மேலும் அறிய

NEET UG Registration: தொடங்கும் நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு; என்ன தகுதி? இதையெல்லாம் மறக்காதீங்க!

NEET UG Registration 2025: ஒன்றுக்கு மேற்பட்ட நீட் தேர்வு விண்ணப்பப் படிவம் இருந்தால், அனுமதிச் சீட்டு ரத்து செய்யப்படும் அல்லது நிறுத்தி வைக்கப்படும், அல்லது தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும்.

மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு விரைவில் தொடங்க உள்ள நிலையில், அப்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை என்னென்ன? பார்க்கலாம்.

  • என்டிஏ அறிவிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள தகவலை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.
  • ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பிற வகைகளில் இருக்கும் விண்ணப்பப் படிவம் ஏற்கப்படாது.
  • ஒரு தேர்வர் ஒரு படிவத்தை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட படிவம் இருந்தால், அனுமதிச் சீட்டு ரத்து செய்யப்படும் அல்லது நிறுத்தி வைக்கப்படும், அல்லது தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும்.
  • இ மெயில் முகவரி, மொபைல் ஆகியவை உங்களுடையதாக அல்லது உங்கள் பெற்றோர்/ பாதுகாவலரின் விவரமாக இருக்க வேண்டும். அந்த எண், இ மெயில் முகவரிக்குத்தான் விவரங்கள் அனுப்பப்படும்.
  • அனைத்து கேள்விகளுக்கும் உரிய விடையை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் விண்ணப்பம் ஏற்கப்படாது.
  • வருங்காலத் தேவைக்காக, கட்டணம் செலுத்தியது உள்ளிட்ட முக்கிய விவரங்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  •  2 முறை விண்ணப்பக் கட்டணம் தவறுதலாக செலுத்தப்பட்டு விட்டால், என்டிஏ சம்பந்தப்பட்ட தேர்வருக்கு கட்டணத்தைத் திரும்பச் செலுத்திவிடும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

  • விண்ணப்பிக்கும் தேர்வர்களின் வயது, மாணவர் சேர்க்கையின்போது 17 நிறைவு அடைந்திருக்க வேண்டும். அதே நேரத்தில் உச்ச வயது வரம்பு எதுவுமில்லை.
  • நீட் இளங்கலைத் தேர்வை எழுத, விண்ணப்பதாரர்கள் வேதியியல், இயற்பியல், உயிரியல்/ உயிர் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் தனித்தனியாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும், ஒட்டுமொத்தமாக 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

மருத்துவ இளநிலைப் படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வில் கேள்வித் தாளில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்படுவதாக, தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. இதன்படி, கொரோனா காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கூடுதல் நேரம் வழங்கலும் ஆப்ஷனல் கேள்வி முறையும் ரத்து செய்யப்பட உள்ளது.

ஏற்கெனவே என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு 2025 (நீட் இளங்கலைத் தேர்வு) பேனா மற்றும் காகித முறையில் நடைபெறும் என்றும் ஒரே நாளில் ஒரே ஷிஃப்டில் இந்தத் தேர்வு நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் விவரங்களுக்கு: neet.nta.nic.in

 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

TN By Election Results 2026 LIVE: 2 தொகுதிகளிலும் தவெக முன்னிலை- 2ஆம் இடத்தில் யார்.?
TN By Election Results 2026 LIVE: 2 தொகுதிகளிலும் தவெக முன்னிலை- 2ஆம் இடத்தில் யார்.?
20 லட்சம் பேரின் அரசு வேலைக் கனவு! குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க தவாக தலைவர் கோரிக்கை
20 லட்சம் பேரின் அரசு வேலைக் கனவு! குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க தவாக தலைவர் கோரிக்கை
திருச்சி மாஸ் சாதனை! உயர்கல்வி சேர்க்கையில் தமிழகத்திலேயே முதலிடம்: வெற்றிக் கொடி நாட்டியது
திருச்சி மாஸ் சாதனை! உயர்கல்வி சேர்க்கையில் தமிழகத்திலேயே முதலிடம்: வெற்றிக் கொடி நாட்டியது
குரூப் 4: லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள்; வெறும் 6,574 அறிவிப்பா? - கொந்தளித்த டிடிவி தினகரன்
குரூப் 4: லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள்; வெறும் 6,574 அறிவிப்பா? - கொந்தளித்த டிடிவி தினகரன்

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Rain Alert: 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று! எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை! சென்னை நிலவரம் என்ன?
Rain Alert: 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று! எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை! சென்னை நிலவரம் என்ன?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Cancer Drugs: அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
Embed widget