்பம் என்ன? பார்வதிக்கு நேரும் துன்பத்தை சிவன் எப்படிப் போக்கினார்? விறுவிறுவென நகரும் சிவசக்தி திருவிளையாடல் மெகா தொடரை உங்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்குக் காணத் தவறாதீர்கள்.

சங்கசூரன் வதம் முடிந்ததும் அசுர குல அரசனாகப் பொறுப்பேற்கும் சும்பன், தானே சிவனாகும் ஆசை கொள்கிறான். தனது தம்பியைக் கொன்ற இந்திரனையும் தேவர்களையும் பழிவாங்கத் துடிக்கிறான் சும்பன். அதற்கு முதலில் மகாதேவர் சிவனை வலுவிழக்கச் செய்ய, அசுரன் அபஸ்மரனைப் பாதாளச் சிறையில் இருந்து விடுவிக்கிறான். அபஸ்மரன், மும்மூர்த்திகளைத் தவிர எல்லோரையும் வசியம்செய்து, அவன் சொல்படி கேட்கவைக்கும் வல்லமைகொண்டவன். அவன், பார்வதி தேவியின் ஞாபகங்களை அனைத்தையும் வசியம்செய்து, பார்வதி தான் ஒரு லோகமாதா என்கிற நினைவை அழிக்கிறான். அவளது மணவாழ்வு பற்றிய அத்தனை நினைவுகளையும் அழிக்கிறான். பார்வதிக்கு சிவன், யார் என்றே தெரியவில்லை. பார்வதிக்கு பழைய நினைவுகளைக் கொண்டுவரும் போராட்ட த்தில் சிவன் கவனத்தைக் குவிக்க, அபஸ்மரனின் அசுர அட்டகாசத்தால் பூலோக மானிடர் முதல் எல்லோரும் சிவனுக்கு எதிராகத் திரும்புகின்றனர். அவனைச் சிறைப்பிடிக்க வந்த நாராயணரைக்கூட சிறுசூழ்ச்சிசெய்து பின்னடவை அடையச் செய்கிறான் அபஸ்மரன். இவனின் வசியத்தில் பார்வதி மட்டுமல்ல, சிவபார்வதி அம்சமான கார்த்திகேயன்கூட பாதிக்கப்படுகிறான். அபஸ்மரனைக் கொன்றால் பிரஞ்சத்தில் உள்ள அனைவரும் தங்கள் நினைவு ஒழுங்கை இழந்துவிடும் ஆபத்தில் மாட்டிக்கொள்கிறது பிரபஞ்சம். இதற்கு ஒரே தீர்வு சிவன் கையில்தான் இருக்கிறது என பிரம்மன், நாராயணர், லக்ஷ்மி தேவி, சரஸ்வதி தேவி எல்லோரும் நம்புகின்றனர். பார்வதியையும் கார்த்திக்கேயனையும் சேர்த்து இந்தப் பிரபஞ்சத்துக்கு வந்த ஆபத்தைக் காக்க, சிவன் நடராஜர் அவதாரம் எடுக்கிறார். அதனால், அபஸ்மரனைக் கொல்ல முடிந்ததா, அப்படி அவனைக் கொன்றால் பிரபஞ்சம் முழுக்க ஞாபக ஒழுங்க இழக்குமே… அந்த ஆபத்தில் இருந்து பிரபஞ்ச நாயகன் சிவன் பிரபஞ்சத்தை எவ்வாறு காப்பார்? இதற்கும் நடராஜர் அவதார வழிப்பாட்டுக்கும் உள்ள சம்பந்தம் என்ன? புதிய பிரபஞ்சத் தத்துவமும், புதிய வழிப்பாட்டு முறையும் பிரபஞ்சத்தார் அனைவரையும் எப்படிக் காக்கப் போகின்றன எனப் பரபரப்பும் விறுவிறுப்பும் கலந்து ஒளிப்பரப்பாகும் சுவாரஸ்யமான ஆன்மிக அனுபவத்தைக்

