"பிச்சை கேட்கல" நிதி கொடுக்க முடியாது என சொன்ன மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஷ் பதிலடி!
மும்மொழி கொள்கையை தமிழ்நாடு எதிர்ப்பது ஏன் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் பதிலடி அளித்துள்ளார்.

தேசிய கல்வியை கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி தர முடியாது என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் பதிலடி அளித்துள்ளார். அண்ணாவின் வாசகத்தை மேற்கோள் காட்டி, உரிமையை கேட்கிறோம் பிச்சை கேட்கவில்லை என பதிலடி கொடுத்துள்ளார்.
மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஷ் கொடுத்த பதிலடி:
எக்ஸ் தளத்தில் தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட பதிவில், "வாழ்ந்தவர்கள் என்பதை நினைவூட்ட வரலாறு இருக்க, எதற்காக வடவரிடம் பிடரியைக் கொடுத்துவிட்டுப் பிறகு மெள்ள மெள்ள வலிக்கிறது வலிக்கிறது என்று வேதனைக் குரலொலித்துக் கிடக்க வேண்டும்?
மாதாவுக்கு மத்தாப்பு வண்ணச் சேலையா கேட்கிறோம்? அன்னையின் ஆடையை, அக்கிரமக்காரனே பிடித்திழுக்கத் துணிகிறாயே, ஆகுமா இந்த அக்கிரமம் என்றல்லவா கேட்கிறோம். உரிமையைக் கேட்கிறோம்; உபகாரமல்ல.
வாழ்ந்தவர்கள் என்பதை நினைவூட்ட வரலாறு இருக்க,எதற்காக வடவரிடம் பிடரியைக் கொடுத்துவிட்டுப் பிறகு மெள்ள மெள்ள வலிக்கிறது வலிக்கிறது என்று வேதனைக் குரலொலித்துக் கிடக்க வேண்டும்?
— Anbil Mahesh (@Anbil_Mahesh) February 15, 2025
மாதாவுக்கு மத்தாப்பு வண்ணச் சேலையா கேட்கிறோம்?
அன்னையின் ஆடையை, அக்கிரமக்காரனே பிடித்திழுக்கத்… pic.twitter.com/gVzM9E9XEG
"பிச்சை இல்லை.. உரிமையை கேட்கிறோம்"
இழந்ததைக் கேட்கிறோம்; இரவல் பொருளல்ல. எம்மிடமிருந்து பறித்துக்கொண்டதைக் கேட்கிறோம்; பிச்சையல்ல. " இந்த மூலக்கருத்தை உணரா முன்னம் வடவரின் கொட்டம் அடக்கப்படுவது முடியாத காரியமாகும். " - பேரறிஞர் அண்ணா" என குறிப்பிட்டுள்ளார்.
சமக்ர சிக்ஷா அபியான் (எஸ்எஸ்ஏ) என்று அழைக்கப்படும் அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை, அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்குக் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி பள்ளி கட்டமைப்பு வசதிகள், கல்வி, ஆசிரியர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட பள்ளிகளுக்குத் தேவையான நிதியை ஆண்டுதோறும் மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. இதற்கான செலவீனங்களை மதிப்பீடு செய்து, மாநில அரசுகள் மத்திய அரசுக்கு அனுப்பும். அதில் திட்டங்களின் அடிப்படையில், முழு தொகையோ, இல்லை குறைத்தோ மத்திய அரசு நிதி வழங்கும். சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின்படி, 60 சதவீத நிதியை மத்திய அரசு வழங்கும். மீதமுள்ள 40 சதவீத நிதிக்கு மாநில அரசே பொறுப்பு.
இதையும் படிக்க: BNS different from IPC: புதிய குற்றவியல் சட்டம் Vs இந்திய தண்டனை சட்டம் - அறிய வேண்டிய முக்கிய விதிகள்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

