மேலும் அறிய

கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!

ஒட்டுமொத்த இந்தியாவிலேயே தன்னுடைய தாய்மொழியை பாதுகாப்பதற்கும், வளர்ச்சிக்கும் எங்களுடைய கலைஞர் போல் செய்தது யாராவது உண்டா என்று தேடிப் பாருங்கள் கலைஞரினுடைய உயரம் தெரியும்- அமைச்சர் அன்பில்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று சட்டப்பேரவையில் பேசியதாவது:

’’சட்டமன்ற உறுப்பினர் எழிலன் ஆரம்பித்ததில் இருந்து Official Languages Act, 1983- 1967 amendment-ல் இருந்து, 1976-ல் Official Language Rules ஆக மாறியதில் இருந்து, சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பா பேசியது மிகவும் முக்கியமான கருத்து.

English- பொறுத்தவரையில் அது ஒரு ஆட்சிமொழியாக 15 years-க்கு மட்டும்தான் சொன்னார்கள். அது அப்படியேதான் இருக்கிறது. இன்னும் அதை close செய்யவே இல்லை. நாம் தற்காத்துக் கொள்ள வேண்டுமென்றால், கண்டிப்பாக தமிழ்நாட்டு முதலமைச்சர் அறிவிக்கப் போகின்ற அறிவிப்பு உள்ளபடியே நமக்கு மிகப் பெரிய பாதுகாப்பாக இருக்கும் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

தமிழ்த்தாய் வாழ்த்துக்கென்று சட்டம்

குறிப்பாக, திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்திருக்கின்ற எங்களைப் பொறுத்தவரைக்கும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கென்று சட்டத்தைக் கொண்டு வந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். (மேசையைத் தட்டும் ஒலி) ஒவ்வொரு பேருந்திலும் திருக்குறளும், திருவள்ளுவரின் புகைப்படமும் இடம்பெற வேண்டும் என்று சொன்னவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

இதுமட்டுமல்ல, வள்ளுவர் கோட்டத்தை எழுப்பியது எங்கள் முத்தமிழறிஞர் கலைஞர். தமிழ் வளர்ச்சித் துறைக்கு என்று தனித் துறையைக் கொண்டுவந்தவர் எங்களுடைய கலைஞர்.

கலைஞர் செய்தவை என்ன? பட்டியலிட்ட அமைச்சர் அன்பில்

அதற்கென்று தனியாக அலுவலகத்தைத் தந்தது தலைவர் கலைஞர். G.O. அரசாணை தமிழிலே வர வேண்டுமென்று சொன்னவர் நம்முடைய கலைஞர். 133 அடியில் வள்ளுவருக்கு சிலை அமைத்து தந்தவர் நம்முடைய கலைஞர்.

10 ஆம் வகுப்பு வரையில் கட்டாயம் தமிழ்ப் பாடம் இருக்க வேண்டுமென்று சொன்னவர் நம்முடைய கலைஞர். பத்தாம் வகுப்பில் மாவட்ட அளவில் அதிகப்படியான மதிப்பெண் யார் எடுக்கிறார்களோ அவர்களுக்கு மடிக்கணினியை வழங்க வேண்டுமென்று, இதுவரையில் 2,206 மாணவச் செல்வங்களுக்கு மடிக்கணினியை வழங்கியது நம்முடைய தலைவர் கலைஞர். செம்மொழி என்கின்ற அந்தஸ்தை நம்முடைய தமிழ் மொழிக்கு பெற்றுத் தந்தவர் நம்முடைய கலைஞர்.

கோயம்புத்தூரில் மிகப்பெரிய மாநாட்டை நடத்திக் காட்டியவர் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர். மொழிப்போர் தியாகிகளுடைய பிள்ளைகளுக்கு quota-விலே கல்லூரியிலே இடம் தர வேண்டுமென்று சொன்னவர் நம்முடைய தலைவர் கலைஞர். அதேபோன்று தமிழ் அறிஞர்களுக்கான ஓய்வூதியமாக ரூ.3,000 வழங்கியவர் கலைஞர். அவர்கள் இறந்துவிட்டால் அவர்களுடைய கணவனுக்கோ, மனைவிக்கோ ரூ.1,500 வழங்கியது கலைஞர்.

