Entertainment Headlines: விஜய்யின் குட்டிக்கதை.. ரத்னகுமார் சர்ச்சை பேச்சு.. ஜூனியர் பாலையா மரணம்.. சினிமா செய்திகள் இன்று!
Entertainment Headlines Nov 02: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
‘காக்கா.. கழுகு’.. லியோ விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்.. ரஜினிக்கு பதிலடி என ரசிகர்கள் உற்சாகம்..!
லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் குட்டி ஸ்டோரி ஒன்றை கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த படம் ரூ.540 கோடி வசூல் வேட்டையை நடத்தியுள்ளது.படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் நாளுக்கு நாள் லியோ படம் தொடர்பான சர்ச்சைகள் படத்திற்கு பெரிய அளவில் பிளஸ் ஆக அமைந்தது. இதனிடையே லியோ படத்தின் வெற்றி கொண்டாட்டம் நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. மேலும் படிக்க
'லியோ’ விழாவில் சர்ச்சை பேச்சு.. வச்சு செய்த நெட்டிசன்கள்.. சோசியல் மீடியாவுக்கு டாட்டா காட்டிய ரத்னகுமார்..!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா உள்ளிட்ட பலரும் நடித்த லியோ படம் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வெளியானது. இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ள நிலையில், வசூலில் ரூ.540 கோடியை பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லியோ படத்துக்கு வசனம் எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். இவர் மேயாத மான், ஆடை, குலு குலு ஆகிய 3 படங்களை இயக்கியுள்ள நிலையில், ரசிகர்களிடையே மிகப்பிரபலமான ஒருவராக ரத்னகுமார் உள்ளார். மேலும் படிக்க
காலையிலேயே துயரம்.. பிரபல நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்.. ரசிகர்கள் இரங்கல்
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான ஜூனியர் பாலையா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் 3வது மகனான ஜூனியர் பாலையா 1975 ஆம் ஆண்டு மேல்நாட்டு மருமகள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தொடந்து கரக்காட்டகாரன், கோபுர வாசலிலே, சுந்தரகாண்டம், சாட்டை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும் படிக்க
உலக நாயகனுக்காக ரெடியாகும் சூப்பர் ஸ்டார்: இந்தியன் 2க்கு இன்ட்ரோ வீடியோ! நாளை ரிலீஸ்!
இயக்குநர் சங்கர் உடன் கமல்ஹாசன் இரண்டாம் முறையாக இணைந்துள்ள திரைப்படம் ‘இந்தியன் 2’. 1996ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகம் பாக்ஸ் ஆஃபிஸில் சக்கை போடு போட்டதுடன், வசூலையும் குவித்து தமிழ் சினிமாவின் பிரபல கமர்ஷியல் படமாக உருவெடுத்தது. கமல்ஹாசன் இப்படத்துக்காக தேசிய விருது வென்றார். மேலும் படிக்க
ஜவான் ஓடிடி ரிலீஸ், ‘டங்கி’ டீசர், நள்ளிரவில் திரண்ட மக்கள்.. ஷாருக் பிறந்தநாளில் இதெல்லாம் ஸ்பெஷல்!
உலகமே கொண்டாடும் ஒரு நடிகர் என்றால் அது பாலிவுட் கிங் கான் ஷாருக்கான் (Shah Rukh Khan) என்பதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. இந்த சூப்பர் ஸ்டார் இன்று தனது 58ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவருக்கு என்னென்ன சர்ப்ரைஸ் காத்திருந்தது என்பதைப் பார்க்கலாம் வாங்க. மேலும் படிக்க