திருமணத்திற்கு முன்பே புற்றுநோய்.. முதல் மனைவி குறித்து மனம் உருகிய விஷ்ணு விஷால்
நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது முதல் மனைவி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன விஷ்ணு விஷால், வளர்ந்து வரும் நடிகராக தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்துள்ளார். இயக்குநர்களின் நடிகராக இருக்கும் இவர், வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவரது சகோதரர் நடிக்கும் ஓஹோ எந்தன் பேபி படத்தை இவரே தயாரித்திருக்கிறார். இந்நிலையில், தனது சினிமா பயணம் குறித்து பிரபல யூடியூப் சேனலில் பேட்டி அளித்த விஷ்னு விஷால் முதல் மனைவி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
காதல் திருமணம்
இது தொடர்பான பேட்டியில் முதல் மனைவியை விவாகரத்து செய்தது குறித்தும் தெரிவித்திருக்கிறார். விஷ்னு விஷால் ரஜினி என்ற தனது கல்லூரித் தோழியை காதலித்து கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆர்யன் என்ற மகன் உள்ள நிலையில், இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக 2018ல் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பின்னர், பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஏப்ரல் மாதம் அழகான பெண் குழந்தை பிறந்தது. இவர்களது திருமண நாளிலேயே விஷ்ணு விஷால் இரண்டாவது குழந்தைக்கு தந்தை ஆனார்.
புற்றுநோய் பாதிப்பு
முதல் மனைவி ரஜினி குறித்து பேசிய விஷ்ணு விஷால், நானும் ரஜினியும் 4 ஆண்டுகள் காதலித்தே திருமணம் செய்துகொண்டோம். ஆனால் திருமணத்திற்கு ஒரு மாதம் முன்பு ரஜினிக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. ஆனாலும் அவரை கடைசி வரை பார்த்துக்கொள்வேன் என்று திருமணம் செய்தேன். புற்றுநோய் காரணமாக 6 ஆண்டுகள் குழந்தை வேண்டாம் என முடிவெடுத்தோம். 6 ஆண்டுகளில் வருடத்திற்கு இரண்டு முறை அவருக்கு புற்றுநோய் சிகிச்சை எடுத்தோம்.
விவாகரத்து
அந்த நேரத்தில் தான் நான் சினிமாவில் நடிக்க தொடங்கினேன். நான் நடித்த படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், அடுத்தடுத்து படங்களில் நடிக்க அதிக கவனம் செலுத்தினேன்,
இதனால், அவர் மீது நான் கவனம் செலுத்தவில்லை என ரஜினி நினைத்துக்கொண்டார். பிறகு இருவருக்கும் சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள் வந்தன. மனக்கசப்பு வந்தது. ஒரு கட்டத்தில் விவாகரத்து வரை சென்றது. விவாகரத்து முடிவை எடுத்தது ரஜினிதான். நான் இல்லை. அவரிடம் பலமுறை இதுகுறித்து எடுத்து கூறினேன் கேட்கவில்லை என விஷ்ணு விஷால் தெரிவித்தார்.
மனதளவில் கலங்கிவிட்டேன்
ராட்சசன் படத்தின் வெற்றி விழாவை கொண்டாடும் நேரத்தில் ரஜினியை விவாகரத்து செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானேன். அந்த நேரத்தில் மிகவும் கலங்கிவிட்டேன். என்னால் எதையும் பேலன்ஸ் பண்ண முடியலை. விவாகரத்துக்கு பிறகும் அவரை பார்த்துக்கொள்வேன் என ரஜினியிடம் வாக்குறுதி அளித்தேன். அந்த சொல்படியே இப்போது வரை அவருடன் நட்புறவுடன் பழகி வருகிறேன். என மன வேதனையுடன் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.





