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பகும்

`சிவசக்தி திருவிளையாடல்` தொடரில் காணத் தவறாதீர்கள். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Periyar University Issue: மீண்டும் சர்ச்சையில் பெரியார் பல்கலை.- புதிய கல்விக் கொள்கை அமலா? நடந்தது என்ன?
Periyar University Issue: மீண்டும் சர்ச்சையில் பெரியார் பல்கலை.- புதிய கல்விக் கொள்கை அமலா? நடந்தது என்ன?
NEET UG Registration: தொடங்கும் நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு; என்ன தகுதி? இதையெல்லாம் மறக்காதீங்க!
NEET UG Registration: தொடங்கும் நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு; என்ன தகுதி? இதையெல்லாம் மறக்காதீங்க!
DGP on Kalpana Nayak Issue: கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் மீது கொலை முயற்சி ஏதும் நடக்கவில்லை.. அடித்துச் சொல்லும் காவல்துறை...
கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் மீது கொலை முயற்சி ஏதும் நடக்கவில்லை.. அடித்துச் சொல்லும் காவல்துறை...
UGC NET Answer Key: யுஜிசி நெட் ஆன்சர் கீ; ஆட்சேபிக்க இன்றே கடைசி! விவரம்
UGC NET Answer Key: யுஜிசி நெட் ஆன்சர் கீ; ஆட்சேபிக்க இன்றே கடைசி! விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADGP Kalpana Nayak issue | ADGP கல்பனா அலுவலக தீ விபத்துபேச விடாத எதிர்க்கட்சியினர்! கடுப்பாகி எழுந்த அமைச்சர்! கண்டித்த சபாநாயகர்வளர்ப்பு மகளுக்கு திருமணம்! கண்கலங்கிய ராதாகிருஷ்ணன்! தந்தையாக நின்ற தருணம்”முருகனுக்கு அரோகரா” தமிழில் பேசிய மோடி! பூரித்து போன அதிபர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Periyar University Issue: மீண்டும் சர்ச்சையில் பெரியார் பல்கலை.- புதிய கல்விக் கொள்கை அமலா? நடந்தது என்ன?
Periyar University Issue: மீண்டும் சர்ச்சையில் பெரியார் பல்கலை.- புதிய கல்விக் கொள்கை அமலா? நடந்தது என்ன?
NEET UG Registration: தொடங்கும் நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு; என்ன தகுதி? இதையெல்லாம் மறக்காதீங்க!
NEET UG Registration: தொடங்கும் நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு; என்ன தகுதி? இதையெல்லாம் மறக்காதீங்க!
DGP on Kalpana Nayak Issue: கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் மீது கொலை முயற்சி ஏதும் நடக்கவில்லை.. அடித்துச் சொல்லும் காவல்துறை...
கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் மீது கொலை முயற்சி ஏதும் நடக்கவில்லை.. அடித்துச் சொல்லும் காவல்துறை...
UGC NET Answer Key: யுஜிசி நெட் ஆன்சர் கீ; ஆட்சேபிக்க இன்றே கடைசி! விவரம்
UGC NET Answer Key: யுஜிசி நெட் ஆன்சர் கீ; ஆட்சேபிக்க இன்றே கடைசி! விவரம்
TN Toll Gate: வளர்ச்சியே வேண்டாம்..! கதறும் தமிழக மக்கள், 90 ஆக உயரும் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை, எங்கெங்கு?
TN Toll Gate: வளர்ச்சியே வேண்டாம்..! கதறும் தமிழக மக்கள், 90 ஆக உயரும் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை, எங்கெங்கு?
John Vs Aadhav :  ”ஜான் ஆரோக்கியசாமி ஆடியோவை வெளியிட்டது ஆதவ் அர்ஜூனா?” வெளியான புதுத் தகவல்..!
John Vs Aadhav : ”ஜான் ஆரோக்கியசாமி ஆடியோவை வெளியிட்டது ஆதவ் அர்ஜூனா?” வெளியான புதுத் தகவல்..!
Rajasthan Anti Conversion Bill: சட்டவிரோத மதமாற்றத்திற்கு ஆப்பு வைக்கும் ராஜஸ்தான்... சிக்குனா ஜெயில்தான்...
சட்டவிரோத மதமாற்றத்திற்கு ஆப்பு வைக்கும் ராஜஸ்தான்... சிக்குனா ஜெயில்தான்...
Vengaivayal Case: என்னது.. வேங்கைவயல் விவகாரம் வன்கொடுமை இல்லையா.? வழக்கு வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்...
என்னது.. வேங்கைவயல் விவகாரம் வன்கொடுமை இல்லையா.? வழக்கு வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்...
Embed widget