Indian 2 Intro: உலக நாயகனுக்காக ரெடியாகும் சூப்பர் ஸ்டார்: இந்தியன் 2க்கு இன்ட்ரோ வீடியோ! நாளை ரிலீஸ்!
Indian 2 Intro Video: நாளை மாலை இந்த வீடியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கமல்ஹாசன் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
'இந்தியன் 2' படத்தின் இண்ட்ரோ வீடியோவை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் சங்கர் உடன் கமல்ஹாசன் இரண்டாம் முறையாக இணைந்துள்ள திரைப்படம் ‘இந்தியன் 2’. 1996ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகம் பாக்ஸ் ஆஃபிஸில் சக்கை போடு போட்டதுடன், வசூலையும் குவித்து தமிழ் சினிமாவின் பிரபல கமர்ஷியல் படமாக உருவெடுத்தது. கமல்ஹாசன் இப்படத்துக்காக தேசிய விருது வென்றார்.
இறுதிக்கட்ட பணிகள்
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாக பணிகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் முதல் பாகத்தை விட இன்னும் பிரம்மாண்டமாகவும் பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடனும் படம் வெளியாக உள்ளது.
இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், படக்குழு முழு வீச்சில் பணியாற்றி வருகிறது. அந்த வகையில் இந்தியன் 2 படத்தின் இண்ட்ரோ வீடியோ நாளை வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கமலுக்காக களமிறங்கிய ரஜினி
இந்த வீடியோவை இந்திய சினிமாவின் மற்றொரு உச்ச நட்சத்திரமும் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பருமான ரஜினிகாந்த் வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
நாளை மாலை 5.30 மணிக்கு இந்த வீடியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கமல்ஹாசன் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பிற மொழிகளில் வெளியிடும் பிரபலங்கள்
இந்தியன் 2 திரைப்படம் பிரமாண்ட பொருட்செலவில் பான் இந்திய படமாக வெளியாகும் நிலையில், இந்த இண்ட்ரோ வீடியோவை பிற மொழிகளில் அந்தந்த மொழி பிரபலங்கள் வெளியிட உள்ளனர். அதன்படி மலையாளத்தில் மோகன் லால், கன்னடத்தில் சுதீப், பாலிவுட்டில் அமீர் கான் ஆகிய பிரபலங்கள் வெளியிட உள்ளனர்.
இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா பகிர்ந்துள்ள இந்த அப்டேட்டில் அனைத்து ஸ்டார்களும் தங்கள் 90களின் ரெட்ரோ லுக்கில் தோற்றமளிக்கும் நிலையில், இந்தியன் 2 திரைப்படம் 90களின் கதையை மையப்படுத்தியதாக இருக்குமா மற்றும் இந்தியன் 1 கதை விட்ட இடத்தில் இருந்து படம் தொடங்குமா என்ற சந்தேகத்தையும் கிளறியுள்ளது.
இந்தியன் 1 Vs இந்தியன் 2
1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் 2 படத்தில் அப்போதைய பிரபல நட்சத்திரங்களான மனிஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி, நெடுமுடி வேணு, கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்நிலையில், தற்போதைய இரண்டாம் பாகத்தில் ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வார், சித்தார்த், பிரியா பவானி சங்கர், காளிதாஸ் ஜெயராம், பாபி சிம்ஹா, மறைந்த நடிகர்கள் விவேக், மாரிமுத்து, மனோபாலா என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
வரும் 2024ஆம் ஆண்டு கோடை விடுமுறைக் கொண்டாட்டமாக இந்தியன் 2 படத்தின் சேனாபதி தாத்தா திரையரங்குகளுக்கு வருகை தந்து மகிழ்விப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.