மேலும் அறிய

Malaikottai Vaaliban Teaser: ‘தக் லைஃப்’ கமலுக்கு சவால்விடும் மோகன்லால்.. ‘மலைக்கோட்டை வாலிபன்’ மாஸ் டீசர் வெளியீடு!

மோகன்லால் நடிப்பில் தேசிய விருது வென்ற இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசரி இயக்கத்தில் உருவாகியுள்ள மலைக்கோட்டை வாலிபன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் - தேசிய விருது வென்ற இயக்குநர் லிஜோ ஜோஸ் ஆகியோரது மெகா கூட்டணியில் ‘மலைக்கோட்டை வாலிபன்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது.

மல்யுத்த வீரராக மாஸ் காட்டும் மோகன்லால்

மது நீலகண்டன் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசாந்த் பிள்ளை இசையமைத்துள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில் இன்று இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

சுதந்திரத்துக்கு முந்தைய காலக்கட்டத்தினைச் சேர்ந்த மல்யுத்த வீரராக இப்படத்தின் மோகன்லால் நடித்துள்ள நிலையில், மாஸாக இப்படத்தில் மோகன் லால் தோன்றும் காட்சி வெளியாகியுள்ளது. 

மேலும் நாசர் குரலில் “கண்கண்டது நிஜம், காணாதது பொய்.. நீ கண்டதெல்லாம் பொய்.. இனி காணப்போவது நிஜம்” எனும் வசனங்களுடன் மோகன் லால் அமர்ந்திருக்கும் மாஸ் காட்சி வெளியாகியுள்ளது. ‘தக் லைஃப்’ படத்தின் கமல்ஹாசனின் அறிமுக டீசரைப் போல் மோகன்லால் இந்த டீசரில் மாஸாக தோன்றியுள்ளது அவரது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் உண்மையான மல்யுத்த வீரரின் வாழ்க்கையைத் தழுவி உண்மை சம்பவங்களை மையப்படுத்தி இப்படம் அமைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், மோகன் லால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் இப்படத்தினை எதிர்நோக்கி காத்துள்ளனர். 

லிஜோ ஜோஸ் பெல்லிசேரி

மலையாள சினிமா தாண்டியும் தனக்கென தனி சினிமா ரசிகர்களைக் கொண்ட கொண்டாடப்படும் இயக்குநர்களில் ஒருவர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. 

2017ஆம் ஆண்டு இவர் இயக்கிய ‘அங்கமாலி டைரிஸ்’ கல்ட் சினிமாவாக உருவெடுத்து தொடர்ந்து கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஈமாயு, ஜல்லிக்கட்டு, சுருளி என தன் அடுத்தடுத்த படங்களின் மூலம் கவனமீர்த்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றார்.

முன்னதாக மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியை வைத்து நண்பகல் நேரத்து மயக்கம் படத்தினை இவர் இயக்கிய நிலையில் அடுத்ததாக மற்றொரு மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் உடன் இந்த முறை கூட்டணி வைத்துள்ளார்.

நடிகர்கள்

முன்னதாக இப்படத்தின் ஷூட்டிங் நிறைவை ஒட்டி படக்குழு பகிர்ந்த வீடியோவும், மோகன் லாலின் கயிறு இழுக்கும்படியான மாஸ் காட்சியும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரித்தது.

சென்னை, ராஜஸ்தான், புதுச்சேரி என பல இடங்களில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், சோனாலி குல்கர்னி, ஹரீஷ் பரேடி, சஞ்சனா சந்திரன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  சுமார் 100 கோடி பட்ஜெட்டில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் ஆண்டு மலையாள சினிமா எதிர்நோக்கி இருக்கும் முக்கியப் படங்களுள் ஒன்றாக இப்படம் பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: Archana: இவர் ஓவியா இல்ல ஜூலி.. பொம்மை டாஸ்க்கில் விசித்ராவிடம் வன்மம் கொட்டிய அர்ச்சனா.. அதிருப்தியில் ரசிகர்கள்!

Bigg Boss Tamil 7: நீ நல்லவன்னா அவனும் நல்லவன் தான்.. அர்ச்சனாவுக்கு பதிலடி தந்த நிக்சன்.. துள்ளிக் குதித்த ஹவுஸ்மேட்ஸ்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget