Hansika: லேட்டா வந்தா ஒரு நிமிஷத்துக்கு 5 லட்சம்... திருமணத்துக்கு முன்பே மருமகனுக்கு கண்டிஷன் போட்ட ஹன்சிகா அம்மா!
முகூர்த்த நேரத்திற்கு லேட்டாக வந்தால் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 5 லட்சம் கொடுக்க வேண்டும் என சோஹேல் கத்துரியாவின் குடும்பத்தினருக்கு கண்டிஷன் போடா ஹன்சிகாவின் அம்மா
தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தமிழ் சினிமாவில் சிம்பு, விஜய், ஜெயம் ரவி, கார்த்தி, சூர்யா என பல முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்த ஹன்சிகா கடந்த ஆண்டு இறுதியில் தான் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் மற்றும் குடும்ப நண்பரான சோஹேல் கத்துரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இணைய தொடராக ஒளிபரப்பாகும் ஹன்சிகாவின் ஷாதி ட்ராமா :
கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள ஒரு அரண்மனையில் மிகவும் கோலகமாக ஹன்சிகாவின் திருமணம் நடைபெற்றது. அவரின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டன. இவர்களின் திருமண நிகழ்வுகள் ' லவ் ஷாதி ட்ராமா' என்ற பெயரில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இணைய தொடராக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஒளிபரப்பான எபிசோடில் ஹன்சிகாவின் தாயார் மணமகன் சோஹேல் கத்துரியா குறித்து கூறிய ஒரு தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்திற்கு முன்பே மாமியார் போட்ட கண்டிஷன் :
ஹன்சிகாவின் திருமணத்தின் சடங்குகளின் ஒரு பகுதியாக மெஹந்தி , சங்கீத், ஹல்தி மற்றும் பல முக்கியமான நிகழ்வுகளும் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றன. சடங்கு சம்பிரதாயங்கள் நல்ல முறையில் நடைபெற்றது. ஆனால் ஹன்சிகாவின் அம்மாவிற்கு அதில் ஒரு வருத்தம் இருந்தது. அதற்கு காரணம் ஒவ்வொரு நிகழ்விற்கும் தாமதமாக வந்திறங்கிய சோஹேலின் குடும்பத்தினர்.
இதனால் ஹன்சிகாவின் தாயார் மிகுந்த வருத்தம் அடைந்ததாகத் தெரிவித்துள்ளார். அதனால் சோஹேல் கத்துரியா பெற்றோரை அழைத்து நேரத்தை சரியாகக் கடைபிடிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும் ”நாங்கள் நேரத்தை சரியாகக் கடைபிடிப்பவர்கள், அதனால் திருமணத்திற்கு தாமதமாக வரும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 5 லட்சம் ரூபாய் நீங்கள் கொடுக்க வேண்டும்.
திருமணம் 4.30 முதல் 6 மணி வரை உள்ள சுபமுகூர்த்த நேரத்தில் நடைபெற உள்ளது என்பதால் இதற்கும் அவர்கள் தாமதமாக வந்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த நிபந்தனையை நான் கூறினேன்’ எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், திருமணத்துக்கு முன்னரே மருமகனுக்கு கண்டிஷன் போட்ட ஹன்சிகாவின் அம்மா இப்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளார்.