கலைஞரின் உயரம் தெரியுமா?

ஒன்றே ஒன்றை மட்டும் சொல்கிறேன். கிட்டத்தட்ட 122 பெரிய மொழிகள் இருக்கின்றன. 1,599 மற்ற மொழிகள் எல்லாம் நம்முடைய இந்தியாவிலே இருக்கின்றன. எட்டாவது அட்டவணையில் 22 மொழிகள் இருக்கின்றன என்று நாம் சொல்கிறோம் அல்லவா, ஒட்டுமொத்த இந்தியாவிலேயே தன்னுடைய தாய்மொழியை பாதுகாப்பதற்கும், வளர்ச்சிக்கும் எங்களுடைய கலைஞர் போல் செய்தது யாராவது உண்டா என்று தேடிப் பாருங்கள் கலைஞரினுடைய உயரம் தெரியும்.

எதிர்க்கட்சியினுடைய துணைத் தலைவர் சொன்னார். தலைமைச் செயலாளர் வந்து ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதம் தெளிவாக இல்லை. அது ஒரு விவாதப் பொருளாக இருக்கிறது என்று. அதை நீங்க accept செய்கிறீர்களா, இல்லையா என்று கேட்கிறார். எங்களைப் பொறுத்தவரையில் முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் வழியில் நடைபோடுகின்றவர்கள். எங்களுடைய தலைமைச் செயலாளர் ரொம்ப specific ஆக அதில் சொல்லி இருக்கிறார்.

"Based on the recommendation of the Committee on the State Level we will constitute a Committee headed by the Principal Secretary of School Education Department. Based on the Committee's recommendation, we will decide" committee ஒத்துக்கவில்லை, எங்களுக்கு பணம் வேண்டாம். அதனால்தான் தமிழ்நாட்டு முதலமைச்சர், ’’நீங்கள் கொடுக்கிற ரூ.2,000 கோடியை நாள் வாங்கிலோன் என்று சொன்னால் எங்களுடைய தமிழ் சமுதாயத்தை 2,000 ஆண்டுகளுக்கு பின்னோக்கி செல்கின்ற அந்த பாவத்திற்கு நாள் ஆளாவேன்.

ரூ.10,000 கோடி கொடுத்தாலும் எனக்கு தேவை இல்லை’’ என்று சொன்னார் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர். அதனால், எல்லோரும் தெளிவாக இருக்கின்றோம். ஆனால், இங்கே ஒரு மாநில கட்சியைச் சார்ந்தவர்கள் ஆங்காகே சம கல்வி, சம கல்வி என்று கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

கலைஞர் மண் இந்த மண்

சமச்சீரைக் கொண்டு வந்து அனைவருக்கும் சமமாக அந்த சமச்சீர் கல்வியைக் கொண்டு போனதே நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் மண் இந்த மண்.

பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்

ஆனால், இங்கு சம கல்வி, சம கல்வி என்று சொல்லிக்கொண்டு எங்களுடைய பிள்ளைகள் மேல் கொண்ட அக்கறை என்று சொல்லிக்கொள்வது எப்படி இருக்கிறது தெரியுமா? கலைஞர் சொல்வது போன்றுதான். "பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்" என்கின்ற அளவிற்கு இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள், அந்த தேசிய கட்சியைச் சார்ந்திருக்கின்றவர்கள்.

ஆக இதை நான் வன்மையாக கண்டிக்கின்ற அதேநேரத்தில், நம்முடைய தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் கொண்டு வருகின்ற அறிவிப்பு என்பது உள்ளபடியே ஒரு மிகப்பெரிய அறிவிப்பாக இருக்குமென்கின்ற எதிர்பார்ப்பு எனக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டைச் சார்ந்திருக்கிற அனைத்து மக்களுக்கும் இருக்கிறது’’.

