”முருகனுக்கு அரோகரா” தமிழில் பேசிய மோடி! பூரித்து போன அதிபர்
பிரதமர் மோடி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என தமிழில் பேசியுள்ளது கவனம் பெற்றுள்ளது.
இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் ஸ்ரீ சனாதன தர்ம கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த விழாவில் வீடியோ கான்ஃப்ரசிங் மூலம் கலந்து கொண்ட பிரதமர் மோடி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என சொல்லி உரையை தொடங்கினார். இந்தோனேசிய அதிபர் பிரபோவோ-வும் இதில் கலந்து கொண்டார். இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையிலான உறவு தொடர்பாக பிரதமர் மோடி பூரித்து பேசினார். மேலும் பேசிய அவர், ‘ஜகார்த்தாவில் உள்ள முருகன் கோவிலில் முருகன் மட்டுமின்றி பல்வேறு கடவுள்களின் சிலைகள் உள்ளன. இந்த பன்முகத்தன்மை தான் நமது கலாச்சாரத்தின் அடித்தளமாக அமைகிறது. இந்தியாவில் நாங்கள் இதை வேற்றுமையில் ஒற்றுமை என கூறுவோம். இந்தியாவிலும் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கு பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்வதே காரணம். இந்தியாவுக்கும், இந்தோனேசியாவுக்கும் இடையிலான உறவு ஆண்டாண்டு காலமாக நீடிக்கும் கலாசாரத்தின் அடிப்படையிலானது. இந்த தொடர்பு முருகன், ராமர், புத்தரௌ உள்ளடக்கியது. இந்தியர்கள் யாராவது இந்தோனேசியாவில் உள்ள பிரம்பனன் கோயிலுக்கு வந்தால் காசி, கேதர்நாத்துக்கு வந்த ஆன்மிக உணர்வு அனுபவம் கிடைக்கும்” என பேசியுள்ளார்.





