இவ்வாறு அமைச்சர் அன்பில் தெரிவித்தார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழி கொள்கை.. கபட நாடகத்தின் உச்சம்.. மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!
சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழி கொள்கை.. கபட நாடகத்தின் உச்சம்.. மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!
TN School Reopening: தமிழ்நாட்டில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? எப்போது மீண்டும்? என்ன காரணம்?
TN School Reopening: தமிழ்நாட்டில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? எப்போது மீண்டும்? என்ன காரணம்?
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு முடிவுகள் எப்போது? வெளியான முக்கியத் தகவல்- பதிவிறக்கம் செய்வது எப்படி?
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு முடிவுகள் எப்போது? வெளியான முக்கியத் தகவல்- பதிவிறக்கம் செய்வது எப்படி?
VIT Entrance Exam: விஐடி பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் - ஏப்ரல் 12ம் தேதி வரை நீட்டிப்பு
VIT Entrance Exam: விஐடி பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் - ஏப்ரல் 12ம் தேதி வரை நீட்டிப்பு
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirumavalavan: “நான் தேர்தலில் போட்டியிடவில்லை” - திருமாவளவன் அந்தர் பல்டி - அவரே சொன்ன அதிர்ச்சி காரணம் என்ன?
“நான் தேர்தலில் போட்டியிடவில்லை” - திருமாவளவன் அந்தர் பல்டி - அவரே சொன்ன அதிர்ச்சி காரணம் என்ன?
வேட்பாளர் தேர்வில் சர்ச்சை – கோவையில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு...
வேட்பாளர் தேர்வில் சர்ச்சை – கோவையில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு...
பின்னால வருத்தப்படுவீங்க...ஆதவ் அர்ஜூனாவுக்கு தம்பி ராமையா பதில்
பின்னால வருத்தப்படுவீங்க...ஆதவ் அர்ஜூனாவுக்கு தம்பி ராமையா பதில்
ஏமாற்று கூட்டணி... பொருந்தா கூட்டணி! - புதுச்சேரியில் மோடி, ஸ்டாலினை ஒரே மேடையில் வறுத்தெடுத்த விஜய்!
ஏமாற்று கூட்டணி... பொருந்தா கூட்டணி! - புதுச்சேரியில் மோடி, ஸ்டாலினை ஒரே மேடையில் வறுத்தெடுத்த விஜய்!
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்! பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: யார் யார் வர்றாங்க தெரியுமா?
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்! பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: யார் யார் வர்றாங்க தெரியுமா?
Senthil Balaji: கொங்குவில் எப்பவும் நாங்க கிங்கு... இந்த வாட்டி இன்னும் தட்டி தூக்குவோம் - கரூரில் மாஸ் காட்டிய செந்தில் பாலாஜி
கொங்குவில் எப்பவும் நாங்க கிங்கு... இந்த வாட்டி இன்னும் தட்டி தூக்குவோம் - கரூரில் மாஸ் காட்டிய செந்தில் பாலாஜி
ஐய்யோ, 6 லட்சம் பீப்பாயாச்சே.?! இந்தியா வர இருந்த கப்பல் சீனாவுக்கு திருப்பப்பட்டதா.? மத்திய அரசு விளக்கம்
ஐய்யோ, 6 லட்சம் பீப்பாயாச்சே.?! இந்தியா வர இருந்த கப்பல் சீனாவுக்கு திருப்பப்பட்டதா.? மத்திய அரசு விளக்கம்
Hyundai Offers: ரூ.1 லட்சம் தள்ளுபடி.. Grand i10 Nios முதல் i20 வரை! ஆஃபர்களை அள்ளித் தந்த ஹுண்டாய்!
Hyundai Offers: ரூ.1 லட்சம் தள்ளுபடி.. Grand i10 Nios முதல் i20 வரை! ஆஃபர்களை அள்ளித் தந்த ஹுண்டாய்!
Embed widget